Posts

Showing posts from February, 2026

வாழ்வு பல நிலைப்படும் (Part 1)

Image
                                                                      வாழ்வு பல நிலைப்படும்.       அதாவது பல நிலைகளில் அமையும்.           ஆரம்பத்தில் பெற்றோருடன்  பாதுகாப்பு உணர்வுடன் கூடிய வாழ்வு . இது அலாதியானது. நாமே அறியாமல் வாழ்ந்த ஆனந்த வாழ்வு. வளரும் பருவமாதலால் எல்லாமே புதுமை. இதைப்பற்றி எனது புத்தகங்களில் நிறைய எழுதப்பட்டு விட்டது. எனவே, நகர்வோம்.           அடுத்தது, திருமண வாழ்வு. 1990 மே 14- ம் தேதி; என்னைப் பெண் பார்க்க என் கணவர் குன்னூருக்கு, வீட்டிற்கு வந்தார். வீட்டில் நானும் தங்கையும் மட்டுமே. முன்கூட்டியே  என்னுடைய பழைய கட்டுரை 'நான் அறிந்த சாதியம்' என்பதில் கூறப்பட்டபடி நாச்சியார் மாமியை அழைத்து வந்தாள் தங்கை.      ( கிளைக் கதை- மலை ராணியின் மடியில் பாகம் 4- ல்  ' இந்த மாமி Wellington - ல் இருந...