அறிவியலை வியந்தபோது... ... ...
Science என்பதற்கு அறிவியல் என்று அழகு தமிழ்ச் சொல். (அறிவு+இயல்= அறிவியல்.) சொல் மட்டும் அழகு அல்ல, அறிவியலே அழகுதான். மட்டுமின்றி ஆறுதல்தான். ஆறுதல் தேடி யாரும் science க்குள் செல்வதில்லை. விடைகளையோ, விளக்கங்களையோ தேடிச் சென்று பார்க்கிறபோது அந்த விடைகளும், விளக்கங்களும் கொடுக்கின்ற அறிவு, ஒரு ஆறுதலைத் தருகிறது. அந்த ஆறுதல் அறிவை அறிந்ததால் ஏற்பட்டதா அல்லது தவறான கருத்துகள் நீங்கியதால் ஏற்பட்டதா? Knowledge is power என்று ஒரு saying உண்டு.
அறிவியல் என்பது complicated ஆன விஷயங்களை மட்டுமே உடையதல்ல. அது பல day to day activity - களில் பரந்து கிடக்கிறது. உறைந்து கிடக்கும் பனியின் energy யை உருக்கி ஆவியாக்கினால் அது சமையலுக்கும் உதவும், நீராவி enngine- ஐயும் ஓட வைக்கும் என்பது எளியமையான science என்று எடுத்துக் கொண்டால், ஒரு formula வைப் பயன்படுத்தி குறிப்பிட்ட speed க்கு மேல் ஒரு பொருளை உயரத் தூக்கி எறிந்தால் அது புவி ஈர்ப்பு விசையை மீறி வெளியே சென்றுவிடும் என்பது கடினமான science.
சிக்கி முக்கிக் கற்களை உரசி தீப்பற்ற வைத்த மனிதன் அறிவியலாளன்தான். ஆனால், என்று மனிதன் மரத்திலிருந்து இறங்கி இரண்டு கால்களில் நின்று சுற்றிச் சுற்றிப் பார்த்தானோ அன்றே அவன் அறிவு ஆரம்பமாகி விட்டது. Front limbs ஊன்றத் தேவை இல்லாமல் ஆகி விட்டன. See, this is such a big transformation. அவனால் சுற்றிலும் உள்ள இரைகளையும், ஆபத்துக்களையும் குனிந்த நிலையில் தலையைத் தூக்கிப் பார்க்காமல், நேரடியாகப் பார்க்க முடிந்தது. கைகளும் உதவிக்கு வர, சீக்கிரமே உணவைத் தேடிக் கொண்டான். நிறைய நேரம் மிச்சமானதால் யோசிக்கத் தொடங்கினான். மூளை வளர்ந்தது.
சப்தங்களைக் கொண்டு பேசினான், பாடினான். உடைகளும், ஆபரணங்களும் அணிந்தான். தன்னுடைய குழந்தைகளுக்கு அணிவித்தான். குடும்பம் என்பதை உணர்ந்தான். வரையவும், எழுதவும் கற்றுக்கொண்டான். மற்றொரு முக்கியமான கண்டுபிடிப்பு சக்கரம். தரையில் தரதரவென இழுக்காமல் அழகாக உருண்டு சென்ற சக்கரம் transport- ஐ இலகுவாக்கியது. இப்படி அறிவை படிப்படியாக வளர்த்தெடுத்த மனித குலம் இன்று 21- ஆம் நூற்றாண்டில் வந்து நிற்கிறது.
Stephen Hawking எழுதிய புத்தகமான Brief answers to the Big questions என்பதில் பத்து கேள்விகளுக்கு அளிக்கும் விளக்கத்துடன் கூடிய விடைகள் மிகச் சிறப்பானவை. அதில் முதல் கேள்வி ' Is there a God?' என்பதாகும். மற்றும் இரு கேள்விகள் 'How did it all begin?, What is inside a black hole?' ஆகியவை. இந்த இரு கேள்விகளைக் கொஞ்சம் விரிவாகக் காணலாம்.
புவி ஈர்ப்பு விசை கண்டு பிடித்ததின் வரலாறு அநேகர் அறிவோம். ஆனால், முதலில் புவி நிலவை விலக்குகிறது என்று நினைத்தார்கள். புவி ஏன் நிலவை விலக்குகிறது என்பது அப்போதய கேள்வியாக இருந்தது. பின்னர்தான் நிலவை விலக்கவில்லை; ஈர்க்கிறது என்பது அறியப் பட்டது. பாருங்கள், தவறான புரிதலைத் திருத்திக் கொள்ள முடிகிறது. இதுதான் அறிவியலின் உன்னதம்.
இந்த ஈர்ப்பு விசை என்பது எடைக்கு ஏற்ப அமைகிறது. பூமி ஒரு கோள், நிலவு ஒரு துணைக் கோள், ஜூபிடர் ஒரு கோள். இம்மூன்றின் ஈர்ப்பு விசைகளை compare செய்வோம். எடை குறைவான நிலவில் நின்று நாம் குதித்தால் கீழே வர சற்று நேரம் பிடிக்கும். பூமியில் நின்று நாம் குதித்தால் அதை விட விரைவாகக் கீழே வந்து விடுவோம். ஆனால் எடை அதிகமான ஜூபிடரில் நின்றால் காலைத் தூக்கவே முடியாது. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் எடை அதிகரிக்க அதிகரிக்க ஈர்ப்பு விசை அதற்கேற்ப அதிகரிக்கிறது. இதை மனதில் வைத்துக் கொண்டு கருந்துளை ( black hole) என்பது என்னவென்று காண்போம்.
18- ஆம் நூற்றாண்டின் இறுதியில் மர்மமான முறையில் வானில் பறந்து கொண்டிருந்த விமானங்கள் மறைந்தன. சில கோள்களும் கூட மறைந்து விட்டதாக சொல்லப் பட்டது. இந்த மர்மத்தைக் குறித்து ' dark star', என்று ஒன்று இருப்பதாக 19- ஆம் நூற்றாண்டில் ஒரு விஞ்ஞானி கூறினார். Black hole என்பதைத் தெளிவாக விவரித்தது 20- ஆம் நூற்றாண்டில்தான்.
Star அதாவது நட்சத்திரம் அண்டவெளியின் வாயுக்கள் ஒன்றை ஒன்று ஈர்த்து ஒருங்கிணைவதால் உண்டாகிறது. இலட்சக் கணக்கில் நட்சத்திரங்கள் இருப்பதை நாம் அறிவோம். நம் பூமிப்பந்து சுற்றிவரும் சூரியனும் ஒரு நட்சத்திரமே. நட்சத்திரங்களில் நிறைந்துள்ள வாயுக்களின் இடையறாத இயக்கமே, அவற்றின் வெப்பத்தையும், ஒளியையும் உருவாக்குகிறது. அனைத்து celestial bodies- க்கும் ஈர்ப்பு விசை உள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் வாழ்க்கைக் காலம் உள்ளது. அது இயங்கி இயங்கி energy யை சிறிது சிறிதாக இழக்கிறது.மற்றும் தனக்குத் தானே உள்ளிழுத்து சுருங்கி விடுகிறது. அப்படி ஆனதும் அதன் ஈர்ப்பு விசை மிகவும் அதிகமாகி விடுகிறது. தன்னுடைய குறிப்பிட்ட ஈர்ப்பு எல்லைக்குள் வரும் அனைத்தையும் அது இழுத்துக் கொள்கிறது.
1967- ம் ஆண்டில்தான் John Wheeler என்பவர் Black hole என்று பெயரிட்டார். கருந்துளை என்பது தமிழ் மொழிபெயர்ப்பு. இது ஒரு misnomer . ஏனெனில் அது கருப்பாகவும் இல்லை; அது ஒரு துளையும் இல்லை. வாழ்க்கைக் காலம் முடிந்த அல்லது இறந்த நட்சத்திரங்களின் remnant தான் கருந்துளைகள். ( பார்க்கப் போனால், நட்சத்திரங்கள் எரிபொருள் தீர்ந்தபின் மூன்று வித உருமாற்றம் கொள்கின்றன. 1. கருந்துளைகள், 2. வெள்ளைக் குள்ளன்கள், 3. நியூட்ரான் நட்சத்திரங்கள்.)
பின் ஏன் கருந்துளை என்று பெயர் பெற்றது? முன்னர் குறிப்பிட்ட ஈர்ப்பு விசை அளவில் இருக்கும் வேறுபாட்டால் நிலவு, பூமி, ஜூபிடர் ஆகியவற்றில் காலைத் தூக்குவது பற்றி மனதில் கொள்ளவும். கருந்துளையின் ஈர்ப்பு விசை மிக மிக அதிகமாக இருக்கிறது. எவ்வளவு அதிகம் என்றால் அது தன்மீது விழும் ஒளியைக் கூட உள்ளே இழுத்துக் கொள்கிறது! சற்றே மேற்பரப்பில் பிரதிபலிக்கும் ஒளி கூட, அதீத ஈர்ப்பு விசையால் மறுபடியும் உள்ளிழுக்கப் படுகிறது மற்றும் reflect ஆகும் சில ஒளிக் கற்றைகள் - observing telescope க்கு சுலபமாகத் தெரிவதில்லை. அதனால் அது இருட்டாக இருக்கிறது.
இப்படிப் பட்ட கருந்துளைகள் மில்லியன் கணக்கில் உள்ளன. கருந்துளைகள் நட்சத்திரக் கருந்துளைகள் மட்டும் அல்ல. இன்னொரு வகையும் உண்டு. இவை விண்மீன் திரள்களின் மையங்களில் காணப் படுகின்றன. (Supermassive black holes)
அருகில் வருவதையெல்லாம் விழுங்கிக் கொள்ளும் இந்த விபரீத கருந்துளை, எடை அதிகரித்து அதிகரித்து, அழுத்தம் தாங்காமல் வெடித்துச் சிதறுகிறது; அல்லது ஒன்றுடன் ஒன்று மோதி. இது Big Bang ( பெரு வெடிப்பு) எனப்படுகிறது.
இப்படிப்பட்ட ஒரு பெரு வெடிப்புதான் உலகத்தின் காலத்தின் ஆரம்பம்!.


Comments
Post a Comment