குரங்குகள், பாடல்கள், குழந்தைகள்

        முதல் இரண்டு புத்தகங்களுக்குத் தலைப்பு வைக்க யோசித்தது போன்று இதற்கும் யோசித்தேன்; மற்றும் காரணம் கூற விரும்பினேன்.  Blog postகள் எழுதிக் கொண்டிருக்கும்போதே தங்கையும்,குழந்தைகளும் தலைப்பு என்னவென்று கேட்டனர்.  இந்தப் புத்தகத்தில் மருத்துவக் கல்லூரி பற்றி - (குரங்குகள் போலே, மரங்களின் மேலே), பாடல்களைப் பற்றி, குழந்தைகளைப் பற்றி கட்டுரைகள் இடம் பெறுவதால் எல்லாவற்றையும் combine பண்ணி, 'குரங்குகள், பாடல்கள், குழந்தைகள்' என்று பெயர் வைத்தேன்.
தலைப்பை ,' குரங்குகள், பாடல்கள் மற்றும் குழந்தைகள் ', என்று வைப்பதே சரியான இலக்கணம்.  ஆனால் 'மற்றும்' என்று இடையில் வைப்பது அவ்வளவு நயமாக இல்லாததுபோல் தோன்றியது.  எனவே, அதை skip பண்ணி விட்டேன். இப்போது 'இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ,... ' என்கிற கண்ணதாசனின் ' நிழல் நிஜமாகிறது ' படப் பாடல் நினைவுக்கு வருகிறது. சற்றே இலக்கணம் மாறுவது இலக்கியம் ஆகிறதா? இதை ஆராயப் போனால் track மாறிவிடும். எனவே, வாருங்கள், புத்தகத்திற்குள் போவோம். ... ...  


          

Comments

Popular posts from this blog

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

சில பாடல்களின் தாக்கங்கள்

மழை விட்டும் தூவானம் விடவில்லை