College 4 ( குரங்குகள் போலே மரங்களின் மேலே... ... ...)
குரங்குகள் போலே மரங்களின் மேலே . .....
மேற்கண்ட phrase, ' பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித் திரிந்த பறவைகளே, பிரிந்து செல்கின்றோம், நாம் பிரிந்து செல்கின்றோம் ',என்ற திரைப்படப் பாடலில் வருகிறது. அநேகமாக எல்லா கல்லூரிகளிலும் farewell party - யின் போது இப்பாடல் பாடப்படும். ரொம்ப emotional - ஆன பாட்டானதால் சிலபலர் அழவும் செய்வார்கள். இந்த song காலேஜ் இறுதியில்தான் வரவேண்டும். ஆனால் இந்தத் தலைப்பை இங்கே கொடுத்ததினால் பாடல் பற்றி mention பண்ண வேண்டியதாயிற்று.
College part 3 யில் குறிப்பிட்டிருந்த படி Hostel day, welcome party, farewell party போன்ற விழாக்களின் போது 'அவுத்து விட்ட மாதிரி' ஆகி விடுவோம். இப்படி ஒரு function போது மரத்தின் மீதேறி ஃபோட்டோ எடுத்தோம். So, ' குரங்குகள் போலே மரங்களின் மேலே' என்பது சரிதானே?
மற்றபடி கல்லூரி நாட்களில் normal routine. Study holidays - ன் போதும், தேர்வு நேரங்களிலும் படிப்பைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஒரு நைட்டியையும் கொண்டையையும் போட்டுக் கொண்டு எந்நேரமும் படிப்புதான். இடையில் மாறுதலுக்காக ரொம்பக் கொஞ்சம் entertainment.
Hostel- mess -க்குப் பின் புறம் ஒரு பெரிய, நன்கு படர்ந்த நகாப்பழ மரம் இருந்தது. நிறைய பழங்கள் இருக்கும். Mess - ல் வேலை செய்பவர்களில் யாராவது ஒருவரைக் கூப்பிட்டு மரத்தைப் பிடித்து சற்றே பலமாக உலுக்கச் செய்வோம். கீழே விழும் பழங்களை ஒரு தட்டில் collect செய்து, உப்பு தூவி சாப்பிடுவோம். ஒரு முறை கொய்யாக்காய் ஒன்றைக் கையில் வைத்துக் கத்தியால் வெட்ட, உள்ளங்கையில் வெட்டி விட்டது. Hospital- க்கு சென்றபோது surgery sir, முதலிலேயே வந்திருந்தால் suture போட்டிருப்பேன், இப்போது injection TT (Tetanus toxoid ) மட்டும் போதும் என்றார். நல்லதாகப் போயிற்று, தையல் ( suture ) போடுவதிலிருந்து தையல் (நான்) தப்பித்தேன்!
எங்கள் கல்லூரியில் நாங்கள் சேர்ந்ததிலிருந்து எங்கள் hostel- ல் hostel day, girls - க்கு மட்டும் தனியாகத்தான் நடந்தது. ஆனால் lady guest- களைக் கூப்பிட்டுக் கொள்ளலாம். Food- க்கு மட்டும் கூடுதலாக பணம் கட்டி விட வேண்டும். Hostel ,three floors கொண்ட செவ்வக வடிவ கட்டிடம். கட்டிடத்தின் உட்புறமாக நீள் செவ்வக space விடப்பட்டிருக்கும்.ஒரு ground போல. இந்த இடத்தில்தான் stage போடப்பட்டு function நடக்கும். வரவேற்பு, பேச்சு, கலைநிகழ்ச்சிகள் ஆகியன முடிந்தபின் dinner மற்றும் orchestra . முக்கியமாக Cheran Orchestra வைத்தான் கூப்பிடுவோம் ( அப்போது அது famous. Cheran Transport Corporation- ஐச் சேர்ந்தது என்று நினைக்கிறேன்). நடனமும் ஆடுவோம்.
எங்கள் class- உடன் tour சென்ற இடங்கள்- மலம்புழா, Bangalore மற்றும் கொடைக்கானல் . மலம்புழாதான் first tour. Dam மேலிருந்து குறுகலான படிகளின் வழியாக ஆண் மாணவர்களின் பாதுகாப்புடன் கீழிறங்கி வந்தோம். பார்க் சுற்றிப் பார்த்தோம்.ஆனால், யட்சியை சென்று பார்க்கவில்லை. Bangalore- ல் evening shopping - ம் அது போலவே. Boys துணைக்கு வந்தனர். பெரிதாக ஒன்றும் வாங்கவில்லை.வரும் வழியில் Hogenakkal வந்தோம். பரிசலில் பயணித்தபோது பரிசல் ஓட்டி பரிசலை சுற்றச் செய்தார்.
கொடைக்கானலில் இயற்கையுடன் நடந்தோம். படகில் சென்றோம். சிறிய மலைக் கடையில் விற்பவராகவும், வாங்குபவராகவும் photo எடுத்தோம்.
And also educational visits to Siruvani dam & Viscose factory Sirumugai. சிறுவாணியில் தண்ணீருக்கிடையில் இருக்கும் கற்களின் மேல் heels போட்டுக் கொண்டு நடந்ததும், மேட்டுப் பாளையம், சிறுமுகையில் மண்டையில் பட்ட வெயில் தாங்க முடியாமல் தலைக்கு முக்காடு போட்டுக் கொண்டதும் ஞாபகத் துளிகள்.
இவை மட்டுமின்றி Nilgiris ( இதைப் பற்றி எழுதியாகி விட்டது ), சேலம் , SPM (Social and Preventive Medicine) tour- ல் Goa ஆகிய இடங்களுக்கு girls மட்டும் சென்றோம். SPM Goa tour- West Coast Express train- ல் Mangalore சென்றோம். Beach பார்த்துவிட்டு அங்கே night stay. மறுநாள் காலை பஸ்ஸில் Goa கிளம்பினோம். பஸ்ஸில் பயணித்தபோது ரோட்டின் ஒருபுறம் அரபிக் கடல்; மறுபுறம் ஆறு. SPM department- Entomology tutor ஐ உடன் அனுப்பி வைத்தனர். அவர் மட்டுமே ஆண். யாருடனும் அதிகம் பேசக்கூட முடியாது. பஸ்ஸில் girls எல்லாரும் இடைவிடாது பேசிக் கொண்டும், சப்தமிட்டுக் கொண்டும் இருந்தனர். அப்போது அவர் ' ரஷ்யாக்காரங்க ரொம்ப பேச மாட்டாங்க. அதனாலதான் குண்டா இருக்காங்க ' என்று சொல்லி நாங்கள் பேசிக்கொண்டே இருப்பதாகத் திட்டினார். இடையில் உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு ஒரு visit. அங்கு (உ)ருசியான லட்டு சாப்பிட்டோம். கோவாவில் சில நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்தது இனிமை. Enjoying beaches, other site seeing, shopping etc.
இறுதியாண்டு படித்த சமயம், final year exams- க்கு முன்பதாககல்லூரயில் ஒரு பிரிவு உபசார விழா கொடுத்தனர். சில மாணவர்கள் சக மாணவர்களைக் கட்டிப் பிடித்து அழுததை, என் தோழி வசந்தி சுட்டிக் காட்டினாள்.( இதில் என் classmate- இஸ்மாயிலும் உண்டு. இஸ்மாயில் என் உறவினரும் கூட) .
எங்கள் hostel- இல் எங்களுக்கு farewell party கொடுத்தார்கள். இது கல்லூரி பிரிவு உபசார விழாவிற்கு முன்பதாகவே நடந்தது.எல்லோரும் பட்டுப்புடவை அணிந்தோம். எல்லோருக்கும் கையில் ஒரு விளக்கு (அகல் விளக்கு?) கொடுத்து ஒளி மயமான எதிர்காலத்திற்கு வாழ்த்தினார்கள். அத்துடன் functions முடிவுக்கு வர, பின்னர் study holidays and final exams தான்.

.jpg)



Comments
Post a Comment