தலைப்பிடாமலே சில

                  


                 1. சில நேரங்களில் சில மனிதர்கள் என்பது   எழுத்தாளர் ஜெயகாந்தனின் புத்தகம். இது  Lakshmi, Srikanth ஆகியோர் நடிப்பில் திரைப்படமாகவும் எடுக்கப் பட்டது. இந்தத் தலைப்பினை ஒட்டி ஒரு தலைப்பாக  'சில சமயங்களில் சில விஷயங்கள் 'என்ற phrase  எனக்கு பிடித்திருந்தது. நாம் பார்க்கிற, கேட்கிற, சிந்திக்கிற தெரிந்து கொள்கிற, அறிந்து கொள்கிற அனைத்தையும் ஏதோ ஒரு தலைப்பினிற்குள்ளே கொண்டுவர  இயலாது. ஆகவே தலைப்பிடாமலேயே சிலவற்றை பேசித்தான் ஆக வேண்டி இருக்கிறது. இதைத்தான் எழுத்தாளர் சுஜாதா 'கற்றதும் பெற்றதும்'  என்று குறிப்பிட்டு பல அனுபவங்களை, அறிவுகளை தெரிவிக்கிறார்.  

    எழுதுவதைப் பற்றி பேச்சு வந்தபோது நான் என் கணவரிடம் எனக்கு Sidney Sheldon , Jeffrey Archer, Chase, Dan Brown இது போன்ற ஆங்கில writers நடை பிடிக்கும் .ஆனால் இந்திய இங்கிலீஷ் writers- இன் நடை பிடிக்காது (ஒரு எழுத்தாளரின் பெயரையும் கூறினேன் ) ,எழுதணும்னா அப்படி எழுதணும் என்று பேசியபோது அவர் , குறிப்பிட்ட அந்த இந்திய இங்கிலீஷ் எழுத்தாளரும் எழுதிக் கொண்டு தானே இருக்கிறார் என்றார். எனவே நானும் என்னுடைய பாணியில் simple- ஆக எழுதலாம் என்று நினைத்துக்  கொண்டேன் . அப்போது Facebook lite என்று ஒன்று வந்தது . Lite for light என்று நினைக்கிறேன். என்னுடைய பெயருடன் lite என்பதை இணைத்து Siralite.blogspot.com என்று தொடங்கினேன். அதில் பிரசுரித்த post களுக்கு வரவேற்பு கிடைத்தது. பிறகு அந்த postகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட சூழ்நிலை அமைந்தது. இப்பொழுதும் சிறு சிறு postகளாக blog எழுதித்தான் அதன் பின்னர் அதை புத்தகமாக மாற்றுகிறேன்.  அவ்வாறன்றி புத்தக format-  ல் word document ஆக எழுத எனக்கு interest இல்லை. அது என்னவோ ரொம்ப சப்பையாக இருப்பது போல் தோன்றுகிறது.

              2. காதல் பல விதம்,  அதாவது அன்பு பல விதம் - காதல் என்பதும் அன்பு என்பதும் நேசம் என்பதும் மனதில் ஏற்படும் பிரியம் அல்லது பற்று அல்லது ஆசைக்கு இடப்பட்ட புறப்பெயர்கள்தான். Simple - ஆக 'ரொம்பப் பிடிக்கும்' என்பதும் இதுதான். ' இருவர் உள்ளம் ', என்கிற பழைய தமிழ்த் திரைப்படத்தில் வரும் 'பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம், பாடல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் ' என்ற பாடல் தனக்குப் பிடிக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். தற்போது சில வருடங்களுக்கு முன் வெளிவந்த Bachelor தமிழ்த் திரைப்படத்தில்  ' பட்சிகளாம் அம்மா பறவைகளாம், தத்தினம் தை தை, பறவைகளாம், சொல்லம்மா சொல்லு, பலவிதமாய் வந்தி..றங்குதம்மா' என்று ஒரு பாடல் உள்ளது.

      ஆனால், இங்கு நான் பறவைகளின் அல்லது பாடலின் பல விதங்களைப் பற்றி அன்றி, காதலின் அல்லது அன்பின் பல விதங்களைப் பற்றி பேசப் போகிறேன். காதல் என்ற சொல்லைப் பிரயோகித்தாலே  அநேகருக்கு உடனடியாகத் தோன்றுவது ஆண் பெண் இனக்கவர்ச்சி சம்பந்தப் பட்டதுதான். அவ்வாறு அன்று. 

       ' எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா ' என்கிறார் பாரதியார்.                  ' அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப் பல பல நல்லழகுகள் சமைத்தாய் ' எனகிறார். ஆம், உலகம் வர்ணக் களஞ்சியம்தான். இதில் பார்க்கும், கேட்கும், முகரும், ருசிக்கும், உணரும் அனைத்தின் மீதும் காதல் கொள்ளலாம். So, காதல் என்பது ஐம்புலன்கள் சம்பந்தப் பட்டது. 

        நம்மைச் சுற்றி உள்ள மனிதர்களில், நம் இரத்த பந்தத்தினரில் சிலரை நாம் பெரிதும் நேசிக்கிறோம். சிலரை நினைத்துக் கண் கசிகிறோம்.ஒரு ரோஜாப் பூச்செடியில் அழகாகப் பூ மலர்வது கண்டு உவகை கொள்கிறோம். ஒரு சுவையான பிரியாணியை, ஜிகர்தண்டாவை வாய் மகிழ ருசிக்கிறோம். இதோ, எழுதிக் கொண்டிருக்கும்போதே வெளியே வானத்தில் செல்லும் flight- ன் ர்ர்.. என்ற ஓசை காதில் விழ அதையும் ரசிக்கிறோம். வாசனைகளை முகர்ந்து புளகாங்கிதம் அடைகிறோம். அது மல்லிகைப்பூ மரிக்கொழுந்து மணத்திலிருந்து அடித்துக் கொள்ளும் perfume ஆகவோ கொய்யா மா பலா வாசனையாகவோ இருக்கலாம். குளிர் காலத்தில் உடலில் படும் சூரியனின் கதிர்கள் தரும் வெப்பத்தையும், வெயில் காலத்தில் உடலைத் தழுவிச் செல்லும் தென்றல் தரும் குளுமையையும் தொடு உணர்வின் மூலம் அனுபவிக்கிறோம். ஆனால்,

            எல்லாவற்றையும் விட கடினமானதும், கொடூரமானதும் ஆண் பெண் இனக்கவர்ச்சி சம்பந்தப் பட்ட காதல்தான். உயிரினில் இனிக்கும் காதல் உயிரினை எடுக்கும். மெலிதாக மென்மையாக துவங்கும். முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கும். ஆணுக்குப் பெண் எப்படி பலவீனமோ, அது போலவே பெண்ணுக்கு ஆணும் பலவீனம்தான். 

          ' மோகத்தைக் கொன்று விடு ; அல்லால் என்றன் மூச்சை நிறுத்தி விடு ' இதுவும் பாரதி சொன்னதுதான். பாரதியாரின் எள்ளுப் பேரனனான நிரஞ்சன் பாரதி  மேற்கண்ட வரிகளை உவந்து கூறுகிறார்.' எப்பேர்ப்பட்ட ஒரு தவிப்பு அந்த மனுஷனுக்கு இருந்துருக்கு, இப்படிக் கதற்றாரே ' என்கிறார். இந்த மோகம் என்பது எப்போது எப்படி யாரிடம் வரும் என்பது ரகசியமே. எனினும் இது முறைப் படுத்தப்பட வேண்டியது. இது முறையானதா இல்லையா என்பது காதல் அல்லது மோகம் கொள்ளக்கூடிய அளவு யோசனை உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியாமல் இல்லை. இதில் சமூக, பொருளாதார காரணங்களும் அடங்கும். இருப்பினும், முறையான காதலை மேற்கொள்பவர்கள் அநேகம்பேர் அதனை அடைந்து வாழ்கின்றனர். அல்லாதவர்கள் துன்புற்று அல்லலுருகின்றனர். ' மனம் ஒரு குரங்கு, மனித மனம் ஒரு குரங்கு, அதைத் தாவவிட்டால், தப்பி ஓடவிட்டால் நம்மை பாவத்தில் ஏற்றிவிடும் ' என்று ஒரு பாட்டு உள்ளது. So, மனம் என்னும் குரங்கு தவறு வேண்டி ஆசைப் படக்கூடும். இது யாருக்கும் ஏற்படலாம். அதைத் தாவவிடாமல், தப்பி ஓட விடாமல் பார்ப்பதே திறமை.

             3.  ஒருமுறை என் கணவரின் நண்பர் ஒருவர் ,  ரொம்ப வேலை திரும்ப திரும்ப செஞ்சு- ஆரோக்கியமும் குறைந்து- சிரமம் என்றபோது நான் சலிப்பு என்று சொன்னேன். வயதும் ஆகி saturate ஆகி விட்டதே! அப்போது கால்வலியும் இருந்தது. 'ஒரு பாடல் இருக்கிறது ' வேலை செய்ய சோம்பல் தரும், வீட்டில் கூட வெறுப்பு வரும், வேதனையில் மலரும் பூ என்ன பூ? - என்ற கேள்விக்கு விடையாக வருவது சலிப்பு ', என்று கூறினேன். 'இது என்ன பாட்டு?' என்று என் husband இடம் கேட்க, அவர் ' ஒரு ஜெமினி படம், பழைய படம்', என்று பதிலளித்தார். அந்தப் படத்தின் பெயர் ' குலவிளக்கு'.

                 4.  'தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்'- என்பது குறள். இதைச் சொன்ன வள்ளுவரே , 'பொம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த  நன்மை பயக்கும் எனின்' என்று சொல்கிறார்.

          பொய் சொல்லலாமா, வேண்டாமா? அது சூழ்நிலையைப் பொறுத்தது. அல்லவா? இருப்பினும்,

           என்னுடைய ப்ளாக் எழுதும்போது முடிந்தவரை எனக்கு சரிதானா  என்று  சந்தேகம் தோன்றும் கருத்துக்களை நான்  check செய்து தான் எழுதுவேன். இல்லாவிட்டால் மேல் சொன்ன, ' தன்நெஞ்சறிவது பொய்யற்க' குறளைப்போல் ஆகிவிடும் அல்லவா?

Comments

Popular posts from this blog

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

சில பாடல்களின் தாக்கங்கள்

மழை விட்டும் தூவானம் விடவில்லை