வாழ்வு பல நிலைப்படும் (Part 1)

                          

           

                               வாழ்வு பல நிலைப்படும்.

      அதாவது பல நிலைகளில் அமையும். 

         ஆரம்பத்தில் பெற்றோருடன்  பாதுகாப்பு உணர்வுடன் கூடிய வாழ்வு . இது அலாதியானது. நாமே அறியாமல் வாழ்ந்த ஆனந்த வாழ்வு. வளரும் பருவமாதலால் எல்லாமே புதுமை. இதைப்பற்றி எனது புத்தகங்களில் நிறைய எழுதப்பட்டு விட்டது. எனவே, நகர்வோம்.

          அடுத்தது, திருமண வாழ்வு. 1990 மே 14- ம் தேதி; என்னைப் பெண் பார்க்க என் கணவர் குன்னூருக்கு, வீட்டிற்கு வந்தார். வீட்டில் நானும் தங்கையும் மட்டுமே. முன்கூட்டியே  என்னுடைய பழைய கட்டுரை 'நான் அறிந்த சாதியம்' என்பதில் கூறப்பட்டபடி நாச்சியார் மாமியை அழைத்து வந்தாள் தங்கை.

     ( கிளைக் கதை- மலை ராணியின் மடியில் பாகம் 4- ல்  ' இந்த மாமி Wellington - ல் இருந்து வழித்துணையாக வந்ததுபோல் இன்னொரு கட்டத்திலும் துணையாக இருந்திருக்கிறார்கள். அது என்னவென்று பின்னர் சொல்கிறேன் ', என்று குறிப்பிட்டு உள்ளேன் . அவர்தான் இவர். அந்தக் கட்டம்தான் இந்தப் பெண் பார்க்கும் படலம். )

          நான் புடவை கட்டி, ear drops , heels , முகத்திற்கு cream ஆகியன போட்டு ready ஆவதற்குள் மாமியும், தங்கையும் வந்தவர்களுக்கு  snacks, tea, milk  முதலானவை கொடுத்து உபசரித்திருந்தனர். தனியாகப் பேச வேண்டும் என்று மாப்பிள்ளை விரும்பியதால் சற்று நேரம் பேசினோம். பின்னர் அவர்கள் கிளம்பிச் சென்றனர். ஒரு மாதம் முடிவதற்குள்ளாகவே (ஜூன் 10) நிச்சயம் . 23 September 1990- ல் திருமணம்.  ஆசைப்பட்டு நுழைந்ததுதான் இந்தத் திருமண வாழ்வு. இதில் நுழைந்தது என்று சொல்வது கூட்டுக் குடும்ப மாமியார் வீட்டையும் சேர்த்துத்தான்.

             முன்னரே முடிவெடுத்திருந்தபடி,  31st January 1991 அன்று Pasteur Institute job- ஐ resign பண்ணிணேன்.  அச்சமயம் Institute Office -ல்  இருந்த கணேசன் என்பவர் வேறு ஏதாவது job கிடைத்து விட்டதா?, ஒரு காலை வைத்த பின்தான் அடுத்த காலை எடுக்க வேண்டும் என்று கூறினார். 

         (கிளைக் கதை- இவரின் மனைவியிடம்தான் சிறிது காலம் ஹிந்தி கற்றுக் கொண்டேன்.  ' அ ஆ இ ஈ உ ஊ க்ரு ஏ ஐ ஓ ஔஅம் அஹ',  ' க க க க ங ....' என்ற வரிசையில் வரும் எழுத்துக்களையும், பின்னர் உரை நடை கொஞ்சம் grammar முதலியவையும் கற்றுக் கொண்டேன்.  'ஏக் காவ் மே ஏக் கிஸான் ரஹ்தா தா' என்பதை ஹிந்தி (தேவநாகரி) லிபியில் எழுதத் தெரியும்.  வார்த்தைகளின் மேலே கோடு போட்டு எழுதுவது பிடித்திருந்தது. ஆனால், எதனாலோ ஹிந்தி கற்பதற்கு அதிக ஆர்வம் ஏற்படவில்லை.)

          திருமண வாழ்வின் தனிக்குடித்தன வாழ்க்கை ஈரோட்டில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோபிசெட்டிபாளையம் என்ற ஊரில் அமைந்தது. அங்குதான் எனக்குக் குழந்தைகள் உண்டாகினர். முதல் வீடு  Mr.பழனிசாமி, Mrs.ரங்கநாயகி teacher ஆகியோரின் வீட்டின் ஒரு portion. அவர்கள் ரொம்ப friendly. 3 அறைகள்தான். சிறிய அழகிய வீடு. அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.என் first baby குழந்தையாக இருந்தாள். அவர்கள் வீட்டுப் பெண் பூரணி மற்றும் இதர குழந்தைகளுடன் என் குழந்தையை எடுத்துக் கொண்டு park- க்குச் சென்றோம்.  பலூன் எல்லாம் வாங்கி விளையாட வைத்தாள் பூரணி.

                                                    

         கொஞ்சம் மாதங்களுக்கு முன்பு என் college senior அக்காவின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர்களை சந்தித்தோம். நான் கொஞ்சம் simple ஆக உடையணிந்து சென்றிருந்தேன். அடுத்த நாள் phone செய்த teacher, ஏன் simple ஆக வந்திருந்தேன்,  ஏன் ஆரம் ( haaram- long neck ornament) அணியவில்லை என்று விசாரித்தார்கள்.

                                                                  


                                              

                               இரண்டாவது குழந்தை பிறந்தபோது கோபியிலேயே, ' திருநகர்' என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்துக் கொண்டிருந்தோம். என்னை ஆரம்பமுதல் இறுதிவரை எல்லா நேரங்களிலும் support பண்ணிய ஒரே ஜீவனாகிய என் தாய் தன்னுடைய 53 வது வயதில்  யாரும் எதிர் பாரதவிதமாக இயற்கை எய்திவிட, எனக்கு அது ஜீரணிக்க இயலாத பேரிடியாக ஆனது. பாருங்கள், கையில் இரண்டு குழந்தைகள். அதில் ஒரு குழந்தை கைக்குழந்தை . சீதாலக்ஷ்மி hospital- ல் வேலைக்கு சேர்ந்தேன்.  ஒரு, ஒரு வருடம் அழுதும்,  ஏங்கியும் suffer ஆன பின்னர்தான் துயரத்தில் இருந்து வெளியே வந்தேன். ஆனால் children, house- hold and professional work- இவற்றிற்கு எந்தக் குறையும் வைக்கவில்லை.

          பின்னர் ஆப்பக்கூடல், பவானி ஆகிய ஊர்களில் வீடு மாற்றி, ஈரோட்டில் சொந்த வீடு கட்டினோம். அப்போது என் பெரிய மகளுக்கு பத்து வயது, சிறிய மகளுக்கு ஏழு வயது. ( running age ). அவர்கள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பியது, அந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை '  2 C , ரோஜா நகர் '  என்னும் தொடர்  பதிவில் எழுதியுள்ளேன். 

               இந்த காலகட்டங்களில்தான் ground floor interior வேலைகள் முடித்தோம். First floor கட்ட ஆரம்பித்தோம்.  மேலே இரண்டு அறைகளும் கூடவே வாடகைக்கு விடுவதற்கு ஒரு portion- ம் கட்டினோம். இரண்டு அறைகளுக்கும் இரண்டு colour theme. ஒன்று green இன்னொன்று blue .முழுவதுமாக கட்டி முடியுமுன்பே எனக்கு Saudi Arabia செல்ல வேண்டி ஏற்பட்டது.  அது  ENT Doctorஆக Saudi Government- ல்  கிடைத்த வேலைக்காக. அந்த offer - இலேயே free family visa, free flight tickets for family ஆகியன இருந்ததால் , ( அங்கு குடும்பத்தினருடன் தங்குவதற்கு two bedrooms உடன் கூடிய free family flat - ம் கிடைத்தது ) அந்த வாய்ப்பை உபயோகமாக use பண்ண முதலிலேயே plan பண்ணினோம் . அப்படிச் சென்றபோது , நான் திரும்பி வரும் வரை என் அப்பாவும், சித்தியும் உடனிருந்தது மிகமிக உதவியாக இருந்தது.

    குடும்பத்தினரை Saudi Arabia விற்கு வரவழைத்தது பற்றிய தகவல்கள் ' Away from India ', தொடரில் எழுதி விட்டதால் அதை skip செய்து விடலாம்.

      வாழ்வின் அடுத்த நிலைகள்  மாறுபட்ட சூழ்நிலைகளைக்  கொண்டவை. ஆதலால் அடுத்த போஸ்ட்டில் எழுதுகிறேன்.

Comments

Popular posts from this blog

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

சில பாடல்களின் தாக்கங்கள்

மழை விட்டும் தூவானம் விடவில்லை