Posts

வாழ்வு பல நிலைப்படும் ( Part 2)

Image
                           வாழ்வின் அடுத்த நிலை குழந்தைகள் பெரியவர்கள் ஆனபின் ஏற்படும் challenging ஆன நிலை. 'தோளுக்கு மிஞ்சியவன் தோழன்' என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது, உன் குழந்தை உன் தோளின் உயரத்தைவிட அதிகமாக வளர்ந்து விட்டால் உன் தோழனாக நடத்து என்பது பொருள். இந்த transition period  பெற்றோருக்கும் கடினம் ; குழந்தைகளுக்கும் கடினம்.             நாமும் இந்தக் கட்டத்தைக் கடந்துதான் வந்திருக்கிறோம். ஒரு காலகட்டத்தில் பெற்றோருக்கு மனக்கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறோம். அது சரியா தவறா என்றுகூட இன்றுவரை புரியவில்லை. அப்பேர்ப்பட்ட ஒரு காலகட்டம் குழந்தைகள் வளர வளர, அவர்களாக உலகத்தைப் புரிந்து கொள்ளவும், தானாக சிந்திக்கவும்,  independant ஆக உணரவும் தலைப்பட்டபோது ஏற்பட்டது. அதை சிக்கலாக்காமல் நகர்த்திச் செல்வது பெற்றோரின் கடமை; திறமை.           படித்துப் பெரியவர்களாக ஆகிக் கொண்டிருக்கும் நேரத்தில் என் முதல் பெண் ' பெரியவள்' ஆனாள்.  அதற்கு ' சீர்' எனப்படும் விழாவை ...

Gen Alpha [ குழந்தைகளின் குழந்தைகள் ]

Image
                                                          Gen Alpha (Generation Alpha) எனப்படும் மனிதர்கள் 2010 - இலிருந்து 2024 வரை பிறந்த குழந்தைகள். இவர்கள் அதிகம் technologyவாசிகளாக இருப்பார்கள். இவர்களின் உலகம் சற்று மாறுபட்டதாக இருக்கும் என்பதால், இவர்களை கிரேக்க எழுத்தின் ஆரம்பத்திலிருந்து ஆல்ஃபா தலைமுறை என்று குறிப்பிடுகின்றனர். இந்த genaration alphaக்களின் காலம் இன்னும் உசிதமான, அதாவது வளர்ந்த கட்டத்துக்கு வரவில்லை.              அடுத்த எழுத்தைப் பெயராகக் கொண்ட தலைமுறையும் தொடங்கி விட்டது. அதாவது பீட்டா தலைமுறை- Generation Beta. 2025- ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி 12.03 am- ல் (00.03 in 24 hour time) ஜென் பீட்டாவின் முதல் குழந்தை  இந்தியாவில் மிசோரம் மாநிலத்தில் பிறந்து விட்டது. அது போலவே Australia- வின் New South Wales - ல்  just after midnight on 31st December 2024 ஒரு குழந்தை பிறந்ததாக ஒரு ...

Come on, let us wear ... ...

Image
                                     Right from birth             A human is born naked, but what he/she wears throughout the lifetime is astonishing to notify, if it is thought about who we were ,our ancestors were and what was the lifestyle centuries ago.           The wearing items range from diaper to name tags, tie to shoes, jewellery to winter clothes and waist belt to contact lenses. Innumerable and diverse varieties and variations.       There is a quote that, 'you are never fully dressed unless you wear a smile'. But, I don't go with that. There are times you do not have to wear a smile.      In this post, I write about some dresses and ornaments that gave some memories. Surely, for anyone, the dressings thought about brings the memories of occasions and the people associated with those occasions...

செல்வத்துள் செல்வம்

Image
                     ' செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்                                       செல்வத்துள் எல்லாம் தலை'  என்கிறார் திருவள்ளுவர்.  ஒரு ENT specialist ஆன நான் இந்தத் திருக்குறளைக் கொண்டாடவில்லையென்றால் வேறு யார் கொண்டாட முடியும்? எனவே,                            எங்கோ கேட்கும் அரசியல் பேச்சாளரின் வார்த்தைகள் முதற்கொண்டு சமையல் செய்யும் ஓசை வரை சுற்றிலும் ஓசை சூழவே வாழ்க்கை நகர்கிறது. நகர்தலிலும் ஓசை உண்டு. ஓசையை இசையாக்கி மகிழ முடியுமா? சில இடங்களில், சில சந்தர்ப்பங்களில் முடியும் என்று தோன்றுகிறது. அம்மா முறத்தில் அரிசி புடைக்கும்போது வரும் rhythmic  சத்தத்தை இசையாக உணர்ந்திருக்கிறேன். பாத்திரம் தேய்க்கும் சத்தம், குடத்தில் தண்ணீர் நிறையும்போது வரும் சத்தம், மரங்களினுடே காற்று வீசும்போது வரும் சத்தம், குழந்தை ஓடும்போது எழும் ...

தலைப்பிடாமலே சில

Image
                                    1. சில நேரங்களில் சில மனிதர்கள் என்பது   எழுத்தாளர் ஜெயகாந்தனின் புத்தகம். இது  Lakshmi, Srikanth ஆகியோர் நடிப்பில் திரைப்படமாகவும் எடுக்கப் பட்டது. இந்தத் தலைப்பினை ஒட்டி ஒரு தலைப்பாக  'சில சமயங்களில் சில விஷயங்கள் 'என்ற phrase  எனக்கு பிடித்திருந்தது. நாம் பார்க்கிற, கேட்கிற, சிந்திக்கிற தெரிந்து கொள்கிற, அறிந்து கொள்கிற அனைத்தையும் ஏதோ ஒரு தலைப்பினிற்குள்ளே கொண்டுவர  இயலாது. ஆகவே தலைப்பிடாமலேதான் சிலவற்றை பேச வேண்டி இருக்கிறது. இதைத்தான் எழுத்தாளர் சுஜாதா 'கற்றதும் பெற்றதும்'  என்று குறிப்பிட்டு பல அனுபவங்களை, அறிவுகளை தெரிவிக்கிறார்.       எழுதுவதைப் பற்றி பேச்சு வந்தபோது நான் என் கணவரிடம் எனக்கு Sidney Sheldon , Jeffrey Archer, Chase, Dan Brown இது போன்ற ஆங்கில writers நடை பிடிக்கும் .ஆனால் இந்திய இங்கிலீஷ் writers- இன் நடை பிடிக்காது (ஒரு எழுத்தாளரின் பெயரையும் கூறினேன் ) ,எழுதணும்னா அப்படி எழ...

குரங்குகள், பாடல்கள், குழந்தைகள்

        முதல் இரண்டு புத்தகங்களுக்குத் தலைப்பு வைக்க யோசித்தது போன்று இதற்கும் யோசித்தேன்; மற்றும் காரணம் கூற விரும்பினேன்.  Blog postகள் எழுதிக் கொண்டிருக்கும்போதே தங்கையும்,குழந்தைகளும் தலைப்பு என்னவென்று கேட்டனர்.  இந்தப் புத்தகத்தில் மருத்துவக் கல்லூரி பற்றி - (குரங்குகள் போலே, மரங்களின் மேலே), பாடல்களைப் பற்றி, குழந்தைகளைப் பற்றி கட்டுரைகள் இடம் பெறுவதால் எல்லாவற்றையும் combine பண்ணி, 'குரங்குகள், பாடல்கள், குழந்தைகள்' என்று பெயர் வைத்தேன். தலைப்பை ,' குரங்குகள், பாடல்கள் மற்றும் குழந்தைகள் ', என்று வைப்பதே சரியான இலக்கணம்.  ஆனால் 'மற்றும்' என்று இடையில் வைப்பது அவ்வளவு நயமாக இல்லாததுபோல் தோன்றியது.  எனவே, அதை skip பண்ணி விட்டேன். இப்போது 'இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ,... ' என்கிற கண்ணதாசனின் 'நிழல் நிஜமாகிறது' படப் பாடல் நினைவுக்கு வருகிறது. சற்றே இலக்கணம் மாறுவது இலக்கியம் ஆகிறதா? இதை ஆராயப் போனால் track மாறிவிடும். எனவே, வாருங்கள், புத்தகத்திற்குள் போவோம். ... ...             

அறிவியலை வியந்தபோது... ... ...

Image
                               Science என்பதற்கு அறிவியல் என்று அழகு தமிழ்ச் சொல். (அறிவு+இயல்= அறிவியல்.)  சொல் மட்டும் அழகு அல்ல, அறிவியலே அழகுதான். மட்டுமின்றி ஆறுதல்தான். ஆறுதல் தேடி யாரும் science க்குள் செல்வதில்லை. விடைகளையோ, விளக்கங்களையோ தேடிச் சென்று பார்க்கிறபோது அந்த விடைகளும், விளக்கங்களும் கொடுக்கின்ற அறிவு, ஒரு ஆறுதலைத் தருகிறது. அந்த ஆறுதல் அறிவை அறிந்ததால் ஏற்பட்டதா அல்லது தவறான கருத்துகள் நீங்கியதால் ஏற்பட்டதா? Knowledge is power என்று ஒரு saying உண்டு.               அறிவியல் என்பது complicated ஆன விஷயங்களை மட்டுமே உடையதல்ல.  அது பல day to day activity - களில் பரந்து கிடக்கிறது.  உறைந்து கிடக்கும் பனியின் energy யை உருக்கி ஆவியாக்கினால் அது சமையலுக்கும் உதவும், நீராவி enngine- ஐயும் ஓட வைக்கும்  என்பது எளியமையான science என்று எடுத்துக் கொண்டால், ஒரு formula வைப் பயன்படுத்தி குறிப்பிட்ட speed- க்கு மேல் ஒரு பொருளை உயரத் தூக்கி எறிந்...