செல்வத்துள் செல்வம்
' செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை' என்கிறார் திருவள்ளுவர். ஒரு ENT specialist ஆன நான் இந்தத் திருக்குறளைக் கொண்டாடவில்லையென்றால் வேறு யார் கொண்டாட முடியும்? எனவே,
எங்கோ கேட்கும் அரசியல் பேச்சாளரின் வார்த்தைகள் முதற்கொண்டு சமையல் செய்யும் ஓசை வரை சுற்றிலும் ஓசை சூழவே வாழ்க்கை நகர்கிறது. நகர்தலிலும் ஓசை உண்டு. ஓசையை இசையாக்கி மகிழ முடியுமா? சில இடங்களில், சில சந்தர்ப்பங்களில் முடியும் என்று தோன்றுகிறது. அம்மா முறத்தில் அரிசி புடைக்கும்போது வரும் rhythmic சத்தத்தை இசையாக உணர்ந்திருக்கிறேன். பாத்திரம் தேய்க்கும் சத்தம், குடத்தில் தண்ணீர் நிறையும்போது வரும் சத்தம், மரங்களினுடே காற்று வீசும்போது வரும் சத்தம், குழந்தை ஓடும்போது எழும் 'டக் டக்' shoe சத்தம்- இசை போலத்தான் உள்ளது.
Michael crichton எழுதிய Timeline என்ற புத்தகத்தில் teleportation- ன் மூலமாக 14- ஆம் நூற்றாண்டிற்குச் செல்லும் people முதலில் notice செய்வது ஒரு பெரிய வித்தியாசம். அது சப்தமின்மைதான். Elecricity கண்டு பிடிக்கப்படாத காலம் அல்லவா அது? எனவே, electrical hum sound- என்பதோ, motor sound- என்பதோ எதுவும் இருக்காது.
என் வீட்டில் அம்மா, அப்பா, தங்கை, மாமா, நான் உட்பட - அனைவரும் பாடுபவர்கள். என் கணவர், குழந்தைகளும் கூட. In fact, எல்லாருமே பாட முடியும். ஆனால், நிறையப்பேர் பாடுவதில்லை. பேச முடிந்த அனைவருக்கும் பாட முடியும்தானே? ' எல்லாக் குரலும் இனிமையானது' - இதைச் சொன்னது stand up comedian Alexander babu.
செவிச் செல்வத்தைப் பற்றி அறிவியல்- மருத்துவ ரீதியாக நிறையக் கூறலாம். ஒலிகள், சப்தங்கள், அலையலையாக இவை குறுக்கும் நெடுக்கும் பரவும் விதம், அவற்றின் intensity in decibel மற்றும் frequency in Hertz ஆகியனவற்றைப் பாடமாகவே கற்றுள்ளேன். அது கொஞ்சம் complicated ஆகத்தான் இருக்கும்.
ஆனால் இசைஞானி இளையராஜா இசையை Nothing but wind என்று சொல்கிறார். அவர் சொல்லலாம் . சொல்லுகிற இடத்தில் இருக்கிறார்.அவர் இசை மேதை. இசை ஞானி.
காது மருத்துவரான நான் அதிகம் முக்கியமாகக் கருதுவது காதைவிடக் கண்தான். ஆனால் செவிச்செல்வம் நம்மை எத்துணை ஆளுமை செய்கிறது! சற்றே பாடல்களைப் பார்ப்போம். விதம் விதமான இசைகள் இனிமையானவை. கர்னாடக, நாட்டுப்புற, கானா வகை, திரைப்பட, மத, பிறமொழி பாடல்கள் என அனைத்தும் அள்ளி அள்ளி சுவைக்கத் தகுந்தவை. அதுபோல் பல இசையமைப்பாளர்களின் இசையமைப்பும் அருமைதாம் . K.V.மஹாதேவன் முதல் G.V. பிரகாஷ் குமார் வரை. அனைத்துப் பாடல்களையும் ரசிக்கலாம், enjoy பண்ணலாம், அழலாம், ஆட்டம் போடலாம்.
எனக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட போது- அதாவது இடது கால் வலி, ( vasculo- neural pain), நான் படுக்கையில் படுத்து rest எடுத்த நேரங்களில் இளையராஜாவின் திரைப்படப் பாடல்கள் மிக soothing ஆக இருந்தது. Convalescing with Ilayaraja - along with medicines, exercise and rest- என்று கூட சொல்லலாம். சில சமயம் வார்த்தைகளை கவனிக்க மாட்டேன். அந்த prelude, interlude ஆகியவற்றில் மிதந்து வரும் இசைக்கோர்ப்புகள் என்னை எங்கேயோ அழைத்துச் சென்று விட, கண்களில் கண்ணீர் சுரந்து வர வலி மெதுவாகக் குறையும்.
Cochlear implant :-
இப்பேர்பட்ட செவிச்செல்வம் சிலருக்கு குறைபாடு அடைகிறது. இது பிறவியில் ஏற்படும் குறைபாடாகவோ அல்லது வாழ்வின் இடையில் ஏற்படும் குறைபாடாகவோ இருக்கலாம். இடையில் ஏற்படும் குறைபாடுகளுக்கு hearing aids உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி hearing- ஐ improve செய்து கொள்ளலாம். ஆனால் developmental defect ஆக சுத்தமாக காது கேட்காத குழந்தைகளுக்கு cochlear implantதான் ஒரே தீர்வு. இதைப் பொருத்துவதின் மூலம் அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றலாம் - அல்லது - சப்தம் ஏற்றலாம். Cochlear implant என்பது ஒரு miracle என்று சொல்லத் தகுந்தது.
நான் சென்னையில் PG படித்துக் கொண்டிருந்த போது MERF எனப்படும் ENT hospital- க்குச் சென்றோம். அங்கே cochlear implant பற்றிப் பேசிய doctor, சேலத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் cochlear implant surgery - க்குப் பிறகு toilet- ஐ flush பண்ணியவன், ' இது கூட சத்தம் போடுமா?' என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டான் என்றார். (அதனால் மகிழ்ச்சி அடைந்ததை அக்கூட்டத்தில் தெரிவித்தார்).

Comments
Post a Comment