Gen Alpha [ குழந்தைகளின் குழந்தைகள் ]



                                                   


      Gen Alpha (Generation Alpha) எனப்படும் மனிதர்கள் 2010 - இலிருந்து 2024 வரை பிறந்த குழந்தைகள். இவர்கள் அதிகம் technologyவாசிகளாக இருப்பார்கள். இவர்களின் உலகம் சற்று மாறுபட்டதாக இருக்கும் என்பதால், இவர்களை கிரேக்க எழுத்தின் ஆரம்பத்திலிருந்து ஆல்ஃபா தலைமுறை என்று குறிப்பிடுகின்றனர். இந்த generation alphaக்களின் காலம் இன்னும் உசிதமான, அதாவது வளர்ந்த கட்டத்துக்கு வரவில்லை.

             அடுத்த எழுத்தைப் பெயராகக் கொண்ட தலைமுறையும் தொடங்கி விட்டது. அதாவது பீட்டா தலைமுறை- Generation Beta. 2025- ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி 12.03 am- ல் (00.03 in 24 hour time) ஜென் பீட்டாவின் முதல் குழந்தை  இந்தியாவில் மிசோரம் மாநிலத்தில் பிறந்து விட்டது. அது போலவே Australia- வின் New South Wales - ல்  just after midnight on 31st December 2024 ஒரு குழந்தை பிறந்ததாக ஒரு தகவல் உள்ளது. விநாடிகளில் எது எதை முந்தியது என்று தெரியவில்லை.

              இப்போது famous ஆக பேசுபொருளாக இருப்பது generation z  அல்லது Gen zee தான். இவர்களுக்கு Zoomers என்று ஒரு பெயர் உள்ளது . இவர்களுக்கு social awareness அதிகம் உண்டு, political justice க்காக உழைப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் 13முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள். ( Nepal, Bangladesh ஆகிய நாடுகளில் புரட்சி செய்தவர்கள் இவர்கள்தான் ) 

                 இங்கு நான் பேசப்போவது generation Alpha வில் இருக்கும் என் பேரன்களைப் பற்றி. மேலே குறிப்பிட்டது போலவே alpha குழந்தைகளின் உலகம் சற்று மாறுபட்டதாகவே இருக்கும் என்பது சரி என்றே தோன்றுகிறது. 

        என் முதல் பேரனை வெள்ளோடு - birds sanctuary க்குத் தூக்கிச் சென்றோம். அப்போது அவனுக்கு ஒன்றரை வயதுதான். மாலை நேரத்தில்தான் பறவைகள் எல்லாம் இருப்பிடம் திரும்பும் என்பதால் மாலை சென்றோம். அங்கே பணியிலிருந்தவர்கள், 'மூடுற time ஆகிருச்சு ' என்று சொன்னாலும் உள்ளே அனுப்பினார்கள். உள்ளே ஒரு குளம். குளத்தில் அங்கங்கே மரங்கள். உள்ளே சென்றபோது பறவைகள் கூடடையும் time ஆதலால் பறவைகள் மரங்களின் மீது சென்று அடர்த்தியாக அமர்ந்து இருந்தன. மரங்களின் இலைகளையே மறைக்கும் அளவுக்கு பறவைகள்!  கீழே கொடுக்கப்பட்டுள்ள photoவில் மரங்களின் மேல் வெண்ணிறமாகத் தென்படுபவை மலர்கள் அல்ல; பறவைகள் . அதைப் பார்த்தவுடன் என் பேரன், தன் இரு உள்ளங்கைகளையும் cross ஆக வாய்மேல் வைத்து வியந்தான். அதை எப்படிக் கற்றுக் கொண்டான் என்று தெரியவில்லை. ஆச்சரியம். 

                                                  

                                     


                     

                                                 

         Mobile- ல்  You tube-ல் பாடல்கள் பார்த்த குழந்தை அதை ஞாபகம் வைத்துப் பாடினான்.     'Welcome hero, happy marriage, Kashmir-ல் தேன்நிலவு; 

                         பள்ளிப் பாடம் சொல்லக் கேட்கும் பெண்ணல்லவோ பால்நிலவு', என்று.  ஏதோ நான்கைந்து வார்த்தைகள் பாடமுடியும், கொஞ்சம் மழலையாக என்று நினைத்தேன்.ஆனால்  பத்துக்கும் மேற்பட்ட வார்த்தைகளை தவறில்லாமலும், சரியான உச்சரிப்புடனும் பாடக்கேட்டு என்  husband இடம் ' பாருங்களேன் ,பெண்ணல்லவோ  பால் நிலவு-  வரைக்கும் பாடறான்' என்று சொன்னேன். மூன்று வயதுகூட நிரம்பவில்லை அப்போது.

        ஒரு முறை என்னுடன் clinic-க்கிற்கு வருவேன் என்று insist பண்ணிணான். ஏன் என்று கேட்டதற்கு, 'I want to see how you are a doctor', என்று சொன்னான். அதாவது ஒரு பாட்டியாகவோ அல்லது வீட்டு ladyயாகவோ பார்த்த என்னை doctor ஆக எப்படி இருப்பேன் என்று பார்க்க வேண்டுமாம். சரியென்று கூட்டிச் சென்றேன்.  வந்தவன் nurse , instrument tray வைக் கொண்டு வந்து வைத்து மூடியைத் திறந்து check செய்தபோது, table அருகில் எக்கிப் பார்த்து 'tools 'என்று சொல்ல, nurse- க்கு ஒரே ஆச்சரியம்.

        அதன்பின் patient- ஐ examine பண்ணி prescription எழுதி அனுப்பினேன்.  சற்று நேரம் கழித்து என்னிடம், ' when the next patient comes, I will do like what you do, so that you can take rest !', என்றானே பார்க்கலாம். இது நடந்தது September 2022- ம் வருடம் . அவனுக்கு என்போல examine பண்ண ஆசை, அதை எனக்கு  favour வேறு ஆக்குகிறானாமாம், so that you can take rest- என்று!  ஐந்து வயதுதான் முடிந்திருந்தது அப்போது.

                        


                 தற்போது third standard  படிக்கிறான் (8 வயது).  "Lunch- க்கு ரொம்ப late ஆக விட்டாங்க. ரொம்ப பசி ஆகி தலை சுத்திருச்சு. Sunitha Williams zero gravity- ல் இருந்து earthக்கு திரும்பி வந்தமாதிரி balance போயிருச்சு'' என்று என் மகளிடம் சொல்லியிருக்கிறான். நான் ஆச்சரியப் பட்டபோது, " இல்லம்மா, நாங்க Sunitha Williams பற்றி ஒரு video பார்த்தோம். அதை வைத்து சொல்லி இருக்கிறான் ", என்றாள் .

             ஒல்லியாகி decoration ஆகறது-   அது போல parents -  க்குள் ஏதோ ஒரு சின்ன argument வந்தபோது,  அவன் அப்பா தனக்கு support செய்யும்படி கேட்கிறார். அதற்கு பதிலளித்தவன், "அம்மா அப்புறம் எனக்கும், சாஹிலுக்கும் சாப்பாடு போட மாட்டாங்க. நாங்க, ஒல்லியாகி , குச்சி மாதிரி ஆகி, அப்புறம் decoration ஆகிறுவோம் "என்றானாம் . Decoration என்றால் கடைகளில் தொங்கும் ஜிகினா பேப்பர் உருவங்கள். 

                                            




       இரண்டாவது பேரனும் சளைத்தவன் அல்ல.  வீட்டுக்கு வரும்போது walking போகலாம் என்று கதவைத் திறந்து வெளியே இறங்கினாலே, வேகவேகமாக crocs அணிந்து கொண்டே ' Park time ' என்பான். பார்க்குக்குத்தான் போக வேண்டுமாம் . அதை முன்கூட்டியே establish பண்ணிக் கொள்கிறான்! அந்தப் பக்கம்தான் போவான். இப்போது மூன்று வயது சின்னவனுக்கு.

                         


        இரவு நேரம் வாசற்கதவுக்கு வெளியே இறங்கினான். முதலிலேயே வெளியில் நேரம் செலவழித்து விட்டதால், அவனை வீட்டினுள் கூட்டி வந்து கதவைச் சாற்ற try பண்ணிய போது, ' many lights ', என்றான். எதைச் சொல்கிறான் என்று எட்டி வெளியே பார்த்தால், வீதியில் வரிசையாக ஏழெட்டு lamp post களில் இருக்கும் விளக்குகளைப் பார்த்துச் சொல்கிறான். வெளியே போவதற்கு இருந்தவனை உள்ளே கூட்டி வருவதற்குள், அந்தக் களேபரத்திலும் சில விநாடிகளில் லைட்டுகளைப் பார்த்து comment வேறு கொடுக்கிறான்!

             அவன் அம்மாவிடம்  fridge- ஐ open பண்ணச் சொல்லி மேலிருந்து கீழ்வரை பார்த்து விட்டு,  இரண்டு கைகளையும் விரித்து 'there is nothing to eat'  என்று சொல்லி பெருமூச்சு விட்டு நகர்ந்திருக்கிறான். Fridge - ல் strawberry, grapes, கொய்யா போன்றவை இருந்தனவாம். அவற்றை  already சாப்பிட்டு விட்டதால் புதிதாக ஒன்றும் இல்லையாம்!. 

       

        





Comments

Popular posts from this blog

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

சில பாடல்களின் தாக்கங்கள்

மழை விட்டும் தூவானம் விடவில்லை