வாழ்வு பல நிலைப்படும் ( Part 2)
வாழ்வின் அடுத்த நிலை குழந்தைகள் பெரியவர்கள் ஆனபின் ஏற்படும் challenging ஆன நிலை. 'தோளுக்கு மிஞ்சியவன் தோழன்' என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது, உன் குழந்தை உன் தோளின் உயரத்தைவிட அதிகமாக வளர்ந்து விட்டால் உன் தோழனாக நடத்து என்பது பொருள். இந்த transition period பெற்றோருக்கும் கடினம் ; குழந்தைகளுக்கும் கடினம்.
நாமும் இந்தக் கட்டத்தைக் கடந்துதான் வந்திருக்கிறோம். ஒரு காலகட்டத்தில் பெற்றோருக்கு மனக்கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறோம். அது சரியா தவறா என்றுகூட இன்றுவரை புரியவில்லை. அப்பேர்ப்பட்ட ஒரு காலகட்டம் குழந்தைகள் வளர வளர, அவர்களாக உலகத்தைப் புரிந்து கொள்ளவும், தானாக சிந்திக்கவும், independant ஆக உணரவும் தலைப்பட்டபோது ஏற்பட்டது. அதை சிக்கலாக்காமல் நகர்த்திச் செல்வது பெற்றோரின் கடமை; திறமை.
படித்துப் பெரியவர்களாக ஆகிக் கொண்டிருக்கும் நேரத்தில் என் முதல் பெண் ' பெரியவள்' ஆனாள். அதற்கு ' சீர்' எனப்படும் விழாவை உறவினர், நண்பர் சூழ நடத்தினோம். அவள் பிறந்த 40 வது நாள் விழா, முதல் பிறந்த நாள் ஆகியன சிறப்பாக celebrate பண்ணப் பட்ட போதும் அவை என்னவோ எனக்கும், என் கணவருக்குமான விழாக்கள் போலத்தான் அமைந்தன. பின் இரண்டாவது பெண்ணுக்கு சீர். அதற்குப் பின் இருவரும் கல்லூரிப் படிப்பு வேலை என professionally settle ஆக ஆரம்பித்தனர். இவ்வாறு குழந்தைகளை ஆளாக்குவதற்கு உறுதுணையாக இருந்தது மிகவும் மகிழ்ச்சியான period. நம் வேலைகளையும் செய்து கொண்டு, குழந்தைகளையும் கவனிப்பது நடைமுறை. அவர்களின் intelligence and questionnaire -ஐ address பண்ணுவது அவர்களுக்கும் நமக்கும் பலனளிக்கக் கூடிய ஒன்று.
இரண்டு மகள்களின் திருமண நிச்சயதார்த்தங்கள் முறையே 2015 மற்றும் 2021- ஆம் ஆண்டுகளில் ரோஜநகர் வீட்டிலேயே நடைபெற்றன. இருவரின் திருமணங்களும் கோவையில்- எங்கள் family trust ஆன ஃபாத்திமா கனி மண்டபத்தில். திருமணங்களும், அவை தொடர்பான காரியங்களும் கோலாகலம். பூ, வெற்றிலை பாக்கு வாங்குவது முதற்கொண்டு jewels அணிவிப்பது வரை. திருமணத்தன்று மணப் பெண்ணின் தாயாய் பரபரவென்று கால் நோக ஓடிக் கொண்டிருந்தது சுகம். அது மறுபடி கிடைக்காதல்லவா?
அடுத்தது பேரன்களின் birth. இரண்டு பேருமே ஈரோட்டில்தான் பிறந்தனர். முதல் பேரன் கொரோனாவைப் பார்த்தவன். அதிக போக்குவரத்து அவனுக்கு ஈரோட்டுக்கு உண்டு. அவனின் பாண்டித்யங்களை 'Gen Alpha ( குழந்தைகளின் குழந்தைகள்) என்கிற post- ல் எழுதி இருக்கிறேன். இரண்டாவது பேரனுக்கு ஒரு வயது ஆவதற்கு முன்பே கோவைக்கு shift செய்து விட்டோம். பெரிய நாத்தனார் வஹிதா, நாங்கள் திருமணம் முடிந்து 5- வது மாதத்தில் husband- ன் பணி நிமித்தமாக கோவையிலிருந்து தனிக்குடித்தனம் சென்றபோதே, ' retire ஆனபின் கோயம்பத்தூருக்கே வந்து விடுங்கள் ' என்று சொன்னார்.
August 13, 2023- உறவினர்களை அழைத்து கோயமுத்தூர் வீட்டில் விருந்தளித்தோம். September 11- ம் தேதி குடியேறினோம். மாதங்கள் ஓடின. Casa Grand வீட்டை ஏறக்குறைய Roja Nagar வீடு போல ஆக்கினோம். மாதங்கள் ஓடி வருடங்கள் ஆகின.
Life- இப்போது கொஞ்சம் relaxed ஆக உள்ளது. ஓடத் தேவை இல்லை.
விஜய் - யில் ஒளிபரப்பப்படுகின்ற ' சிறகடிக்க ஆசை ' என்னும் tv serial - ல் ' வயிறு நிறைய பழைய சோறு சாப்பிட்டவன்கிட்ட பிரியாணி குடுத்த மாதிரி ' என்று ஒரு வசனத்தை ஹீரோ முத்து பேசுவார். அது அவனுடைய திருமண வாழ்வைப் பற்றி. சாப்பிட்ட பின் சாப்பிட முடியாது அல்லவா? அது போல ஒரு திருப்தி என்றுபொருள். என்னைப் பொறுத்தவரை என் entire வாழ்க்கையிலும் நான் சாப்பிட்டது பழைய சோறு மட்டும் அல்ல. 60 வயது வாழ்க்கையில் வேண்டிய அனைத்தையும் பார்த்துவிட்ட திருப்தி.



Comments
Post a Comment