சில பாடல்களின் தாக்கங்கள்

      


        தலைப்பைப் பார்த்து மலைத்து விட வேண்டாம். இதில் அதிகமாக இடம் பெறுவது தமிழ்த் திரைப்படப் பாட்டுகளின் இனிய ரசனைதான். அத்துடன் வேறுசில பாடல்களும். 

     சின்ன வயதில் பள்ளிப் பாட புத்தகத்தில் இருந்த பாடல், 'பனைமரமே பனைமரமே, ஏன் வளர்ந்தாய் பனைமரமே? ' என்பதாகும். நீலகிரியில் பனை மரங்கள் பார்த்ததில்லை. பொள்ளாச்சிக்குப் பயணம் செய்கின்ற போது, வழியில் தூரத்தில் தென்படும் பனை மரங்களைப் பார்த்ததும் பாடுகின்ற பாடல் இது. இன்றும் கூட பனைமரமும், அதன் உயரமும், அதன் உச்சியில் அமைந்திருக்கும் இலைகளின்  shape - ம், அந்தக் கூடியிருக்கும் கிளை மற்றும் இலைகளுடனான நீண்ட மரத்தின்  shape- ம், குட்டிப் பனைமரத்தின் சின்ன வடிவமும் அழகாகத் தோன்றுகின்றன.

        'செந்தூரப் பூவே, செந்தூரப் பூவே' -  8th standard  படித்துக் கொண்டிருந்த சமயத்தில் குடும்பத்தினருடன் thearte  - ல் சென்று பார்த்த (பதினாறு வயதினிலே) படத்தின் பாடல் இது. Opening music அப்படியே அலை அலையாகத் தவழ்ந்து வந்து சில புல்லாங்குழல் bits தாண்டி , சிறு music vibe- ல்  சென்று முடிகிறது. அலை அலையாகத் தவழ்ந்து செல்லும் இசையின் தொடக்கத்தில் ஶ்ரீதேவி இசைக்கேற்ப   slow motion- ல் ஓடுகிறார்; ஊஞ்சலில் ஆடுகிறார்.அதன்பின் பாடல். அப்பாடலும், இசையும், இளம் பெண்ணின் - naive expression களும் கண்ணையும், காதையும், கருத்தையும் நொடி நேரம் கூட விடாமல் கவர்ந்தன.

     மைனா படத்தில் கதாநாயகன் சொல்லும் ஒரு வசனம் - ' உடம்பெல்லாம் ஓடி ஓடி... ... ' அது போலத்தான் இந்தப் பாடலும். ஏனென்று தெரியவில்லை, ரொம்ப connect ஆகிறது.  அந்த வயதாக இருக்கக் கூடும். ஏனெனில் அப்போது எனக்கு பதினான்கு வயது. அந்த சினிமா கதாநாயகியின் பதினாறு வயதென்பது வியந்தும், பயந்தும் பார்க்கத்தக்க ஒன்றாக இருந்திருக்கக் கூடும். 

        9th standard - ல் பார்த்த படம் கிழக்கே போகும் ரயில். இதில் வரும் 'பூவரசம்பூ பூத்தாச்சு', என்ற பாடலும், அதன் picturisation- உம் மிகப் பிடிக்கும். அதில் railway track அருகில் ' கரகர வண்டி காமாட்சி வண்டி கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி' என்று ராதிகா பாடிச் சுழலும்போது, 'எங்க ஊர் பொள்ளாச்சி, அங்கே போக ஒரு ரயில் வண்டி' என்று மனம் மகிழ்ச்சி கொள்ளும்.

         ' நெஞ்சம் மறப்பதில்லை ; அது நினைவை இழக்கவில்லை '  Humming முடிவதற்கு முன்னமே கண்டிப்பாக இந்த முறை அழக்கூடாது என்று மனதினுள் சொல்லிக் கொண்ட பின்னரும், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் முட்டிக் கொண்டு அழுகை வந்து விடும். ஏனென்றால் என்  அம்மாவின் மறைவுக்கு முன்னால் நாங்கள் இருவரும் கடைசியாக  TV யில் பார்த்த பழைய படம்  ' நெஞ்சம் மறப்பதில்லை ' என்னும் தமிழ்த் திரைப்படம்.  இரவு நேரப் படமாக ஒளி பரப்பினார்கள். Dinner சாப்பிட்ட பின் hall-ல் bed போட்டு படம் பார்த்தோம். So, இந்தப் பாடலும், ராகமும், வரிகளும் -  'காலங்கள் தோறும் உன்மடி தேடி கலங்கும் என் மனமே'... ...

    'யப்பா நீ போனவழி பாதையில மண்டியிட்ட பாதவத்தி' ..இந்தப் பாடல் வாழை என்ற படத்தில் climax - ல் வருகிறது. இதைப் பாடும் ஆண் அழுது கொண்டே பாடுகிறார். பெண்ணும் கூட சற்றே. பார்க்கும் நமக்கும் அழுகை வரப் பார்க்கும். வந்தது.

       '  இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன?' என்று கெஞ்சும் and கொஞ்சும் குரல்களில் ஆணும், ' இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்தாதான் என்ன?' பெண்ணும் பாடுவது இனிமையாக இருக்கிறது. ஆனால் அதிகம் connect ஆகவில்லை.

       'மனிதன் நினைப்பதுண்டு , வாழ்வு நிலைக்குமென்று; இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று' இந்த சிவாஜி பாடலைக் கேட்கும்போது என் இரண்டாவது மாமா அபுசாலி நினைவு வரும்.  ஏனெனில் அவர் இந்தப் பாடலைப் பாடக் கேட்டிருக்கிறேன். நான் சிறுவயதில் அவரைப் பார்த்து ' அப்பாய் மாமா, குப்பாய் மாமா' என்று பாடுவேன். 

     'ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை ', 

 ' நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இங்கு நாடே இருக்குது தம்பி, சின்னஞ் சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி ', 

'உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்; உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்'

      மேலே உள்ள பாடல்கள் எல்லாம் முன்னாள் முதல்வர் MGR- ன்  திரைப்படங்களில் இடம் பெற்ற தத்துவப் பாடல்களுள் சில. சிறுமியாக இருந்தபோது என்னை நல்ல பிள்ளை என்று நான் நம்பியதால், 'சின்னஞ் சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி', என்ற வரிகளை என் கைகளுக்கானது என்று உணர்வேன். என் கடமைகளை- வேலைகளை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் அந்த வயதிலேயே எனக்குள் எழும். 

        M.B;B.S. முடித்து Medical Officer ஆக Pasteur Institute- ல் பணியிலிருந்த போது, புல் மேட்டின் மேல்  quarters - ஐ நோக்கி நடந்த நேரம் மனதில் ' உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் ... ...' என்ற பாடல் ஓடியது. வெகு காலம் கடந்தபின்- என் முதல் பேரன் பிறந்த பின்னர், தனக்கு இந்தப் பாடல் பிடிக்கும் என்று என் அப்பா சொன்னார். சந்தோஷமாக இருந்தது.

      இவை தவிர என்னைத் தாக்கிய, ரசிக்க வைத்த பாடல்களுள் சிலவற்றை கீழே பதிவிடுகிறேன். அவற்றில் என்னைக் கவர்ந்த ஒரு வரியையும் bracket- இல் கொடுக்கிறேன்.அவற்றை audioவாகக் கேட்டு, அல்லது TVயில் av யாகப் பார்த்து உங்களுக்கு என்ன thoughts வருகிறது என்பதை அறியுங்கள்.

         ராஜராஜ ஶ்ரீ  ராணி வந்தாள், ( தேடிச் சென்ற பூங்கொடி காலில் பட்டது.... ..)  

         அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், ( அச்சம் இன்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை... ...  ), 

        ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன், ( கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை , இன்ப சக்கரம் சுத்துதடா... ...  ), 

           ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்,( மான் கூட்டம் மீன் கூட்டம் வேடிக்கை பார்க்கின்ற கண்ணிரண்டிலே என்ன மயக்கம்?.. ...  ), 

      சிவராத்திரி, ( வெப்பம் தீர வந்ததடி வேப்ப மரக்காத்து... ....  ), 

        ஊரு விட்டு ஊரு வந்து, ( ஊருல உலகத்துல எங்க கதை போலெதும் நடக்கலியா?... ...  ), 

        அடி ஆத்தாடி இள மனசொன்ணு,    (உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம்.... ...  )

         பூ வாடைக்காற்று வந்து ஆடை தீண்டுமே,    (பாதை தடுமாறும், இது போதை மழையாகும்... ... )

       இறைவனிடம் கையேந்துங்கள் ,   ( பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள், அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை... ...)

     Mere sapnon ki raani,    (our kab thak muje thadpayegi thu?... ...  ) 

      Sadee(saree)ke fallsa kabi match kiya re, kabi chode dhiya dhill.. ...     ( touch kar ke dhill mera kyon scratch kiya re?... ...  ),

        கஜுராஹோ  கனவிலோர் சிற்பம் கண்ணில் மிதக்குதே,    ( காமனின் வழிபாடு  உடலினைக் கொண்டாடு... ...), 

     நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன்,    ( ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே... ...  ),

       கனிமா- காட்டுமல்லி கனகமல்லி    (ஒட்டு மொத்த தென் மாவட்டம், ஓசகட்டி வந்து நிக்கட்டும்... ...  ), 

        காதல் வந்தால் சொல்லியனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன், (பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை, அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை.. ...  ),

         அழகூரில் பூத்தவளே, என்னை அடியோடு.... ...    (நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்.. ...  ),

            யப்பா சப்பா - மச்சான் அப்போ single         (hey life shortu, ஏண்டி waitu, now beating is my heartu... ...  ),

         விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்....  ( என் தனிமைக்குத் தனிமைகள் நீ வந்து கொடுத்தாய்... ...  ),

           தித்திக்குதே- சில்லென்ற தீப்பொறி ஒன்று      (அன்பே உன் புன்னகை கண்டு எனக்காகத்தான் என்று, இரவோடு நான் எரிவதும் பகலோடு நான் உறைவதும்... .. ),

            தையத்தா தையத்தா தையத்தையத்தா.....     (நிலங்கள்  உடைந்து போனாலும் நிழல்கள் உடைவதில்லை... ...).                    

         

          

               

          

Comments

  1. அருமையான பாடல்களின் நினைவு கூறல் ஸிராஜ் 👌

    ReplyDelete
  2. மிக்க நன்றிகள் நளினி

    ReplyDelete
  3. பல நினைவுகள் சுகமானவை
    சில நினைவுகள்
    சுமையானவை.
    இரண்டும் கலந்ததே இந்த வாழ்க்கை.

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை.

      Delete

Post a Comment

Popular posts from this blog

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

மழை விட்டும் தூவானம் விடவில்லை