Posts

Showing posts from March, 2026

வாழ்வு பல நிலைப்படும் ( Part 2)

Image
                                       வாழ்வின் அடுத்த நிலை குழந்தைகள் பெரியவர்கள் ஆனபின் ஏற்படும் challenging ஆன நிலை. 'தோளுக்கு மிஞ்சியவன் தோழன்' என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது, உன் குழந்தை உன் தோளின் உயரத்தைவிட அதிகமாக வளர்ந்து விட்டால் உன் தோழனாக நடத்து என்பது பொருள். இந்த transition period  பெற்றோருக்கும் கடினம் ; குழந்தைகளுக்கும் கடினம்.             நாமும் இந்தக் கட்டத்தைக் கடந்துதான் வந்திருக்கிறோம். ஒரு காலகட்டத்தில் பெற்றோருக்கு மனக்கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறோம். அது சரியா தவறா என்றுகூட இன்றுவரை புரியவில்லை. அப்பேர்ப்பட்ட ஒரு காலகட்டம் குழந்தைகள் வளர வளர, அவர்களாக உலகத்தைப் புரிந்து கொள்ளவும், தானாக சிந்திக்கவும்,  independant ஆக உணரவும் தலைப்பட்டபோது ஏற்பட்டது. அதை சிக்கலாக்காமல் நகர்த்திச் செல்வது பெற்றோரின் கடமை; திறமை.           படித்துப் பெரியவர்களாக ஆகிக் கொண்டிருக்கும் நேரத்தில் என் முதல் பெண் ' பெரியவள்' ஆனா...

Gen Alpha [ குழந்தைகளின் குழந்தைகள் ]

Image
                                                           Gen Alpha (Generation Alpha) எனப்படும் மனிதர்கள் 2010 - இலிருந்து 2024 வரை பிறந்த குழந்தைகள். இவர்கள் அதிகம் technologyவாசிகளாக இருப்பார்கள். இவர்களின் உலகம் சற்று மாறுபட்டதாக இருக்கும் என்பதால், இவர்களை கிரேக்க எழுத்தின் ஆரம்பத்திலிருந்து ஆல்ஃபா தலைமுறை என்று குறிப்பிடுகின்றனர். இந்த genaration alphaக்களின் காலம் இன்னும் உசிதமான, அதாவது வளர்ந்த கட்டத்துக்கு வரவில்லை.              அடுத்த எழுத்தைப் பெயராகக் கொண்ட தலைமுறையும் தொடங்கி விட்டது. அதாவது பீட்டா தலைமுறை- Generation Beta. 2025- ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி 12.03  மணிக்கு ஜென் பீட்டாவின் முதல் குழந்தை  இந்தியாவில் மிசோரம் மாநிலத்தில் பிறந்து விட்டது.                இப்போது famous ஆக பேசுபொருளாக இருப்பது generation z  அல்லது Gen zee தான்...