செடி கொடி மரம் ... - 3 (Gardening history continuation)
Initially we had many pots with plants and two mud ( soil ) spaces in the portico for keeping plants. A narrow rectangular area on the right side close to the compound wall and a narrow L shaped area on the left. ஆரம்ப கால தொட்டிச் செடிகள் அனைத்துமே விதவிதமான crotons தான். செடிகளுக்காக விடப்பட்ட மண் space களில் ரோஜாக்கள், கொடி மல்லி, jeranium, adenium ( இந்தச் செடி பற்றி கீழே கூறுகிறேன்), croton type plant,சிவப்புப் பூக்கள் பூக்கும் உன்னிச் செடி, ஒரு கொய்யா மரம் உள்பட பல தாவரங்கள் இருந்தன. மேற்கூறப்பட்ட அனைத்தும் ஒரே கால கட்டத்தில் வளர்க்கப் பட்டவை அல்ல. பின்பு அரசாங்க வலியுருத்தலின்படி தரை கீழ்த்தள மழைநீர்த் தொட்டி கட்டப்பட்ட போது L shaped soil area- வின் ஒரு பாதி மூடப் பட்டு , தளம் இடப்பட்டது.
Husband- ன் friend பாலு என்பவரின் மனைவியிடமிருந்து straight ஆக வளரக்கூடிய முட்களுள்ள கள்ளிச் செடிகளைக் கொண்டு வந்து வளர்த்தோம். கஷ்டப்பட்டு cut பண்ணிக் கொடுத்தார் அந்தப் பெண்.
ஈரோட்டில் இருந்து கோவைக்குச் செல்லும் பெருந்துறை ரோட்டில் Thindal அருகில் உள்ள சுரபி nursery யிலிருந்து (near my children's school) நிறைய பூக்களுடன் இருந்த ரோஜாச் செடியை 450 ரூபாய் கொடுத்து வாங்கி Kinetic Style- ல் கால்களுக்கு இடையில் வைத்து ஓட்டிக் கொண்டு வந்து பெரிய குழி தோண்டி நட்டு வைத்தேன். எங்கள் வீடு இருப்பது சத்தி ரோடு. Nursery பெருந்துறை ரோட்டில். நல்ல தொலைவு. இரண்டு முறை இந்தப் பெரிய rose செடிகள் வாங்கியுள்ளேன். வாங்கிய சமயத்தில் அதிக அளவில் பூக்கள் இருந்தன. ஆனால், அதன் பின்னர் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லை. இந்தச் செடி தவிரவும் நிறைய ரோஜாச் செடிகள் வளர்த்துள்ளோம். ஒரு சமயத்தில் முன்புற சுவரையொட்டி இருபுறமும் இருந்த soil areaவில் ஏழு ரோஜாச் செடிகள் இருந்தன. செடிகளுக்கிடையில் மண்ணில் வேர் படரவும், செடிகள் கிளைகள் பரப்பி ஆடல் பாடலாக வளரவும் தேவையான இடைவெளியும் இருந்தது. அந்த soil areaவில் எப்போதுமே இரண்டு மூன்று செடிகளிலாவது பூக்கள் இருக்கும். ஏழு செடிகளும் வெவ்வேறு நிறப் பூக்களைக் கொண்டவை.
' இங்கு செடி மண் கிடைக்கும் ' என்று ஒரு செங்கல், சிமெண்ட் விற்கும் கடையில் board வைத்திருந்தார்கள். Hospital- இல் இருந்து திரும்பும் வழியில் அந்தக் கடையைப் பார்த்து, மறுமுறை செல்லும்போது ஒரு சிமெண்ட் ( polypropylene woven bag ) பையில் மண்ணை வாங்கிக்கொண்டு வந்து, சற்றே வளம் குறைந்திருந்த மண்மேல் பரப்பி விட்டேன். மற்றும் ஒரு முறை கோவையிலிருந்து ஈரோடு வரும்போது, ரோட்டோரம் காரை நிறுத்தி, ரோட்டோரம் இருந்த மண்ணைக் கொஞ்சம் கொண்டு வந்தார் என் husband. இது தவிர மண்புழு உரம், chemical உரமெல்லாம் ( flowering- க்கு) வாங்கிப் போடுவோம்.
என் முதல் மகள் PSG Tech ( College of Technology )- ல் படித்துக் கொண்டிருந்த போது வளர்ப்பதற்கு ஒரு செடி வேண்டுமென்று கேட்டாள். கள்ளிச் செடி என்று கேட்க, கள்ளிச் செடி யில் ஒரு variety, மெத்தென்ற சிறிய maroon and green tint கொண்ட இலைகளை உடைய plant ஐ, plastic தொட்டியுடன் எடுத்துச் சென்று கொடுத்தேன். அதற்கு சிக்கு ( chikku ) என்று பெயர். ஒருதரம் மகள் வீட்டிற்கு வந்தபோது hostel- mate பாலாமணி என்ற பெண்ணிடம் அந்தச் செடிக்குத் தண்ணீர் ஊற்றும்படி கூறிவிட்டு வந்திருக்கிறாள்.சில நாட்கள் சென்றபின் phone செய்து செடியைப்பற்றி விசாரிக்க, அந்தப் பெண், ' சிக்கு செத்து சுக்கு நூறாயிருச்சு ' , என்று சொன்னதாக என் மகள் சொன்னாள். ஆனால், அந்தச் செடி நன்றாகத்தான் இருந்தது. அவள் விளையாட்டாக, எதுகை மோனையாக, 'சிக்கு, சுக்கு ' என்று சொல்லியிருக்கிறாள்.
ஆனால் என் மகளுக்கு aloe vera செடி பிடித்தமானது. 'Agri Intex', என்ற பெயரில் agricultural exhibition கோவையில் போட்டிருந்தார்கள். என் husband க்கு studentsஐ அழைத்துச் சென்று காண்பிக்க வேண்டிய வேலை. அவர்கள் முன்னதாகவே bus- ல் சென்று விட நாங்கள் எங்கள் இரண்டாவது மகளையும் அழைத்துக் கொண்டு car- ல் சென்றோம். அங்கே பத்து ரூபாய்க்கு ஒரு சின்ன aloe vera நாற்று வாங்கிக்கொண்டு வந்தோம். ஒரு பெரிய பூத்தொட்டியில் நட்டு வைக்க அது பெரியதாக வளர்ந்தது. அதன் உள்ளிருக்கும் சாற்றை face- க்கு apply செய்வோம்.
கற்பூரவல்லிச் செடி ஒன்றும் வைத்திருந்தோம். மணமாக இருக்கும் அதன் இலைகளைப் பிய்த்து love birds க்குப் போடுவோம். Part - 2 வில் சொன்ன கொய்யா மரம் சிறிய கன்றாக இருந்தபோது இலைகளைப் பார்த்த போது சீதாப்பழ மரம் போல இருந்தது. இதுவும் வளர்ந்து காய்த்தது.
Adenium plant - ஐ ஆரம்பத்தில் தொட்டியில் வைத்திருந்தோம். இதன் அடிப்பகுதி கிழங்கு போல் வீங்கி அழகாக இருக்கும். Rose- அதாவது light pink பூக்களை உடைய அழகிய இந்தச் செடி Desert Rose என்றும் அழைக்கப்படுகிறது. இதன் botanical name Adenium obesum என்பதாகும். மேலே சொன்னபடி தொட்டியில் இருந்த அடிப்பகுதி தொட்டி கொள்ளாதபடி பெரியதாக ஆகிக் கொண்டிருக்கவே, தொட்டியில் இருந்து எடுத்து நேரடியாக மண்ணில் நட்டேன்.
குன்னூர் ஞாபகமாக உன்னிச் செடி ஒன்று வளர்த்தேன். ஈரோடு சுரபி நர்ஸரியில் சிறிய நாற்று கிடைத்தது. நான் rose colour flower கொண்ட செடி கிடைக்குமா என்று பார்த்தேன். ஆனால் red colour பூக்களைக் கொண்ட செடிதான் கிடைத்தது. இருப்பினும் இந்தப் பூச்செடியே அழகாகத்தான் அமைந்தது.
ஒரு தரம் எங்கள் வீட்டு rose செடி ஒன்று tall ஆக வளர்ந்து இருந்தது. அதில் maroon red கலரில் பெரிய ரோஜாப்பூ மலர்ந்திருந்தது. அப்போது பக்கத்து வீட்டு சசிகலா என்பவர் ' இது எப்படி இப்படி வளர்ந்தது?' என்கிற ரீதியில் விசாரித்தார். அதற்கு பதிலளித்த நான், மேலும் 'இந்த மாதிரி நகாசு வேலையெல்லாம் நான்தான் செய்வேன்.' என்று சொன்னேன். (நகாசு வேலை என்பது நுணுக்கமான தங்கநகை வேலைப்பாடு ஆகும். இந்த இடத்தில் அது செடி வளர்ப்பதில் உள்ள நுணுக்கத்தைக் குறிக்கிறது.)
அதன்பின் வெகுகாலம் சென்று அவர்கள் வீட்டில் அதே மாதிரி உயரமான rose செடியும் சிவப்பு ரோஜாப்பூவும் இருந்தது. எங்கள் வீட்டு Master bedroom- ன் ஜன்னலைத் திறந்தால், அந்தப் பூ தெரியும். இரண்டாவது மகளிடம், " ஜன்னலைத் தெறந்தா ரோஸ் தெரியுது", என்று காட்டிய போது, " இதைக் கூட blogல எழுதலாம் '' என்றாள்.
இவ்வாறாக, செடி வளர்த்த கதை, பள்ளிச் சிறுமியாக குன்னூரில் தக்காளிச் செடி செண்டுமல்லிச் செடி வளர்த்தது முதல் ஈரோட்டில் மரங்கள் வளர்த்தது வரை வளர்ந்தது. ஆனால், இன்னும் முடியவில்லை.
Comments
Post a Comment