மழை விட்டும் தூவானம் விடவில்லை
மழை விட்டும் தூவானம் {தூறல்} விடவில்லை என்பது பழமொழி. (இதை வைத்து வருகின்ற தமிழ்த் திரைப்படப் பாடல்கள்
- 'தூவானம் இது தூவானம் இது தூவானம்.. ...'
- 'மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் .. ..... ' )
அதுபோல் , ' மலைராணியின் மடியில் ' தொடர் முடித்து epilogue எழுதிய பின்னரும் இன்னும் கொஞ்சம் எழுதத் தோன்றுகிறது.
12th standard படித்த போது evening school விட்ட பின்னர் தோழி ராதாவுடன் பேசியவாறே, ( அதிலும் குறிப்பாக discuss பண்ணுவது' குமுதம்' வார இதழாகத்தான் இருக்கும் ) வீடு திரும்பி வருவது ஒரு pleasant memory. School-இலிருந்து மேல் வழி, கீழ் வழி என்று இரண்டு வழிகள். இரண்டுமே பூட்டுகளை உடைய gate- களைக் கொண்டவை. இரண்டு வழிகளும் சற்றே இடைவெளி விட்டு விட்டு concrete படிக்கட்டுகளால் அமைந்தவைதான். அந்த இடைவெளிகள் குறுக்காக அமைந்த தெருக்களும், mount ரோடும்தான். Mount road குன்னூர் bus stand பக்கத்திலிருந்து ஆரம்பித்து Sim's park வரை செல்லும். அவ்வாறு ஆரம்பமாகும் road,மார்க்கெட்டைத் தாண்டி ஒரு வளைவு,விநாயகர் கோவிலைத் தாண்டி ஒரு வளைவு, Government Lawley hospital main gate முன்புறமாக ஒரு வளைவு, church தாண்டி ஒரு வளைவு, St. Joseph's convent பக்கமாக ஒரு வளைவு, - இத்தனையும் கடந்த பின்னர் Sim's park அருகில் ஒரு வளைவு வளைந்து முடிவுறும். இந்த ரோட்டை நாம் அங்கங்கே cross பண்ணும் போது, அது mount ரோடுதான் என்பதே புரியாது. அத்தனை வளைவுகள்!
( இதை எழுதுகையில் இயக்குனர் ஶ்ரீதரின் தமிழ் சினிமா ' காதலிக்க நேரமில்லை ' யில் நாகேஷ் ஒருவருடன் பேசும் வசனம் நினைவுக்கு வருகிறது.
நாகேஷ் - "தலையெழுத்துதானே இது? "
- அய்யோ, ஆமாம், ஆமாம்
நாகேஷ்- இத்துணூன்டு நெத்தியில எவ்வளவு எழுதியிருக்கான் பாத்தியா?
அதைப்போல், இத்துணூன்டு ரோட்டில் எத்தனை வளைவுகள்! )
இப்படிக் கீழிறங்கி வருகின்ற இரு படிக்கட்டு வழிகளும் கடைசியில் ஒன்றிணைந்து Mount Road- ல் சேரும். படிக்கட்டுகளில் பேசியவாறே வரும் ராதாவும் நானும் mount road - ல் நடந்து வந்து Crown Bakery தாண்டி ( இந்த bakery- க்கு Mahatma Gandhi visit செய்திருக்கிறார் . ஒரு பழைய news paper cutting வைத்திருந்தார்கள். இப்போது அந்த paper cutting இருக்கிறதா என்று தெரியவில்லை.) petrol bunk அருகில் இருக்கின்ற taxi stand அருகில் பிரிவோம். ஒரு நிமிஷம் நின்று பேசிவிட்டுத்தான் பிரிவோம். டக்கென்று ஒரு தனிமை பற்றிக் கொள்ளும். அவள் பஸ் ஏறி அருவங்காடு செல்ல வேண்டும்.
நான் mount road- ல் இருந்து இரண்டு sets of steps ஏறி வீட்டிற்குச் செல்ல வேண்டும். முதலில் concrete steps , அது mount road இலிருந்து குட்டி upper church road - ல் கொண்டு விடும். அதை just cross செய்தவுடன் stone steps எங்கள் மலைப்பகுதிக்கு மேலேறும். ஆரம்பத்தில் உன்னிச் செடிகளும், மேலே இருக்கும் water tank- ன் அருகாமையில் மரங்களும், செடிகளுக்கு இடையே பாதி மட்டும் கட்டப்பட்ட காந்தி மண்டபமும், அதன் அருகில் மிகப் பெரிய கற்பூர மரமும் இருக்கும். அது eucalyptus tree எனப்படும் தைல மரம்.நாங்கள் கற்பூர மரம் என்று அழைப்போம். இது camphor tree அல்ல.
( கிளைக் கதை- இந்தக் கற்பூர மரத்துக்கும் எங்களுக்கும் ஒரு அழகிய வரலாறு உண்டு. உயரமாகவும் , நன்கு படர்ந்தும் இருந்த இந்த மரம், சிறுமியாகப் பார்த்தபோது இன்னும் பெரியதாகத் தெரியும். பயம் இருக்கவில்லை. இந்த மரத்திலிருந்து ஏகப்பட்ட கற்பூரக் காய்கள் உதிர்ந்து கீழே கிடக்கும். அவற்றை collect செய்து கொண்டு வந்து veranda வில் குறுக்கும் நெடுக்குமாக வரிசையாக வைத்து வீடு கட்டி விளையாடுவது இனிமையான ஒன்று. சின்னஞ் சிறுமியாக Ooty யில் இருந்தபோதே succulant plant பிய்ப்பது, பின்னர் Wellinton- ல் ஜகரண்டா மலர்கள் பொறுக்குவது போன்ற வழக்கம் இருந்ததால் தனியாகவே சென்று காய்களைப் பொறுக்கி வந்தேன். எங்கள் வீட்டில் இருந்த அதே replica ஆக , முன்புறம் நீண்ட closed வராண்டா, front room,bedroom, kitchen, bathroom ஆகிய பகுதிகளை வரிசையாக காய்களை வைத்து அடுக்கியது வரைபடம் போன்று அழகாக இருந்தது .இந்தப் பெரிய மரத்தை வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. அநேகமாக விழுந்து விடும் நிலையில் இருந்திருக்கலாம். எங்கள் மலைப்பகுதியின் அடிவாரத்தில் fire service station இருக்கிறது. இந்த மரத்தைப் பற்றி ஒரு முறை என் தங்கை மற்றும் என் இரண்டாவது மகளுடன் discuss பண்ணிக் கொண்டிருந்த போது, என் தங்கை, 'அந்த மரம் கீழே fire service வரை நீளமாக விழுந்து கிடந்தது. படிக்கட்டுல இறங்கிக் கீழே போனா late ஆகும். மரத்துல போனா சீக்கிரம் போய் விடலாம் ' என்றாள் . என் பெண் ' மரத்துல போறதா? ' என்று குழப்பத்துடன் கேட்டாள். கதைகளில் வரும் witch எல்லாம் சீமாரில் ( broom)ஏறிப் பறக்குமே, அது அவளுக்கு நினைவுக்கு வந்திருக்கக் கூடும்.
விளக்கம் என்னவென்றால் விழுந்த மரம் நீளவாக்கில் கிடந்து fire service station வரை இருந்தது. வெட்டப்பட்டுக் கிடக்கும் மரத்தின் உயரம் நீளமாக மாறி விடுகிறதல்லவா? பெரிய மரமாதலால் நல்ல அகலம். அந்த அகலமான மரத்தின் மீதேறி பாதை போல் நடந்தால் வேகமாகக் கீழே சென்று விடலாம். ஒரு short cut போல. )
இந்த Hardwood Quarters ஆனது, bus stand- ன் பின்புறமாகவும், மேல்புறமாகவும் உள்ள மலைப் பகுதியில் அமைக்கப்பட்ட அரசாங்கக் குடியிருப்பு ஆகும். நிறைய உன்னிச் செடிகளையும், கொஞ்சம் மரங்களையும் கொண்ட Hare Wood Quarters- க்குச் செல்லும் stone steps கனவில் வரும். இந்த கனவில், மற்றும் எங்கள் area வுக்குப் போகும் படிகளற்ற மாற்று வழியும் கூட வரும்.. கனவுகள் ஒரு வித பயத்துடன்தான் எப்பொழுதும் வரும். அது போல கனவில் லைட் இருக்காது. இப்போதும் படிக்கட்டில் நிஜத்திலும் லைட் இல்லை.
மேலே குறிப்பிட்டிருந்த friend Radha சென்னையில் மாமா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்து விட்டு, எங்கள் school -ல் அப்போது வந்து சேர்ந்திருந்தாள். அப்போது சென்னை என்று பெயர் மாற்றப் படவில்லை. மெட்ராஸ் என்றே இருந்தது. Madras - ல் electric train ஒரு நிமிஷம்தான் நிற்கும். அதற்குள் ஏறி விட வேண்டும் என்று சொன்னாள். அதைக் கேட்டபோது கொஞ்சம் பயமாக இருந்தது.
அதே சென்னைக்கு ( மேற்குறிப்பிட்டபடி அப்போது Madras) ,school - இல் இருந்து tour arrange பண்ணினார்கள். நாங்கள் இருவரும் சென்றோம். அப்போது ராதா, tour போகும் போது monthly periods- க்கு துணி use பண்ணக் கூடாது. Care-free தான் use பண்ண வேண்டும்.அது medical shop - ல் கிடைக்கும் என்று சொன்னாள். இருவரும் பேசியதோடு சரி. யார் medical shop- க்குப் போவது? When we got down from the train at Madras railway platform many of our school students were wearing sweaters. Because many got used to wearing sweater almost always while going out. Radha commented about that.
அப்பா Revenue department- ல் வேலை செய்ததால் usual- ஆக காலை break fast முடித்த பின் கிளம்புவார். சில postings ல் மாலை 5.30 or 6 pm வந்து விட முடியும் . வரும்போது கையில் ஒரு தீனிப் பொட்டலம் இருக்கும். அபூர்வமாக(rarely) சில சமயங்களில் சினிமாவுக்கு அழைத்துச் செல்வார். மற்றும் சில postings ல் வர மிக்க நேரமாகி விடும். மழைக்காலத்தில் ஒரு முறை அப்பா deputy tahsildar ஆக இருந்த போது flood relief duty. 1978 என்று நினைக்கிறேன்.நிற்காத மழையிலும், வாட்டும் குளிரிலும், தனிமை வருத்தும் இரவிலும் அப்பாவின் வருகைக்காக நாங்கள் காத்திருந்தோம். அதிகாலையில்தான் வந்திருக்கிறார். அவர் வந்தது தெளிவாக நினைவில் இல்லை. என் தங்கையும் நானும் தூங்கிப் போயிருக்கக் கூடும்.சிறு பிள்ளைகள்தானே.
Flood relief - க்காக foreign ( UK or US ஆக இருக்கக் கூடும்) இலிருந்து வந்தவைகளில் ஒரு நீளமான black and silver lines உடைய பளபளப்பான gown- ம், இரண்டு soft ஆன குட்டிக் கம்பளிகளும் எடுத்துக் கொண்டு வந்தார் என் தந்தை. அந்த gown- ஐ alter செய்து long skirt ஆக மாற்றிக் கொண்டேன்.
Comments
Post a Comment