நாலு கண்ணு ஆடு
கணவர், குழந்தைகளுடன் , தமிழில் dub செய்யப்பட்ட (Jumanji 2) Zathura என்ற space adventure சினிமா பார்த்தேன்.அதில் two boys - brothers and a girl- (elder sister) would get caught in the space along with their house, that is while being inside the house. How it would have had happened is, the boys would find a magic board game and start playing. The first move itself would take the house to space and there had been a meteor shower .Each move has a danger like this, except one or two moves. The fearful fact of this imaginary game is, you have to play and win and the house will become normal in the same place in earth again. But, losing will pull you into Zathura which is a black hole !
இதில் கடைசியில் ஜெயித்து வீடு பழையபடி ஆகி விடும். அதாவது பூமிக்குத் திரும்பி வந்து பழையபடி இருக்கும். சரி, அப்படித்தானே கதை முடிய வேண்டும். அது ok. ஆனால் படத்தின் நடுவில், ஓரிடத்தில் வரும் scene ஐ இங்கே பகிர விரும்புகிறேன். பையன்கள் விளையாடிக் கொண்டிருந்த game board தவறி zorgons எனப்படும் aliens உடைய ship- ல் விழுந்து விடும். அதை எடுப்பதற்கு 6 வயது சிறுவனான தம்பி மெதுவாக நடந்து செல்வான். அவ்வாறு நடந்து செல்லும் போது வழியில் நிறைய ஆடுகள் நின்று கொண்டிருக்கும். குட்டிப் பையன் தன் பயத்தைக் குறைக்கும் பொருட்டு, ' ஆடு, சாதாரண ஆடு ', என்று வாய் விட்டுச் சொல்லியவாறே நடப்பான். அப்போது சட்டென்று சில ஆடுகள் முகத்தை அவன் பக்கம் திருப்ப அவைகளுக்கு நான்கு கண்கள் இருக்கும். உடன் panic ஆன பையன், ' அய்யோ, நாலு கண்ணு ஆடு ', என்று சொல்வான்.
இந்த சினிமா காட்சியானது, முதல் மகள் பெங்களூருக்கு பயணம் செய்தபோது ஏற்பட்ட ஒரு சம்பவத்தை அடுத்து நினைவு வந்தது. இப்போது அந்த சம்பவத்தைக் கூறுகிறேன்.
காரில் குடும்பத்தினருடன் பயணம் செய்து கொண்டிருந்த போது, இடையே கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு famous sweet shop -இற்குச் சென்றிருக்கிறார்கள். Rest room போவதற்கு கடையை ஒட்டியபடி இருக்கும் படியிறங்கிச் செல்ல வேண்டும். அப்படிச் சென்ற என் மகள் முதலில் இருக்கும் western toilets- ஐத் தவிர்த்துவிட்டு அதனைத் தொடர்ந்து இருக்கும் Indian toilet- ல் நுழைந்திருக்கிறாள். நுழைந்தவுடன் அவள் கண்களில் பட்ட காட்சிகளைத் தொடர்ந்து அவள் மனதில் தோன்றிய எண்ணங்களைக் கீழே கொடுக்கிறேன்.
' என்ன இவ்வளோ பெரிய ட்யூபை இங்க போட்டு வெச்சிருக்காங்க!?' ( ஒரு தடிமனான கருப்பு நிற tube, கால் வைக்கும் இடத்திற்கு அருகில் )
' என்ன, tube போகப்போக சின்னதாகுது!?'
'என்ன, ட்யூப் அசையுது!?'
எப்படித் திரும்பி, எப்படிப் படியேறி மேலே வந்ததை என் பெண்ணே அறியவில்லை. அங்கு நின்று கொண்டிருந்த worker இடம் ' அண்ணா, பாம்பு ', என்று கூறி விட்டு டீ குடித்துக் கொண்டிருக்கிறாள். சிலர் தடிகளை யெல்லாம் எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். எந்த ரூம் என்று அடையாளம் வேறு படிகளில் இறங்கிச் சென்று காட்டியிருக்கிறாள்.
இவ்வாறு தகவல் தெரிவித்து விட்டு, pepper போட்ட cashew nuts என்றெல்லாம் அடுத்த step போய்க் கொண்டிருக்கிறது. கீழே சென்றவர்கள் வெலவெலத்துப் போய் மேலே திரும்பி வந்து விட்டார்கள். ஆறு அடி கருநாகம் என்று கிலியுடன் கூறி இருக்கிறார்கள். ஆனால், என் மகளோ எந்த fussம் பண்ணவில்லையாதலால் அவர்கள் அத்தனை பெரிய பாம்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கதவிற்குப் பின்னால் இருந்ததாம். Alert ஆகி கதவிற்குப் பின்னால் பதுங்கி இருக்கும் போல. அடித்தால் 'சாமி குத்தம்' ஆகிவிடும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், அதைவிட அது risk என்றாள் என் பெண். Snake rescue team க்கு அறிவிக்கப் போவதாக சொன்னார்களாம்.
சில பெண்கள் கையெடுத்துக் கும்பிட்டார்களாம். எங்களுக்கு இந்த விதமான நம்பிக்கைகள் கிடையாது. (கிளைக் கதை - எப்படி இந்த சம்பவம் எனக்கு ' ஆடு.., சாதாரண ஆடு.., அய்யோ நாலு கண்ணு ஆடு ' என்ற scene - ஐ நினைவுக்குக் கொண்டு வந்ததோ, அது போல இரண்டு புத்தகங்களையும் நினைவுக்குக் கொண்டு வந்தது. ஒரு பழைய ஆங்கில புத்தகத்தில் இருந்து ஒரு quote - something like this, ' In a country where 20,000 people die of snakebite every year, people worship snakes '. என்று வரும். அநேகமாக அந்த புத்தகம் ' Freedom at midnight ' ஆக இருக்கக்கூடும்.
இன்னுமொரு கதை , என் இரண்டாவது மகளின் பாடப் புத்தகத்தில் ( English non detail ) இருந்து படித்தது ஆகும். அது குஷ்வந்த் சிங் எழுதிய ' Mark of Vishnu ', என்ற கதை. இதில் கங்கா ராம்( Gunga ram) என்பவன் தினமும் நாகத்திற்குப் பால் வைப்பவன்.(kalanag). சிறுவர்கள் அதை அடித்து முதுகு எலும்பை உடைத்து பிஸ்கட் டின்னில் அடைத்து பள்ளிக்கு எடுத்துச் செல்கிறார்கள். ஆசிரியர் டின்னைத் திறக்கும் தருணத்தில் பாம்பு தலையைத் தூக்கிப் படமெடுக்க அவர் chair உடன் பின்னால் விழுகிறார். பையன்கள் எல்லாம் desk மேல் ஏறி நின்று கொண்டு கூக்குரல் இடுகிறார்கள். பாம்பு டின்னில் இருந்து வெளியேறி, காயமடைந்த உடலை சிரமப்பட்டு இழுத்துக் கொண்டு கதவை நோக்கிச் செல்கிறது. அச்சமயம் கங்கா ராம் ஒரு தட்டில் பாலை ஊற்றி பாம்பிடம் நீட்ட, பாம்பு சினம் கொண்டு கொத்தி விடுகிறது. அவன் தவித்து விழுந்து விடுவான். பாம்பு வெளியேறி ஒரு சாக்கடைக்குள் சென்று மறைந்து விடும். உடல் நீலமேற, வாயில் நுரை தள்ள கங்காராம் கிடக்க, அருகில் வந்த ஆசிரியர் கைக்குட்டையால் அவன் முகத்தைத் துடைக்க முற்படுவார். அப்போது, கங்காராம் நெற்றியில் பாம்பு கொத்திய இரு புள்ளிகளிலிருந்து வடிந்த இரத்தமானது கீழ்ப் பகுதியில் ஆங்கில U shape - ல் இணைந்து 'Mark of Vishnu ' போலக் காட்சியளிக்கும். )
இந்தக் கதைகள் எல்லாம் ஒரு புறமிருக்க நாம் நிகழ்வுக்கு வருவோம். இவ்வாறாக என் மகள் எந்த சந்தடி சலனமும் இல்லாமல் அந்த இடத்திலிருந்து அகன்றது ஒரு great escape! அதன் பின்னரும் அங்கிருந்தவர்களுடன் நடந்து கொண்டது ஒரு great calm attitude.
Comments
Post a Comment