பள்ளிப் பருவ நண்பர்கள்






                            மனிதர்கள் , இந்தியர்கள், டாக்டர்கள், எஞ்சினியர்கள் இன்ன பிற இந்த வகைக் குறிப்பிடுதல்கள் எவ்வாறு gender specific இல்லையோ அது போல்தான் நண்பர்கள் என்பதும் gender specific இல்லை. என்னுடைய பதின்ம வயது பள்ளித் தோழி ' ஒரு புள்ளியில் '  புத்தகத்தைப் படித்து விட்டு தன்னைப் பற்றி எழுதவில்லை என்று குறைபட்ட போது,  ' மூன்றாவது புத்தகத்தில் உங்களைப் பற்றியெல்லாம் வரும்' என்று கூறினேன். ஆதலால் இந்த post- ல்,  விடுபட்ட என்னுடைய நண்பர்களுடன் என் வழிப்பயணத்தை ( journey )  விளம்புகிறேன். 

        முதல் முதலில் நான் தோழியாக உணர்ந்தது சபியா  என்னும் பெயர் கொண்ட   அக்காதான்.  அப்போது எனக்கு ஆறேழு வயது. அக்கா என்றால் ஏறக்குறைய பத்து வயது பெரிய பெண்.  அந்த அக்காவிற்கு ஒரு லவ்வர் வேறு இருந்தான். ஒருதரம் அந்தப் பையனை சபியா எனக்கு அறிமுகப் படுத்திய போது, நான் வெட்கப்பட்டு அந்தப் பெண்ணின் அருகில் பதுங்கி நின்றேன். மற்றும் ஜகதா என்னும் சின்னப் பெண், ஆக்கிரி சித்தி எனப்படுபவரின் வீட்டுக் குழந்தைகள் ஆகியோர் அருகில் குடியிருந்தனர். ஆக்கிரி என்று குறிப்பிடப் பட்டவர் ஹாகர் என்ற பெயரைக் கொண்டவராக இருந்திருக்க வேண்டும்.  அப்புறம், ஒரு காரணத்தால் சபியாவின் கல்யாணம் தடை பட்டு விட்டது என்பதை நான் அறிந்தபோது மன வேதனை உண்டாயிற்று. பல வருடங்கள் கழித்து மீண்டும் அந்த இடத்திற்குச் சென்ற போது,  ' சபியா என்பவர்கள் இங்கு இருந்தார்களே?'  என்று   கேட்டேன். மார்க்கெட் அருகில் இருக்கிறார்கள் என்று பதில் வர, திருமணம் ஆவிட்டதா என்று விசாரித்தேன். எதுவும் பழைய விஷயம் தெரிந்திருக்குமோ என்னவோ ஒரு பெண்மணி , ' ஆகி விட்டது,ஆகி விட்டது, குழந்தைகள் இருக்கிறார்கள் ' , என்று கூறி என் வயிற்றில் பால் வார்த்தார்.

                


           ஐந்தாம் வகுப்பில் சில girls , friends ஆனார்கள். அதில் ஆயிஷா மரியம் பற்றி already குறிப்பிட்டுள்ளேன். எங்கள் வகுப்பில் இன்னும் ஒரு பெண்ணுடன் நான் முன்னர் கூறியபடி நானும், ஆயிஷா மரியமும் dance ஆடுவோம். மேலும், மூன்று girls குட்டிச் சுவரில் உட்கார்ந்து கிளி, குருவி என்றெல்லாம் பேசிக் கொண்டு இருப்போம். இன்னும் ஒரு நண்பனாக ஆயிஷா மரியமும், நானும் விளையாடியது தம்பு என்றழைக்கப்பட்ட தங்கராஜ் உடன். அவன் லில்லி miss - ன் மகன்.எங்கள் வயதை உடையவன்தான் என்றாலும் வேறு shool- ல் படித்துக் கொண்டிருந்தான். ஆனால் எங்கள் class பையன்களுடன் விளையாடியதில்லை. அவர்கள் கூட்டமாகவும், குறும்பு செய்து கொண்டும் இருப்பார்கள். இருந்தாலும் ரஃபீக், ஆரோக்கிய நாதன்,நொன்டி ரஃபீக் ஆகிய பையன்களை எனக்குத் தெரியும். மேலும் முந்தைய பதிவுகளில் எங்கள் area நண்பனான சேகர் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் அல்லவா, அவனும் என் வகுப்புதான். 

     சற்றே பெரியதான பின்னர், line - ல் முதல் வீட்டில் குடியிருந்த Srinivasan என்பவரின் மகளான  தோழி உமாவும் நானும் பேசியவாறே  line வீடுகளின்  parallel- ஆக நடந்து கொண்டிருப்போம் . அவள் என்னை விட இரண்டு வயதுபெரியவள் என்று நினைக்கிறேன். அதனால்தானோ , அல்லது வேறு ஏதோ காரணங்களாலோ,அவள் பையன்களுடன் கிரிக்கெட், seven stones போன்றன விளையாட வர மாட்டாள். அதிகம் ஊர் சுற்றவும் வரமாட்டாள். ஆனால் நான் அதிகம் ஊர் சுற்றுவேன். அது நான் விரும்பி அமைத்துக் கொண்டதா or என் சூழ்நிலை என்னை அவ்விதம் ஆக்கி வைத்ததா என்று தெரியவில்லை. ஏனென்றால், அம்மா அப்பாவின்  native place plains ஆகவும், அப்பாவின் employment மற்றும் எங்களின் school education நீலகிரியிலும் இருந்ததால் நாங்கள் நீலகிரிக்கும், plains- க்கும் அடிக்கடி travel பண்ணிக் கொண்டிருப்போம்.  மேலும்,என் நன்னீமா (அம்மாவின் அம்மா), நான் கைக்குழந்தையாக இருந்தபோதே தவறி விட்டதால், தன் தங்கைக்கும், மூன்று தம்பிகளுக்கும் திருமண வாழ்வை அமைத்துத் தர வேண்டிய பொறுப்பு அம்மாவிடம் வந்தது. அடிக்கடி ஊருக்குப் போவதற்கு இதுவும் ஒரு காரணம். Ok, மறுபடியும் உமாவுக்கு வருவோம் . தன் தம்பியை   'ஆறே முக்காலும் அரையும் காலும் ' என்று திட்டினாள் - அதாவது ஏழரையாம்! . மற்றும் அவள் பெரிய பெண் ஆனவுடன், பட்டி வைத்த blouse போட்டால் அழகாக இருக்கும் என்று கூறினாள். 

                                       







            ஏழாம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில், ரமலான் நோன்பு மாதத்தில் fasting- ன் போது சில நாட்களில் ரூபினா, மஹமூதா ஆகிய தோழியருடன்  மதியம் lunch time - ல் ரூபினா வீட்டிற்குச் சென்று மதியத் தொழுகையைத் தொழுது வருவோம்.  ரூபினா வீடு பள்ளிக்குச் சற்று அருகாமையிலேயே இருந்தது.அவளின் உடன் பிறந்த அண்ணன்தான் பழனி பாபா என்பது பல decade கள் சென்றபின்னரே தெரிய வந்தது. அவரின் சொந்தப் பெயர் வேறு. பழனி பாபா என்பது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வைத்த பெயர்.

   என் தோழி ரூபினா பற்றி நிறைய சொல்லலாம். அமைதியாகவும், அழகான நிறத்துடனும் இருப்பாள் . ( இப்போதும் அப்படித்தான் இருக்கிறாள்.  Pleasant ஆகத்தான் பேசுகிறாள். சிரித்த முகம் ). நன்றாகப் படிக்கக் கூடிய பெண். ஆனால், குடும்பச் சூழ்நிலை காரணமாக ( financial problem அல்ல ) படிப்பை முடிக்கும் முன்பே திருமணம் முடிந்து விட்டது அவளுக்கு. ஒருமுறை எங்கள் வீட்டிற்கு உறவினருடன் வந்தபோது நான் அவளிடம் இதைப் பற்றிப் பேசினேன்.அப்போது நான் Medical College- ல் படித்துக் கொண்டோ அல்லது Pasteur Institute - ல் வேலை செய்து கொண்டோ இருந்தேன். சரியாக ஞாபகம் இல்லை.   பின்னர் அவள் Correspondence- ல்  Twelfth முடித்து BA English Literature, MA English Literature படித்து Montessori training எடுத்து இப்போது school நடத்திக் கொண்டிருக்கிறாள்.   கணவரும், குழந்தைகளும் உள்ளனர்.

      ஒருதரம் interval-ன் போது மஹமூதா ஆட்டுக்கார அலமேலு என்ற திரைப்படத்தில் வரும் 'பருத்தி எடுக்கையிலே' பாடலில்  ( - ' திருமுருகன் அருளாலே திருமணம்தான் செய்திடுவோம் ' என்று பாடுவதற்கு பதிலாக )  ' திருமுருகன் அருளாலே திருமணந்தேஞ் செய்திடுவோம் ' என்று பாடுவதாக மேற்கோள் காட்டினாள். பொதுவாக அவள் அதிகம் பேச மாட்டாள் என்று நினைக்கிறேன். அதுவும் சினிமா பற்றியெல்லாம் பேசவே மாட்டாள. அப்படிப்பட்ட அவள் ' டக் 'கென்று அவ்வாறு சொன்னது வியப்பாக இருந்தது. 

     Sekaramma  ( ரத்னா என்று பெயர், 3rd paragraph - ல் வரும் சேகரின் mom. ) , என் அம்மாவின் தோழியாக இருந்த போதிலும் என்னுடன் ஒரு உரிமையான friendship வைத்திருந்தார். நான் முன்பே கூறியபடி பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தபோது அவரும் என் அம்மாவும் turn போட்டுக்கொண்டு அவரின் மகனையும், என்னையும் அழைத்து வருவார்கள். அப்படி வரும்போதுதான் சின்னதான பாலத்தின் மேல் நின்று, ' குள்ள வாத்து போகுது ; குஞ்சு பொறிக்கத்  தெரியாது ' என்று கீழே நீந்திக் கொண்டிருந்த வாத்துகளைப் பார்த்துப் பாடியது.  அம்மா ஊருக்குச் சென்றிருந்தபோது பல நாட்கள் அவர்கள் வீட்டில் தங்கியிருக்கிறேன்.  Used to be with her while she was washing clothes, preparing potato fry etc. She told me once later on-  ' நீதான் quiet ஆ இருப்பியே ' என்று. 

       இதுபோல் friendly ஆக இருந்த இன்னொருவர் கண்ணாம்மா என்று அழைக்கப்படும் பக்கத்து வீட்டு மாமி. இவர்தான் எனக்கு குமுதம் வாராவாரம் தருவார்.  சோவியத் யூனியன் என்ற புத்தகமும் தருவார். அச்சனக்கல் என்னும் அவரது ஊரில் நடைபெற்ற  பண்டிகைக்கு அழைத்துச் சென்றார்கள். கூட்டமாக ஹட்டி  என்று அறியப்படும் அவர்கள் ஊரில் தங்கியது சுகமான அனுபவம்.  குன்னூரில் இருந்து ஊட்டி செல்லும் நெடுஞ்சாலையில் பயணித்து, Valley View  ( கேத்தி) என்கிற இடத்தில் கீழே இறங்கிச் சென்றால் அச்சனக்கல் என்னும் அவர்கள் hutti வரும்.  எங்கள் தெரு போலவே வரிசையில் வீடுகள். தெருவிலிருந்து  நான்கைந்து குழந்தைகள் கீழிறங்கி வெகு தூரம் புல்வெளியினூடான மண் பாதையில் நடந்து சென்றோம். சுற்றிலும் பசுமை மட்டுமே.

         அங்கு கிடைத்த சுவையான சுய்யான் போன்ற பணியாரமும், .. வெண் சோற்றில் ஊற்றிச் சாப்பிட்ட கிழங்கு போட்ட அவரைக் குழம்பும், .. எழுதும்போதே நாக்கு ஊறுகிறது.

        பண்டிகைக்காக மாலை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 'பூந்தென்றலே, நல்ல நேரம் காலம் சேரும், பழகிய பலன் உருவாகும்' என்கிற பாடலுக்கு இருவர் டூயட் ஆடினர். ' விதி பந்த தாரி', என்ற நாடகம் நடைபெற்றது. அதற்கு ' விதி வந்த வழி ' என்று பொருள்.

Comments

Popular posts from this blog

அப்பாவின் ஆங்கிலம்

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]