அப்பாவின் ஆங்கிலம்

Prologue :-
அப்பாவை நாங்கள் 'அத்தா ' என்று அழைப்போம் . ஆயினும் general purpose - க்காக அப்பா என்றே குறிப்பிடுகிறேன்.
Usual -ஆக அந்தக் கால SSLC என்ற phrase சில decade களுக்கு முன் ரொம்ப famous ஆக இருக்கும். அதாவது, அப்போதைய கால கட்டங்களில் அச்சமயம் Degree படித்தவர்களை விட முன்னர் SSLC படித்தவர்களுக்கு அதிகம் ஆங்கிலம் தெரியும், அல்லது ஆங்கிலம் நன்றாகப் பேசுவார்கள் என்பது அந்த phrase-ன் பொருள். இதற்கான காரணம் British- ஆட்சி அப்போதுதான் முடிந்திருந்ததாலோ, அல்லது Anglo- Indian teachers, both males and females இருந்ததாலோ கூட இருக்கலாம். Why it is mentioned here as both males and females is - எங்களைப் பொறுத்தவரை டீச்சர் என்றால் பெண் டீச்சர்தான். ஆண்கள் வாத்தியார்கள்.
என் தகப்பனார், அந்தக் கால SSLC. அது மட்டுமன்றி அவர் 1958- ல் நீலகிரியில் Revenue department -ல் வேலைக்குச் சேர்ந்தார். சொல்லவும் வேண்டுமா? நீலகிரியின் ஆங்கில உபயோகம் அனைவரும் அறிந்ததே. ஆதலால் அவரின் ஆங்கில usage மிக இனிமையாக இருக்கும். என் பெண்கூட ஒருமுறை நைத்தா ( தாத்தா), ' egg scramble ' னு சொல்ல மாட்டாங்க, ' scambled eggs ' னுதான் சொல்வாங்க என்றாள்.
ஒரு கதை சொல்லி இருக்கிறார். கதை என்றுதான் நினைக்கிறேன். இப்படித்தான் என்று நினைக்கிறேன். தந்தியை ஒருவனிடம் கொடுத்து அனுப்பினார்களாம். அதில் Hang Him Not Let Him Free என்று எழுதப் பட்டிருந்ததாம். அவனோ Hang Him- க்கு அருகில் இருந்த கமா ( , comma ) வை Hang Him Not அருகில் மாற்றி தூக்கு தண்டனையிலிருந்து தப்பித்தானாம் என்று கூறினார். அதாவது, Hang Him, Not Let Him Free என்றில்லாமல், Hang Him Not, Let Him Free என்பதாக. Punctuation - ன் importance இதிலிருந்து தெரிகிறதல்லவா?
எல்லாரும் Collector Office என்று சொல்லும் போது, Collector's Office என்று சரியாகச் சொல்வார். Board இலும் அப்படித்தான் எழுதப் பட்டிருக்கும். மற்றும் by the by, so and so போன்ற வார்த்தைகள் அவரின் superior officers இடமிருந்தோ அல்லது உடன் வேலை செய்பவரிடமிருந்தோ பழகி, தகுந்த சந்தர்ப்பங்களில் அழகாக உபயோகிப்பார்.
கொஞ்சம் secret ஆகவும்,கொஞ்சம் polishedஆகவும் tea வேண்டும் என்பதை beverage என்று குறிப்பிடுவார். இதைப் பார்த்து என் குழந்தைகளும் (வீட்டில் வேலை செய்பவர்களுக்குத் தெரியாமல்) secret ஆக சொல்ல வேண்டும் என்றால் beverage என்று சொல்வார்கள். எங்கள் வீட்டருகில் வசித்த விஜியின் தம்பி ரங்கராஜனைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் அவன் brilliant என்று சொன்னார். நானாகவிருந்தால் intelligent என்று சொல்லியிருப்பேன்.
எங்கள் அப்பாவுடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரர்கள். அவர்கள் அனைவருக்கும் ஆண் குழந்தைகள் இருந்தனர். அம்மாவுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். அவர்களுள் மூவருக்கு ஆண் குழந்தைகள் இருந்தனர். ஆனால், அப்பாவிற்கு ஆண் குழந்தை இல்லை.பெண் குழந்தைகள் மட்டுமே. எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள்தான். என்னுடைய முதல் மகளுக்கு பையன் பிறந்த போது ' welcome change ', என்று சொன்னார். ஒரு தேர்ந்த அனுபவசாலியான அவரின் இந்த comment என்னை மகிழ்விக்கிறது. இரண்டு தலைமுறைகளாக பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றிருந்த குடும்பம் என்பதால் மட்டுமே அவர் இவ்வாறு சொன்னாரே தவிர அவர் பெண்களைத் தாழ்வாக நடத்தியவரல்ல. தன் தாய்க்கும் ( எங்கள் பாட்டி ), தன் மனைவிக்கும் ( எங்கள் அம்மா ) சிறப்பான மதிப்பளித்தவர். நாங்கள் படிக்கும் காலங்களில் எங்களின் முன்னேற்றங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்தவர்.
அப்பாவின் இந்தக் கருத்தை ஊர்ஜிதம் செய்தவர் என் முதல் மாமாவின் மனைவி (மம்மாணி என்று அழைப்போம்). அவர்கள் என்னிடம் , ( எங்கள் மகளுக்கு ஆண் குழந்தை பிறக்காது பெண் குழந்தை பிறந்திருந்தால் ) ' பொட்டப் புள்ளக் கூட்டம் ' என்று சொல்லி விடுவார்கள், என்றார்.
Chest of draws. ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம் முதற்கொண்டே எங்கள் வீட்டில் ஈட்டி மரத்தால் செய்யப்பட்ட மேலே சிறியதாக இரண்டும், அதன் கீழ் நீளமாக வரிசையாக மூன்றும் என்று அமைந்த ஐந்து drawer களைக் கொண்ட ஒரு bureau இருந்தது. அதன் height கம்மியாக இருந்த போதிலும் அழகாக இருக்கும். அதை அப்பா 'Chest of draws' என்றுதான் சொல்வார். என் குழந்தைகள் வரை அந்தப் பெயர் தெரியும்.
' Water water everywhere not a drop to drink '. இது கடலில் பயணம் செய்பவனைப் பற்றிக் கூறியது. சுற்றிலும் தண்ணீர்தான். ஆனால், உப்புத் தண்ணீர். ஒரு drop கூடக் குடிக்க முடியாதே! அப்புறம் ' care- of ', என்ற பதம்- இன்னாருடைய care- of லதான் இவன் இருக்கிறான், இந்த care- of ல இதை விட்டரலாம், என்பனவும் அப்பா எங்களுக்கு சொல்லிக் கொடுத்தவை.
கோபமான நேரங்களிலும் ஆங்கிலம் பேசியிருக்கிறார் அப்பா. Office- ல் subordinates- clark முதலானோர் ஒன்றைச் செய்ய delay ஆக்கினால் he would say 'Do, I say! ' . Regarding one relative, he got so much irritated once and told as- 'uneducated ; filtered idiot', என்று. மேலும், ' tit for tat ', என்று பண்ண மாட்டேன், என்று ஒருமுறை சொன்னார். இத்துடன் tame, ring master, Monday எல்லாரும் head quarters லதான் இருப்பாங்க போன்ற வார்த்தைகள் மனதில் பதிந்தவை.
'What brings you here?' என்ற பதம் அப்பா ரசித்து விவரித்தது. இதை எழுதுகையில் இதன் பொருளான ' உன்னை எது இங்கே கொண்டுவந்தது?' என்பதை நினைக்கையில் 'கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ, இங்கு வந்ததாரோ?' என்ற சினிமா பாடல் மனதுக்குள் வருகிறது. இதில்தானே "கொண்டாந்ததோ உன்னை இங்கே", என்ற வரிகள் வரும்!
அது போல், மருந்துக் குளிகைகளை (மாத்திரைகள்), tablets என்று சொல்ல மாட்டார். Pills என்றுதான் சொல்வார். ஒருமுறை 'Have you finished your work? ' என்று கேட்பதற்கு 'Do you finish your work? ',என்று கேட்டதற்கு, ' அது அப்படி இல்லை', என்று சொன்னவர், St. Joseph college brother இடம் இருந்து ' Wren & Martin' grammar book கொண்டு வந்து கொடுத்தார். நான் அதை ஆழ்ந்து படித்து, english grammar ஐ develop பண்ணிக் கொண்டேன்.
( அப்பாவின் ஆங்கில- knowledge ஐ justify பண்ணினேனா என்று தெரியவில்லை . எனினும் ஒரு சிறிய முயற்சி )
பின்குறிப்பு - என் அப்பாவை man of few words எனவும், calm soul எனவும் சொல்லலாம். இது apart from the topic ஆக இருந்தாலும், சொல்ல வேண்டும் என்று தோன்றியது.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தங்களது பதிவைக் கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
ReplyDeleteமிக்க நன்றி🙏💕
DeleteI miss atha very much Akka....Yousuf Bhai taught me English Grammar
ReplyDeleteTrue. 100%
DeleteGreat, Keep writing. Your use of language is elegant and interesting.
ReplyDeleteThank you. Sure, I'll keep writing
DeleteDiagnosis, treatment, and management strategies for various causes of back pain, improving overall spinal health. Back Pain managementBack Pain management
ReplyDelete