மலைராணியின் மடியில் -முடிவுரை [ Epilogue ]
Plains- இற்கு shift செய்து பல வருடங்கள் கடந்த பின்னர் ஒருமுறை , குன்னூருக்கு அருகில் இருக்கின்ற ஓட்டுப் பட்டரை என்ற இடத்தில் விற்பனைக்கு வந்த housing site பற்றி விசாரித்தோம். அப்போது promotor site- ஐப் பார்ப்பதற்கு vehicle arrange பண்ணினார். மலைப் பாதையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஓரிடத்தில் tea சாப்பிடுவதற்காக இறங்கினோம். அந்த சமயத்தில் season, climate பற்றியெல்லாம் பேச்சு வந்தது. அப்போது ஜீப்பின் driver , " மலை வாழ்வின் சுவாரஸ்யம் வந்து பார்த்தா தெரியாது ; வாழ்ந்து பார்த்தாதான் தெரியும் " என்று கூறினார். உடனே என் husband , " இவங்க ஊட்டிக்காரங்கதான் " என்று என்னைக் காட்டிக் கூறினார். அந்த driver மிக்க surprise- உடனும், admiration - உடனும் என்னைப் பார்த்தார். ஒரு meme படித்திருக்கிறேன். ' சட்டையின் முதல் பட்டன் சரியாகப் போடாவிட்டால் சட்டையின் அத்தனை பட்டன்களும் தவறாக அமையும். இதைச் சொன்னது ஷேக்ஸ்பியர் அல்ல ; எங்கள் டெய்லர் ' என்று. அதுபோலத்தான் இந்த driver கூறியதையும் உணர்ந்தேன். எளிமையான மனிதர்களின் வாயிலிருந்து சில சமயங்களில் பெரிய உண்மைகள் வெளி வருகின்றன.
இருபத்து ஆறு வருடங்களுக்கும் அதிகமான காலம் நீலகிரியில் நடந்தது வாழ்க்கை . குழந்தைப் பருவம் தொடங்கி, பள்ளிப் பருவம், கல்லூரி, வேலையில் சேர்ந்தது, திருமணம், முதல் குழந்தை பிறக்க சில காலம் முன்வரை. இவ்வாறாக நான் வாழ்ந்து பார்த்ததை எழுத்தில் வடித்தேன் - partly.
Thanking all for reading this, BYE .
Comments
Post a Comment