College [ 3 ]

       இவ்வாறு dissection உடனும், theory classes உடனும் ragging  உடனும் கடந்து கொண்டிருந்த கல்லூரிப் பயணம்,

         (பயணம் என்று எழுதுகையில் நினைவுக்கு வரும் பாடல்:-

     பயணம், பயணம், ஆரம்பம் பள்ளிக்குப் பயணம், பின்பு அடுத்தது ஆசையின் பயணம், இளம் காதலர் கண்களில் பயணம், அந்தக் கலக்கத்தில் கண்ணீரில் பயணம், இறைவனும் மனிதனும் பயணம் செய்தால் எவரை எவர் வெல்லுவாரோ, எவரை எவர் வெல்லுவாரோ? )

       சுமார் மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு திருப்பத்தை அடைந்தது. ஏறக்குறைய ஒரு மாதம் விடுமுறை. விடுமுறைக்கு சற்று முன்னதாகவோ அல்லது விடுமுறை முடிந்து விடுதிக்குத் திரும்பிய உடனோ எங்களுக்கு welcome party கொடுக்கப் பட்டது. ( hostel  -இலும்,   college - இலும் ). College (immediate seniors?)    welcome party  hotel alankar- ல் என்று நினைக்கிறேன். அப்போது  கச்சுச் செம்பா  என்று தொடங்கும் ஒரு படுகா  (badaga language) பாடலை, dias table- ல் கைகளால் தாளமிட்டபடி பாடியது ஒரு மலரும் நினைவு. Hostel- welcome party drama & dance  முதலியன நடத்தப் பட்டன.  

                                        


       இந்த வரவேற்பு களுடன் ragging முடிவிற்கு வந்தது. சில சங்கடங்கள் ஏற்பட்ட போதும், ragging girls க்கு ஜாலியாகத்தான் இருந்தது. Boys க்குத் தான் சிரமம். 

       அடுத்த வருடம் private medical college ஆரம்பிக்கப் போவதை எதிர்த்து strike நடந்தது. நாங்களும் உண்ணாவிரதம், ஊர்வலம் ஆகியவற்றில் கலந்து கொண்டோம்.  College- ல் meeting - இற்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் இருந்து வந்த ஒரு பையன் "  Right is might; but might is not right " என்றெல்லாம் வீராவேசமாகப் பேசினான்.  உண்ணாவிரதம் கல்லூரி வளாகத்திலேயே நடந்தது. நிறைய நேரம் சாப்பிடாமல் தான் உட்கார்ந்திருந்தோம்.  Seniors நின்று கொண்டு உரையாற்றினார்கள். 

        ஊர்வலத்தில் எழுப்பப்பட்ட வாக்கியங்கள் எவையென்றால்,  " காந்தி தேசமே; நீதி இல்லையா? " , " கத்திரிக்காய் ரெண்டு ரூபாய் மெடிக்கல் seat  ரெண்டு லட்சம் "   போன்றன. மேலும  Collector's Office  முன்பு தர்ணா பண்ணப் போய்  arrest ஆனோம்.  Arrest என்பது என்ன? சும்மா எல்லோரையும் ஒரு பெரிய  van - இல் ஏற்றி பீளமேட்டில் இருந்த Police ground க்குக் கொண்டு போய் விட்டனர். அவ்வளவுதான். சாப்பாடு packet கொடுத்து, சாயந்திரமாக வெளியே அனுப்பி விட்டு விட்டனர். 

         Hostel -  ன் மாலை நேரங்கள் பொதுவாக தோழியருடன் கழியும். சில சமயம்  mess- ல் tiffin, tea சாப்பிட்டு விட்டு  கையில்  transister உடன் பாதையோர மரத்தினடியில் உட்கார்ந்து evening 5.30 - திரை இசை கேட்போம். இதில் வசந்தியும், ராதாவும் special. ரசித்து ரசித்து(க்) கேட்பார்கள்.  ஒரு மூணு நாலு பாட்டுகள் தான் வரும். 

                                              


                                             




         Hostel day, farewell party, welcome party முதலான நாட்கள் ஒரே கொண்டாட்டம்தான். காலையிலேயே festive mood  தொடங்கி விடும்.  மாலை அழகாக dress  பண்ணுவது,  கலை நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, parrticipate  பண்ணுவது, photos எடுப்பது , special dinner  சாப்பிடுவது, orchestra  பார்ப்பது, dance  ஆடுவது என கோலகலமாக இருக்கும்.  Super fulfilment  உடன் உறங்கச் செல்வோம்.  ஓரிரு hostel day celebrations- க்கு என் அம்மாவையும், தங்கையையும் வரவழைத்திருக்கிறேன். 

                                           








Comments

Popular posts from this blog

அப்பாவின் ஆங்கிலம்

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]