மழை மாதங்களும், நேரங்களும் ( மலைராணியின் மடியில் - 13 )

மலைராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள்   - பாகம் 13




  மழை சுகமானது. மலையின் மழையோ சுகத்துடன் குளிரின் சிலிர்ப்பு மிகுந்தது.
 


         அந்தக் காலங்களில் 3 மாதங்களுக்கு தொடர்ச்சியாக மழை வரும்.  (1970 s).  சரியாக மே மாத லீவ் முடிந்து  ஸ்கூல் தொடங்கும்  சமயம்.  ஜூன், ஜூலை, ஆகஸ்ட் வரை மழை இருக்கும்.  தென் மேற்குப் பருவமழையாதலால், நின்று நிதானமாகப் பொழிந்து கொண்டிருக்கும்.  6th படித்தபோது  morning நனைந்து கொண்டே ஸ்கூலுக்குப் போவோம்.   Bench  - ல் மாணவிகள் பக்கத்து பக்கத்தில் ஒட்டி உட்கார்ந்து கொள்வோம்.  Recess -இன் போது மழை இருக்காது.  வெயில் காய்வது சுகமாக இருக்கும் . 1pm to 2 pm lunch time - ன் போது  uniform காய்ந்து விடும்.  மறுபடி  correct - ஆக evening school விடும்போது மழை வந்து விடும்.  எங்கள் ஊர் சிறு வயது நண்பன்  Kumaresh    "  மழையில நனைஞ்சுக்கிட்டே போய் நனைஞ்சுக்கிட்டே வருவோமே " என்பதை  mention பண்ணியபோது ரொம்ப  nostalgic - ஆக இருந்தது.

                     


         (The umbrella photo shown above is from google). 

       ஏழாம் வகுப்பில் அழகான  ladies umbrella கிடைத்தது.   ( ஊட்டியில் இருந்த போது நான் உபயோகித்த rain coat பற்றி எழுதி இருந்தேன் அல்லவா ? வெல்லிங்டன்னில்  rain coat அணிந்த ஞாபகம் இல்லை. மேலும்  school வீட்டிற்குப் பக்கமாக வேறு இருந்தது. )   7 th - ல் கிடைத்தது Light violet and purple கலரில்  stripes and flowers design கொண்ட  குடை.  மழைக்காலத்தில் அந்த அழகிய குடையைப் பிடித்துக் கொண்டு, distance  - ல் இருக்கும் பள்ளிக்கு ( more than a kilometre ), நடந்து செல்வது,  ' ஒரு பூ வனத்தில சுகம் குளு குளுங்குது,'  என்பது போல,  ஒரு pride -  உடன் மிதப்பாக இருக்கும்.  மழை வந்து கொண்டே இருக்க வேண்டும் ,குடை பிடித்தவாறு நடந்து கொண்டே இருக்க வேண்டும். காற்று வீசாது ; எனவே, குடை பறக்காது ; ஆடாது.

      மழையைக் கூறும்  திரைப்படப் பாடல்கள் நிறைய இருக்கின்றன. சில பாடல்களில் மழை காட்சிப் படுத்தப் படும். சிலவற்றில்  மழை என்பது உருவகமாக அமையும் ( Metaphor ) . இங்கே இப்போது ஒரு சில மழைப் பாடல்கள்  -   ' மழை தருமோ என் மேகம் ; மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் '  [ மனிதரில் இத்தனை நிறங்களா? ] ,   ' துளித் துளித் துளித் துளி மழைத் துளி ' [  புது வெள்ளம் ]   ,  என்னைக் கொஞ்சக் கொஞ்சக் கொஞ்சக் கொஞ்ச வா மழையே ' [ ஆதி ],   ' மழையே மழையே ,இளமை முழுதும்  நனையும் வரையில் வா '   [ அம்மா ] ,   ' இப்படி மழையடித்தால் நான் எப்படிக் குடை பிடிப்பேன்  ' [ வெடி ]  ,  ' பொன் வானம் பன்னீர் தூவுது  இந்நேரம் ' [ இன்று நீ நாளை நான் ] ,   ' சொட்டச் சொட்ட நனையுது தாஜ்மஹாலு ' [ தாஜ்மஹால்  ] ,   ' சில்லென சில்லென நீர்த்துளி பட்டு  '[ ரசிகன் ],   ' மழை மழை , என் உலகத்தில் வருகின்ற முதல் மழை  ' [ உள்ளம் கேட்குமே ].

         அனைவருக்கும் மழை பிடிக்கும். சிலருக்கு மழையில் நனையப்  பிடிக்கும்.  மழையில் நனையப் பிடிக்காதோருக்கும் மழை பிடிக்கும். மழையினை விரும்பாதோர் எவரேனும் உண்டோ ? ,  ( உலோகாதாயம் -  like trade will be affected, agricultural crops will be spoiled, can not move around for functions - என்ற காரணத்தைத் தவிர்த்து? ).

  


Comments

Popular posts from this blog

அப்பாவின் ஆங்கிலம்

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]