2 C, Roja Nagar (22 Years at 2C) பாகம் 1
இந்தத் தொகுப்பிற்கு வேறு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்து ஒன்றும் புரிபடாமல் போகவே இந்தத் தலைப்பே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். உங்களில் எவருக்கேனும் வேறு ஏதாவது தோன்றினால் சொல்லுங்கள், please. ( என் பெண் " online- ல் address போடுறீங்களே ",என்றபோது, " net லதான் எல்லா விஷயங்களும் already upload ஆகி இருக்கிறதே ", என்று நானும் என் husband - ம் பேசினோம். )
தாத்தா வீடு, பாட்டி வீடு, அம்மா வீடு, மாமியார் வீடு என்று இருந்தபோதிலும், நாங்களாகவே முதலாவதாகக் கட்டிய வீடு , எங்கள் திருமணம் முடிந்து பத்து வருடங்களுக்குப் பிறகு ஈரோட்டில் அமைந்தது . Site பார்த்த போதே வலது இடது புறங்களில் housing site, நடுவில் எங்கள் site என்றபோது பாதுகாப்பாக உணர்ந்தேன். Opposite - ல் Park வரப் போகிறது என்று broker சொன்னார். [ ஆனால் குடி வந்து 21 ஆண்டுகள் கடந்தும் இன்னும் பக்காவான பார்க் வரவில்லை. Area - வுக்கப் பொதுவான park site தான். நல்ல நீளமாகவே இருக்கும். அங்கங்கே பசங்கள் உடைத்த கம்பி வேலியும் உண்டு. ஆறு ஆயிரமோ என்னவோ செலவு பண்ணி வேலி போட்டார்கள் ஒரு பத்து வருடங்களுக்கு முன். இப்போது நம் அறிவிக்கப் படாத தேசிய விளையாட்டாம் - cricket- ன் ground ஆக மாறி விட்டது. விடுமுறை நாட்களில் வேகாத வெயிலில் பசங்கள் கிரிக்கெட் விளையாண்டு கொண்டிருப்பர். சில சமயம் காலை வேளைகளில் நெட் கட்டி டென்னிஸ், கராத்தே இத்யாதிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கும்.
வெற்று இடத்தில் அஸ்திவாரத்தின் மீது செங்கல் கட்டிடம் எழுந்து வருகையில் பார்க்க ஆனந்தமாக இருந்தது. மேலும் மேலும் வீடு வளர்ந்து முழுமையடைந்த போது மன நிறைவு ஏற்பட்டது. தரையின் tiles , ஜன்னல் glass design ஆகியனவற்றை பார்த்து select செய்தோம். Toilet accessories, towel rods முதலியன அறைகளுக்குத் தகுந்த நிறம் பார்த்து வாங்கினோம். Dining room - ல் washbasin - ன் எதிர்ப்புறம் இருக்கும் சுவற்றின் மேல் ஒட்டுவதற்கு நான்கு tiles கொண்ட scenery யைத் தேர்ந்தெடுத்தேன் நான். அதை என் தங்கை வாங்கிக் கொடுத்தாள்.
2001- ம் ஆண்டு Sep 9th அன்று பால் காய்ச்சினோம். அன்று பால் காய்ச்சும்போது விழாவில் கலந்து கொண்ட ஒன்பது பெரியவர்கள் தற்போது உயிருடன் இல்லை, தந்தை, மாமா, மாமியார், தங்கையின் மாமனார் ,மாமியார், பெரிய மாமனார், இரண்டு மச்சாண்டார்கள், ஒரு ரோஜா நகர் வாசி உட்பட. இழப்பு இழப்புதான் என்றாலும், 21 வருடங்களுக்கு இந்த எண்ணிக்கையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனெனில் அதைவிட அதிக எண்ணிக்கையில் சிறியவர்கள் வந்து விட்டனர்.
இந்த ரோஜா நகர் area - வில் இரண்டு main , மற்றும் ஐந்து குறுக்குத் தெருக்கள். எங்கள் வீடு இருப்பது 2nd main - ல். வீட்டின் முன்புறம் ரோட்டைத் தாண்டி opposite - ல் வலது புறம் ஒரு அபார்ட்மெண்ட். நேர் opposite - இலும் இடது புறம் நீண்டும் , இக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்த park site. இந்த apartment, அதையொட்டித் தொடருகின்ற park site ஆகியவற்றின் பின்புறம் கட்டப் பட்டிருந்த ஒரு சின்ன revetment- ஐ ஒட்டி குளம்.
முன்னரே மர மல்லிகை post -ல் குறிப்பிட்டிருந்த படி, compound சுவரின் இடது புறம் உயரமான மர மல்லிகை மரம். இரண்டு gate கள். பெரிய gate திறந்தால் உள்ளே portico . கார், டூ வீலர் ஆகியன park பண்ணிக் கொள்ளலாம். சின்ன gate திறந்து இரண்டு steps வைத்துப் படியேறினால் grill போட்ட ஆங்கில L வடிவ அழகிய sit out. அதில் முன்புறமாக படிக்கட்டைத் தொட்டவாறு ஒரு சிறிய சதுர இடம் கிடைக்கும். ஒருதரம் mosaic flooring - ஐ remove பண்ணி விட்டு granite பதித்தபோது , மேஸ்திரி ' இந்த இடத்தை வெட்டி விட்டு படிக்கட்டை நீட்டி விடலாமா? ' , என்று கேட்டார். நான் உடனே பதில் சொல்லாமல் hesitate பண்ணிய போது, ' ஓ, இது உங்க பாக்ஸ் , சரி இப்படியே விட்டு விடலாம் 'என்று சொல்லி விட்டார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் sit out - ல் plastic chair - ல் அமர்ந்து, கால்களைத் தூக்கி side grill - ல் வைத்தவாறோ அல்லது அந்த box எனப்படும் சிறிய சதுரக் கட்டத்தில் நின்றவாறோ வேடிக்கை பார்ப்பது என் வாடிக்கை. Family யோடு இருக்கும்போது தரையிலும் அமர்வது வழக்கம். பிற்பகல் வரையிலும் sit out- ன் தரை cool ஆகவே இருக்கும். எதிரில் இருந்து வேப்ப மரக் காற்று வீசும். Sit out - ன் வலது புறம் தனிக்கதவு கொண்ட என் clinic . உள்ளேயே drugs - ம் வைத்திருந்தேன். ( முதலிலேயே காலையில் ENT consultation , மாலை நேரம் general practice என்று முடிவு, என் PG colleague சுந்தர ராஜனின் idea வின்படி ). Morning ENT practice at MMCH .
Gate - க்கு நேராக Floral carving உடைய தேக்கு மரத்தாலான main door . கதவு திறந்தவுடன் நல்ல விசாலமான jointless glossy tiles பதியப்பட்ட தரையும், மூன்று ஜன்னல்களும் , அழகான பெரிய ஷோ கேஸும் கொண்ட hall or living room . இந்த ஷோகேஸ் பதினொன்றறை அடி நீளமும், ஆறேகால் அடி உயரமும் , ஒன்றே கால் அடி அகலமும் என்ற அளவில் இடது பக்கமாக அமைக்கப்பட்டு ஹாலுக்கும், dining room - க்கும் ஒரு partition போல அமைந்திருக்கும். இதை செய்து முடித்தவுடன் empty யாக இருந்தபோது TV வைக்க விடப்பட்டிருந்த space - ல் என் குழந்தையை உட்கார வைத்து photo எடுத்தோம். Hall - ன் கடைசிப் பகுதியில் வலது புறம் master bed room - ன் கதவு. Hall தாண்டி show case - ன் பின் பக்கமாக first floor க்கு செல்லும் படிகள். இதையொட்டி dining room. Dining room - ன் கடைசியிலிருந்து வலது புறம் kitchen , இடது புறம் small bed room.
மேலே bed rooms furnish பண்ணியபின் இந்த small bed room, utility room ஆக மாற்றப் பட்டு விட்டது . இதில் தற்போது washing machine, table for computer (but, I occasionally use the table top computer. For me, laptop is the convenient one. ), a lengthy metal utility couch for ironing etc , an old full length dressing table and a small steel bureau ஆகியன உள்ளன.
வீடு paint அடிப்பதிலும் colour களைத் தேர்ந்தெடுத்தோம். Hall மற்றும் dining room - க்கு biscuit , bedrooms - க்கு pink, kitchen - க்கு பச்சை, clinic - க்கிற்கு blue என்று . இப்படி ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு நிறத்தைத் தேர்ந்தெடுத்தது நான் Pasteur Institute - ல் பணியாற்றிய போது படித்த ஒரு ஆங்கில நாவலைத் தழுவி .

Comments
Post a Comment