நான் அறிந்த சாதியம்

                                   


        சாதி அல்லது ஜாதி என்பதை நான் உணர்ந்ததில்லை.  அதாவது, இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்ததனால்  அடுக்கடுக்காக அமைந்துள்ள சாதிக் கட்டமைப்பு முறை, சாதிப் பாகுபாடு ஆகியனவற்றை நான் உணர்ந்ததில்லை.  இந்திய இஸ்லாமியரிடையேயும் சில sect  தங்களைக் கொஞ்சம் உயர்வானவர்களாகக் கருதிக் கொண்டாலும்  அது  harmless. எங்களுக்குத்தான் ஈமான் என்னும் இறை விஸ்வாசம் அதிகம் என்று சொல்லிக் கொள்வார்கள்.  மற்றபடி தலையில் பிறந்தது, இடுப்பில் பிறந்தது என்ற கதையெல்லாம் இல்லை. இறைவனிடம் எங்களுக்குத்தான் நெருக்கம் அதிகம் என்று கூட சொல்ல முடியாது.  ஏனெனில் இஸ்லாம் மதம் எல்லா மனிதரும் சமம் என்ற அடிப்படையில்தான் கட்டமைக்கப் பட்டுள்ளது. இப்படி நான் compare பண்ணுவது சாதிப் பாகுபாடு அல்லது சாதிக் கொடுமை என்ற ஒற்றைப் பொருளுக்காக மட்டுமே தவிர வேறு எதற்கும் அல்ல.   மற்றபடி, பெண்ணடிமைத்தனம் முதற்கொண்டு ஏகப்பட்ட ஓட்டைகள் இஸ்லாமிய மதத்தில் உள்ளன.

             இதில் சாதியின்  பெயரைக் குறிப்பிடுவதால் தவறாக நினைக்க வேண்டாம்  - for the purpose of description only ;  not for discrimination.  மேலும், ஜாதி அல்லது சாதி என்பது  இன்று வரை  rampant ஆகத்தானே தீது செய்து கொண்டிருக்கின்றது ? ஆகவே, சொன்னால்தானே awareness வரும் ?  இதை ஓரிடத்தில் meme ஆகப் படித்திருக்கிறேன்.  பள்ளிகளில் சாதி கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற வாதத்திற்கு எதிர்க் கருத்தாக வைக்கப் பட்டது என்னவென்றால் ,  ' பள்ளிகளில் சாதிச் சான்றிதழ்களைக் கேட்காவிட்டால் , சாதி எப்படி ஒழியும் ? இட ஒதுக்கீடுதானே ஒழியும் ? '  என்பது. அதானே !?

            Having had a chance to mingle with upper caste people and children on the one hand and with the  lower caste and dalit people and children on the other hand  during my growing up period made me to analyse a lot in later ages and that ignition was started by my mother who used to tell a lot to me and me being a good listener stored all in my brain.  But , my development was mainly stimulated  by upper caste neighbours only.  And also school teachers and last but not the least , my parents ,who gave credit  to what my neighbours and teachers said , and helped and never interfered  in any of my academic and extra- curricular activities. This fact I can never deny and must be gratefull to all the situations and people, who actively or passively took part in my academic and other growth and development till I reach college. ஆகவே, என்னுடைய அன்பான உயர் சாதி friends and family friends  என்னைத் தவறாக நினைக்காதீர்கள்.  எனக்குப் பிடிக்காததென்பது ஒரு மனிதனை விட மற்றவன் தாழ்வு எனப்படுகிற சமூகத்தில் , அவ்வாறு பாதிக்கப் பட்டவர்களின் முகத்தில் தெரியும் ஒரு சோகம் கலந்த வெட்கம்தான்.  மற்றபடி upper caste people அல்ல. சொல்லப் போனால் எல்லா மதங்களும், எல்லா சாதிகளும் மனிதர்களின் மேல் நிறைய  முறைமைகளையும், கட்டுப் பாடுகளையும் விதிக்கின்றன . ஒருவர் அத்தகைய கட்டுப் பாடுகளிலிருந்து வெளியே வருவதற்கு ஒரு   status , position - ஐ எட்ட வேண்டி இருக்கிறது.  

                As mentioned in the previous paragraph,  முதன் முதலாக சாதியைப் பற்றி அறிந்தது was from my mother.  அம்மா சொன்ன  விஷயங்கள் மனதில் பதிந்தன.  நாங்கள் குன்னூரில் Harewood Quarters  எனப்படும் government housing -ல் வசித்தோம்.  ஐயங்கார், தெலுங்கு பிராமணர், மலையாள நாயர்,  பறையர், படுகர், மலையாள ஈளுவர், நீலகிரிப் பறையர், சைவ முதலியார், ஐயர், கவுண்டர்  போன்ற பல சாதிகளும்,  முஸ்லிம், கிருத்துவ மதத்தினரும் கலந்து வசிக்கக் கூடிய area அது.  கிட்டத்தட்ட ஒரு சமத்துவ புரம் போல. ஏனெனில் அது government quarters . ஆனால், சமத்துவ  புரங்களில் தாழ்த்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப் பட்ட , சில பிற்படுத்தப் பட்ட சாதியினர் வசிக்கக் கூடும். முற்படுத்தப் பட்ட சாதியினர் வசிக்கிறார்களா  என்பது சந்தேகம்தான். இல்லை என்றுதான் கருதுகிறேன்.  அப்போது 3-வது வீட்டில்  பறையர் சாதியைச் சேர்ந்தவர்  ஒருவர் குடியிருந்தார்.  என் அம்மா என்னிடம் , " நம்ம ஊருல எல்லாம் இவங்கள பக்கத்துலயே தங்க வைக்க மாட்டாங்க "  என்று சொன்னது எனக்கு  news .  ' அவங்க வீட்டுக்குள்ளதானே அவங்க இருக்காங்க ; அதனால் மற்றவர்களுக்கு என்ன? '  என்ற நினைவுகள் எனக்குள் ஓடின. சொல்லப் போனால் , முஸ்லிம்கள் இந்து உயர் ஜாதியினரின் வீடுகளுக்குள் சகஜமாக செல்வதைப் போல், இந்துக்களின் மற்ற ஜாதியினர் செல்வதில்லை. இதன் psychological  and socialogical facts நிறைய இருக்கின்றன. முஸ்லிம்கள்  சாதிக் கட்டமைப்பிற்கு  அப்பாற்பட்டு இருப்பதால் அவர்கள் எந்த  inhibition - ம் மனதில் இல்லாமல் எல்லோருடனும் mingle  ஆக முடிகிறது. அடுத்தது ஒரு உயர்சாதி இந்து,  முஸ்லிமையோ, மற்ற வேற்று மதத்தினரையோ  வீட்டினுள் அழைத்தால் ஒன்றும் சொல்லாத இந்து சமூகம் , ஒரு தாழ்த்தப் பட்டவரை வீட்டினுள்  அழைத்தால் அதைக் கேவலப் படுத்திப் பேசுகிறது.  இதில் கிராமம் , நகரம் என்ற வேறுபாடு இல்லை. இதை நான் குன்னூர், அம்பராம் பாளையம்  ஈரோடு ஆகிய இடங்களில் அறிந்திருக்கிறேன்.இங்கு மதம் பிரச்சினை இல்லை ; சாதிதான் பிரச்சினையோ என்று தோன்றுகிறது. மேலும், முஸ்லிம்களை எந்த ஜாதியினர் என்று கண்டு பிடிக்க முடியாதல்லவா?

           என் சொந்த கிராமத்தில் பறயர் ஜாதிப் பையன்களுடன் ஊர் சுற்றி இருக்கிறேன்.  பறையர்கள் என்ற சொல்வது ஆதி திராவிடர், ஹரிஜன் என்று சொல்வதை விட சிறப்பானது and pertaining specific to the community  என்பது என் எண்ணம். மேலும் பறை என்பது நம் நாடி நரம்பெல்லாம் ஓடிக் கொண்டிருக்கும் தமிழ் இசை அல்லவா? வேண்டுமானால் கர்ணன் என்ற தமிழ்ப் படத்திலிருந்து {  சிவாஜி நடித்த பழைய கர்ணன் சினிமா அல்ல } ' கண்டா வரச் சொல்லுங்க ' என்ற பாட்டைக் கேட்டுப் பாருங்கள்.  முஸ்லிம்கள் வசிக்கின்ற  area - விலிருந்து ஒரு மண் ரோடு தாண்டி பறையர்கள் வசிக்கின்ற  area இருந்தது  ( இப்போதும் அப்படித்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால், ரோடு தார் ரோடாக உள்ளது. ) மற்ற குழந்தைகள் உடன் இருந்தார்களா என்று ஞாபகம் இல்லை. பறப் பையன்களின் விளையாட்டு முக்கியமாக உணவு தேடி அலைவதாகவே இருந்தது . Forager  மாதிரி.   ( இதை நான் ஈரோட்டிலும் அறிந்திருக்கிறேன். )  அவர்களுடன் சற்று ஒதுக்குப் புறமான வழிகளில் திரிந்தேன். புளிய மரத்திலிருந்து இலைகளைப் பறித்து, அதனுடன் வர மிளகாய்களையும், உப்பையும் சேர்த்து அம்மிக் கல்லில் வைத்து அரைத்து உருண்டை பிடித்து சாப்பிட்டனர் . நானும் சாப்பிட்டேன்.   என் கிராமத்தில் அறிஞர் அண்ணா எழுதிய புத்தகம் , தாழ்த்தப்பட்ட ஒருவரின் கதை, ராணி, ராணி முத்து முதலியன படிக்கக் கிடைத்தன. நீலகிரியில் வெல்லிங்டனில் கோகுலம் கிடைத்தது. குன்னூரில் குமுதம், ஆனந்த விகடன், துக்ளக், கல்கண்டு முதலியன -  மற்றபடி நாவல்கள் எல்லா இடங்களிலும். Society யையும், வாழும் முறையையும்   ( படிக்கும் வார,மாதப் பத்திரிக்கை  முதற்கொண்டு )  நாம் shape  பண்ணுகிறோமா அல்லது society யும், வாழும் முறைமையும்  நம்மை shape  பண்ணுகின்றனவா என்பது புரியவில்லை. 

            சற்றுப் பெரியவளான பின்னர் ஊர் சுற்றுவது தானாகக் குறைந்து விட்டது. இருப்பினும்  பல வித சாதியினருடன் mingle ஆகிக் கொண்டேதான் சென்று கொண்டிருந்தது வாழ்க்கை . அதுபோல் சாதிய ஏற்றத் தாழ்வுகள் குறித்த ஒரு disturbance  மனதில் இருந்து கொண்டேதான் இருந்தது .

       மேல் ஜாதியினரின் இரு வேறுபட்ட character and behavior களைப் பார்த்திருக்கிறேன்.  ஸ்கூலில் படித்தபோது வசந்த லஷ்மி என்னும் teacher,  key யைக் கையில் வாங்க மாட்டார்கள். Table மேல் வைத்து விட வேண்டும். அவர்கள் அதை எடுத்துக் கொள்வார்கள் .  ஏனென்றால் தப்பித்தவறி கை பட்டு விட்டால் தீட்டாகி விடுமாம். அதே சமயம் ராஜி மிஸ் எனப் பெயர் கொண்ட teacher இன்னும் இரண்டு  school people உடன்   ( ஒரு  sister - nun ,மற்றுமொரு teacher ) எங்கள் வீட்டிற்கு வந்து நான் மேலும் படிப்பதற்காகப் பரிந்துரை செய்தார்கள்.  என்னைப் பெண் பார்க்க மாப்பிள்ளை  ( என் husband )  வந்தபோது என் பெற்றோர் ஊருக்குச் சென்றிருந்தனர். நானும் என் தங்கையும்  carrom board விளையாடி  paper ல் points குறித்துக் கொண்டிருந்தோம். அவர்களைக் கண்டதும் என் தங்கை , ஒரு  neighbour  family friend ஆன நாச்சியார் என்கிற ஐயங்கார் aunty யை அழைத்து வந்தாள். அவர்கள்தான் டீ, பால் முதலியன  prepare பண்ணி, snacks  வைத்து உபசரித்தார்கள். 

              திருமணமாகிப் பல வருடங்கள் சென்ற பின்னர் , என் husband -ன்  college 25- வது ஆண்டு விழா கோவையில்  Tamil Nadu  Agricultural University யில் நடந்தது.  அப்போது,  spouse -ஐப் பற்றிப் பகிர்ந்து  கொள்ளும் நிகழ்வில்  கும்பகோணத்தைச் சார்ந்த பஞ்சாபகேசன் என்ற ஐயரின்  ( இவர்  government service - ல்   agricultural engineering department - ல் உள்ளார் . இரண்டு குழந்தைகள் உள்ளனர்  )மனைவி  ' என் கணவர் தலித்களுக்காக அதிகம் சேவை செய்வார். வீட்டை விட தலித் காலனியில்தான் அதிக நேரம் செலவிடுவார் ' என்று மிகுந்த பாசத்துடனும், பெருமையுடனும் கூறினார். 

        Not all that born as high caste people are having a differentiating mentality, since I had discussed many a things with them regarding various matters. ஆகவேதான் இக் கட்டுரையில் நான் பார்ப்பனர்கள் என்று கூடக் குறிப்பிடவில்லை. பிராமணர்கள், ஐயர், ஐயங்கார் என்றே குறிப்பிடுகிறேன். முஸ்லிம் என்று சொல்லாமல் துலுக்கன், துலுக்கச்சி என்று சொல்வது எப்படி வலிக்கும் என்று எனக்குத் தெரியும். சொல்லப் போனால் அனைத்து  தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையே கூட சாதிப் பாகுபாடு உள்ளது என்பதை என்னவென்று சொல்வது?  உதாரணமாக எங்கள் பக்கத்து வீட்டில் வேலை செய்கிற ஒரு வண்ணார் வகுப்பைச் சார்ந்த பெண்மணி,  ஒரு house maid- ஐப் பற்றிக் குறிப்பிட்ட போது   "  பொழங்கற சாதிதான் " என்று சொன்னார்.   எங்கள் வீட்டில்  வேலை செய்யும் ஒரு பறையர் வகுப்பைச் சார்ந்த பெண்மணி , அருந்ததியர்களை " பீ வழிப்பவர்கள் ", என்று குறிப்பிட்டார். மிகவும் வருத்தமாக  இருக்கிறது.  பிறப்பின் அடிப்படையில் தனக்கு மேலானவனாக ஒரு மனிதன் இருக்கிறான்  என்ற கருத்தே சரியில்லை எனும்போது, தனக்கும் கீழே ஒரு மனிதன் இருக்கிறான் என்பதைக் கருதுவது என்பது, எப்பேர்ப்பட்ட  தவறான மனநிலையை சமுதாயத்தில் கட்டமைத்து உள்ளனர் என்று காட்டுகிறது.

       முன்னரே குறிப்பிட்டது போல,  சாதிய ஏற்றத் தாழ்வுகள் குறித்த ஒரு disturbance  மனதில் இருந்து கொண்டேதான் இருந்தது ; இருக்கிறது. படிப்பு ஒன்றுதான்இதற்குத் தீர்வு என்று தோன்றுகிறது. ஆனால்,  political power என்ற ஒன்றும் வேண்டுமல்லவா?  பாபா சாஹிப் அம்பேத்கர் இந்தியர்கள் வெளி நாடுகளுக்குச்  சென்றால் அங்கேயும் சென்று சாதியைப் பரப்பி விடுவார்கள் என்று கூறியுள்ளார்.  சமீபத்தில்  அமெரிக்காவின் Seatle  நகரில் -  ( Seatle என்பது  Washington State - ல் உள்ள ஒரு நகரம் ) city council  பிறப்பித்துள்ள Anticaste law   (சாதிக்கு எதிரான சட்டம் )  அம்பேத்கர் கூறியதை உறுதிப் படுத்துகிறது. அங்கேயே  caste- based discrimination - ஐ , அந்த நாட்டினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

        

             

          

Comments

Popular posts from this blog

அப்பாவின் ஆங்கிலம்

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]