நிகழ்வுகளும் நினைவுகளும் [ COLLEGE - Part - 2 ]
மருத்துவக் கல்லூரி memories - Part 2
Part-1 - ல் academic oriented ஆன தகவல்களை எழுதியபோது, என் senior ஆன Dr.TRP என்பவர் - இவர் எங்களது Coimbatore Medical College - இன் 1st batch - ஐச் (1966 ) சேர்ந்தவர் - அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை என்று தெரிவித்தார். கல்லூரியில் நடந்த fun times பற்றி எழுதவேண்டுமென்று கூறினார். அப்போது நான், " மருத்துவக் கல்லூரி காலங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதவிருக்கிறேன். அதன் தொடக்கமாகத்தான் கல்லூரி academic பற்றி எழுதி இருக்கிறேன். இதன் பின்னர் , personal life & fun in Medical College and hostel பற்றி எழுதுவேன் " என்று தெரிவித்திருந்தேன். அதன்படி இதோ Part-2.
Interview - வும், Books demand - ம் :-
12th vacation - ல் ஊருக்குப் போய்விட்டபடியால் , புத்தகங்கள் Coonoor - ல் மாட்டிக் கொண்டன. சற்றே வியாகூலப்பட்டபோது பாட்டி- அப்பாவின் அம்மா , ஒரு குடும்ப நண்பரின் பையன் 12th எழுதியிருப்பதாகக் கூறி , அவன் வீடு எங்கே என்று சொல்ல, அங்கே இருந்து சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து கொஞ்சம் படித்தேன் ( Interview - க்காக ) . என் பாட்டிக்கு படிக்கும் பேரக் குழந்தை பிடிக்கும். புத்தகம் வாசிக்கச் சொல்லிக் கேட்பார்கள். பின்னர் interview அன்று அம்மாவின் அம்மா வீட்டில் இருந்தோம். மதியம்1 மணிக்கு Coimbatore Medical College- ல் interview என லெட்டர் மூலம் தெரிவித்திருந்தார்கள். என் கடைசி மாமா மற்றும் அப்பாவுடன் அம்பராம் பாளையம் என்னும் கிராமத்தில் இருந்து பஸ் ஏறி பொள்ளாச்சி வந்து , அங்கிருந்து கோவை காந்திபுரம் வரும்போது நண்பகல் 12 மணி ஆகி விட்டது. அங்கிருந்தவர்கள் direct ஆக college பஸ்ஸுக்கு wait பண்ணினால் late ஆகி விடும் என்று சொல்லி , Hope college வரை சென்று அங்கிருந்து 1 stop தான் அதற்கு வேறு பஸ் மாற்றிக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். அதன்படி hope college - ல் இறங்கியபோது ஒரு பஸ் காலேஜ் நோக்கி செல்ல ஆயத்தப்பட, அதைப் பிடிக்க ஓடிச் சென்றோம். Interview venue - வை அடைய correct -ஆக1 மணி ஆகி விட்டது. போகும் போது எல்லா candidates -ம் சின்ன stool களில் வரிசைப்படி உட்கார வைக்கப் பட்டிருந்தனர். முகங்கள் பார்க்கப் பரிதாபமாக இருந்தன. எனக்கும் ஒரு stool நடுவில் கிடைத்தது. Interview பற்றி College part -1 -இலேயே எழுதி விட்டதால் இங்கு repeat பண்ணவில்லை.
Admission - ம் ஊர்வலமும் ;-
College admission - க்கு அம்மா, அப்பாவின் தம்பி family என்று ஒரு சின்ன கூட்டமாக college - க்குள் நுழைந்தோம். சித்தி தலைக்கு முக்காடு அணிந்திருந்தார்கள். Campus - இனுள் மிதமான நடையுடன் சென்றபோது , senoir boys சிலர் , ஒரு immediate senior muslim boy - ன் பெயர் சொல்லிக் கத்தினார்கள். அது கொஞ்சம் enjoyable ஆக இருந்தது. அதுவும் girls school - இலிருந்து வந்தது வேறு.
Hostel -ல் நான்கு பேர் : -
Hostel - ல் ஆரம்பத்தில் பகவத் கீதா, அங்கயற் செல்வி, மோகனம் மற்றும் எனக்கு 2nd floor - ல் ஒரு சின்ன room ஒதுக்கப் பட்டது . Steel cots மட்டும்தான் furniture . பவர் கட் ஆகி ரூம் இருட்டானபோது, ஜன்னலோரமாக சாய்ந்து நின்றிருந்த பெண்ணின் silhouette - ஐ, வெளியிலிருந்து வந்த மங்கிய வெளிச்சத்தில் பார்த்து பேய் போல இருக்கிறதென்று பயந்தாள் மோகனா. மேலும், இரவில் face powder எல்லாம் போட்டுக் கொண்டு படுப்பாள். ஏனென்று கேட்டபோது கனவில் அழகாக இருப்பதற்காக என்றாள்.
CIT - யின் ஒரு muslim பையன் குன்னூரிலிருக்கும் போதே என்னைத் தெரியுமென்றும் , அப்போதே I wanted to make friends with you என்றும், லெட்டர் எழுதினான். சீனியரா, same set ஆ என்று தெரியாது . கீதா, அவனை hostel - க்கு வரச்சொல், பார்க்கலாம், அழகாக இருந்தால் லவ் பண்ணு, இல்லாவிட்டால் விட்டு விடலாம் என்று கூறினாள். நான் ஒரு reaction - ம் காட்டவில்லை. அழகாக இல்லா விட்டால்? அதெப்படி வரச் சொல்லிவிட்டு விட்டு விடுவது சாத்தியம்? அப்போதெல்லாம் பையன்களிடம் keeping a distance. அதுவும் அம்மா அப்பா பார்த்துத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்கிற through proper channel ஊறிப் போன old school நான். சும்மாவாவது லெட்டரைக் கொண்டு போய் அப்பாவிடம் காட்ட , அவரும் ஒரு reaction - ம் காட்டவில்லை. Atleast , careful ஆக இரு என்று கூட சொல்லவில்லை. ஓரிரு முறை hostel - க்கு phone கூட செய்திருக்கிறான். அது அத்தோடு முடிந்து போனது. அந்தப் பையனின் பெயர் சொல்வது நாகரீகமில்லை என்பதால் பெயரைத் தவிர்க்கிறேன்.
இது போன்ற சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன மறுபடியும். இன்னொரு muslim பையன் பேரையும், ragging - ல் exhibition duty போய் வந்த பின்னர் மற்றுமொரு senior hindu பையன் பேரையும் சத்தமாக சொல்லி இருக்கின்றனர் அவர்கள் இருவரின் உடன் இருந்த பையன்கள். ஆனால், எனக்கு அதெல்லாம் பயம் மற்றும் பிடிக்காது. அப்படியே silent ஆக திரும்பிப் பார்க்காமல் போய் விட்டதால் எந்த சிக்கலிலும் மாட்டிக் கொள்ளவில்லை.
செல்வி கட்டிலில் படுத்துத் தூங்கும்போது, ஒரு காலுக்குக் கீழ் ஏதோ இருந்ததால் அவளின் ஒரு பாதம் மட்டும் உயரமாக இருந்தது. கீதா எங்களிடம், ' எப்படிடீ இவ கால் (பாதம் ) மட்டும் அந்தரத்துல நிக்குது? ', என்று கேட்டாள். மற்றும் கீதா face cream & hair care tips தந்தாள்.
Ragging முடிந்து, சில seniors , course முடித்து hostel -ஐ விட்டு வெளியேறிய பின் எங்களுக்கு proper ஆன அறைகள் ஒதுக்கப் பட்டன. ஒரு room- க்கு மூன்று பேர். மூன்று பேரும் மூன்று வருடங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவ்விதம் senior, junior, sub- junior என்று அறையில் இருப்பது, junior- க்கு moral support - ஆகவும், guidance - ஆகவும் , senior -க்கு சிறு உதவியாகவும், அக்கா மனப்பான்மையைக் கொடுப்பதாகவும் அமைந்தது. இதற்கிடையில் செல்வியும், மோகனமும் day scholar - ஆக மாறி விட்டனர். கீதாவுக்கும் எனக்கும் வேறு வேறு அறை. இவ்வாறாக நாங்கள் நான்கு பேரும் வேறு வேறு இடங்களுக்குச் சென்றுவிட்ட போதும், வார்க்கப்படாத பச்சை மண்ணாக இருந்தபோது ஒரு சிறு அறையில் தங்க வைக்கப் பட்டதாலோ என்னவோ, ஒரு bond இன்று வரை தொடர்கிறது. நாங்கள் நால்வரும் கீதாவின் வீட்டருகில் இருந்த தியேட்டரில் சப்தமாக ரகளை செய்தவாறு முந்தானை முடிச்சு படம் பார்த்திருக்கிறோம். செல்வியின் பெரியம்மா வீட்டில் விருந்து சாப்பிட்டிருக்கிறோம். குன்னூர் போயிருக்கிறோம்.
சில வருடங்களுக்கு முன் , அங்கயற் செல்வி என் இரண்டாவது பெண்ணிடம் , ' உன் அம்மா ஒரு துண்டு விரித்து தொழுவார்கள். நாங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருப்போம். மனதுக்கு அமைதியாக இருக்கும் ' என்று சொன்னாள். அப்போதெல்லாம் நான் கொஞ்சம் religious.
Ragging - ல் அலங்காரம் ;-
ஸ்கூலில் uniform dark blue and light blue கலர் ; skirt & shirt , 11th , 12 th - க்கு பாவாடை தாவணி. Medical College - ல் admission கிடைத்த பின்னர், புதிதாக பாவாடை தாவணி வாங்கி தைக்கக் கொடுத்து ready செய்த பின், college - க்குப் புடவைதான் கட்ட வேண்டும் என்ற செய்தி கிடைத்தது. என்னிடம் சுடிதார் மற்றும் பாவாடை தாவணிகள்தான் இருந்தன. எனவே, என் அம்மா தன்னிடமிருந்த புடவைகளில் தனக்குக் கொஞ்சம் வைத்துக் கொண்டு எனக்குக் கொஞ்சம் கொடுத்தார்கள். கல்லூரிப் படிப்பு முடிக்கும் வரை எனக்கு hostel - க்கு புது saree கொண்டு வருவார்கள்.
Ragging start ஆன time - ல் class - இலிருந்து hostel - க்கு வந்து saree change பண்ணியபோது சீக்கிரமாக inskirt - ஐ மாற்றாமல் red - க்கு green என்று போட்டுக் கொண்டு போனபோது senior அக்கா ஒருவர் , இப்படித்தான் unmatching ஆக புடவை, inskirt அணிய வேண்டும் என்று கிண்டலுடன் சொன்னார். அது மட்டும் இல்லை ; தலை முடியைப் பின்னலிட்டு அதை சருகு, வாழை மட்டை போன்றவற்றைக் கொண்டு ribbon போல் கட்டிக் கொண்டு class - க்குச் செல்ல வேண்டும்
பக்கெட்டைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு :-
Ragging ஆரம்பத்தில் கொஞ்சம் ஜாலியாகத்தான் இருந்தது. பின்னர் அழ நேர்ந்தது. Hostel portico தாண்டி entrance place - ல் dance ஆடினோம். எல்லோரையும் ஏதாவது ஒரு senior room - க்கு evenings வரச் சொல்வார்கள். நாங்கள்தான் பொழுதுபோக்கு. அதிகம் வன்மம் காட்டவில்லை. Dance ஆடவும், பாட்டுப் பாடவும், பாடிக் கொண்டே குளிப்பது போல் நடிக்கவும் ( பொன்மேனி உருகுதே என்ற பாடல்தான் mostly ) , தரையில் நீச்சலடிக்கவும் என சுலபமான tasks தான். பின்னர் ஒருமுறை steel cot - ன் மேல் தலையில் பக்கெட்டைக் கவிழ்த்துக் கொண்டு நிற்க வைத்து விட்டார் ஒரு அக்கா. ரொம்ப நேரம் நின்று அழுது கொண்டிருந்தேன்.
வேலையும், வேடிக்கையும் :-
NCC, NSS , Exhibition duty ஆகியன 1st year - ல் எங்களுக்கு வாடிக்கையான வேலை மற்றும் வாடிக்கையான வேடிக்கை. NCC parade நடக்கும். அதற்கு வந்த instructor ஒரு retired military man. Right கால் நை ஹோகா, Left கால் ஹோகா என்று march past சொல்லிக் கொடுத்தார். அப்படியே கொஞ்ச தூரம் ( நான்கு நான்கு பேராக வரிசையில் நின்று ) நடந்து cake - ம், mixture - ம் சாப்பிட்டு வருவோம். நல்ல பெரிய cake . வயிறு நிறைந்துவிடும். அதுபோல் firing (shooting ) - க்காக PSG College of arts & science- க்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அங்கு மணல் - சாக்கு மூட்டை வைத்து, குப்புறப் படுத்து , துப்பாக்கியை வைத்து aim பார்த்து சுட வேண்டும். Aim பார்த்து சுடுவது easy யாக வந்தது.
NSS - ல் நாங்கள் செய்த வேலை களை பிடுங்குவது மட்டுமே. Ground - ல் சின்னச் செடிகள் மேலும் புற்களைப் பிடுங்கினோம்.
ஒரு தடவை college bus - ஐக் கொண்டு வந்து girls ஹாஸ்டலுக்கு வரும் ரோட்டில் நிறுத்தி இருந்தார்கள். பின்னாலிருக்கும் ஏணிப் படியில் ஏறி பஸ்ஸின் கூரை மேல் அமர்ந்திருந்தோம். அப்போது ஏதோ காரணத்திற்காக boys hostel - இல் இருந்து பசங்கள் வந்தார்கள். அவர்கள் வருவதைக் கண்டு பஸ்ஸில் உட்கார்ந்திருந்த நாங்கள் அவர்கள் திரும்பிச் செல்லும் வரை , அப்படியே பஸ்ஸின் கூரைமேல் படுத்து மறைந்திருந்தோம்.
Comments
Post a Comment