மரமல்லிகை மரம் [ செடி, கொடி ,மரம் ... ... பாகம் 2 ]





          ஈரோட்டில் வீட்டின் முன்புறம் இடது  பக்கமாக ஒரு மரமல்லிகை மரம் இருக்கிறது.  அதன்  speciality  என்னவென்றால் , அது எதிர்பார்த்ததை விட உயரமாகவும் பெரியதாகவும் வளர்ந்து விட்டது.   Opposite- ல் இருக்கிற 3 floor கொண்ட  apartment  - ஐ விட உயரமாகப் போய்விட்டது. அது original -ஆக  first time வைத்த மரம் இல்லை.  மரத்தின் குட்டி.  அது எப்படி என்றால் , வீடு  foundation போட start பண்ணியபோதே 4 மரங்கள் நடப்பட்டன.  2  பூ மரம், 2 வேப்ப மரம்.  2 வேப்ப மரங்களும் ரோட்டைத் தாண்டி  opposite side.  வீட்டின்  compound சுவரை ஒட்டி வலது  புறம் வைக்கப்பட்ட பூ மரம் ஒழுங்காக வளராமல் கொஞ்ச  time-  இலேயே போய் விட்டது.   Left side - ல் இருந்த மரமல்லி மரம் ஒரு சுமாரான உயரம் வளர்ந்து இருந்தது.  நிறையப் பூக்கள் வந்தன.  ஆனால், ஒருதரம் நிறையக் கம்பளிப் புழுக்கள் அதில் வந்து விட்டன.  புகை  காட்டினால் புழுவெல்லாம் போயிரும் என்று கேள்விப்பட்டு , நெருப்புப் புகை காட்டினோம்  -  தீப்பந்தம் மாதிரி ஒண்ணு செஞ்சு.   அதனாலோ அல்லது வேறு எதனாலோ மரம்  complete- ஆக பட்டுப்போய் விட்டது.  எனவே வெட்டப்பட்டது. ( Stump  இன்னும் இருக்கு ). அதன் வேர்ப்பகுதியிலிருந்து நிறைய  நாற்றுகள்  ( ? கன்றுகள் ) வளர்ந்தன. அவற்றில் ஒன்றுதான் தற்போது இருக்கும் பெரிய மரம்.

         மர மல்லிகை மரத்தின்   ( Tree Jasmine tree ) botanical   name Millingtonia  hortensis என்பதாகும்.   Indian cork tree  என்றும் அழைக்கப் படுகிறது. எங்கள் வீட்டு மரமல்லிகை மரம்,  காகம், குருவி, அணில், ஒடக்கான், தேனீ,  கருங்குளவி போன்றவற்றின் இருப்பிடமாக அமைந்தது  - வெவ்வேறு கால கட்டங்களில்.




இதில் ஏறும் ஓணான் வித்தியாசமான movement - களை செய்து காட்டும். ஆடு மேய்க்கும் பாட்டி ஒன்று ஆடுகளை மேய விட்டு விட்டு இந்த மரத்தின் நிழலில் உட்கார்ந்திருக்கும்.  தற்போதெல்லாம் அந்தப் பாட்டியையும் காணோம் ; ஆடுகளையும் காணோம்.

                     பூக்கள் உதிரும் காலத்தில், இளம் காலை நேரத்தில்,  நூற்றுக் கணக்கில் பூக்கள் மரத்தைச் சுற்றி வட்டமாக சிதறிக் கிடக்கும்.  ஒரு மெல்லிய மணம் வரும். அது மனம் விரும்பும் இனிமையான மணம் அல்ல . அதில் ஒரு சின்ன துர் நாற்றம் அல்லது துர் வாசம் கலந்திருக்கும். (  துர்வாசர் என்ற முனிவர் பெயர் சட்டென்று நினைவுக்கு வருகிறது! ). எங்கள் வீட்டின் எதிரில் உள்ள   apartment -  ல் வசிக்கும் பாய் ஒருவர் நெரிந்து பரந்து வியாபித்திருக்கும் அந்த மலர்களை, மலர்ப் பரப்பை சிலாகித்துச் சொல்லுவார்.  இதை எழுதுகையில் ராஜம் கிருஷ்ணன் அவர்களுடைய   " மலர்கள் "  என்ற கதை நினைவுக்கு வருகின்றது.  இந்தக் கதையில் நினைவில் உள்ளவை -  நிம்மா ( நிர்மலா ) என்னும்  heroine , ஊட்டியின் எல்க் ஹில் முருகன் கோயில்,  தோசை சுடும்போது conversation , மற்றும் அந்தப் புத்தகத்தின் வரை படங்கள் போன்றன. 

             காலையில் தெருவில் walking    போகும் ஒரு சிலர் அந்தப் பூக்களை எடுத்துச் செல்வார்கள்.  அவ்வாறு  collect செய்த ஒரு  person - இடம்   " எதற்கு  collect  பண்ணுகிறீர்கள் ? ",  என்று கேட்டதற்கு,   " சாமிக்குப் போடுவதற்கு ." என்று சொன்னார். மல்லிகையில்தான் எத்தனை வகைகள் ! தலையில் சூடும் செடி மல்லி, குன்னூரில்    bush ஆக வளரும் மஞ்ச மல்லி, உயரே படரும் கொடி மல்லி,   ( இது பூ பெரியதாகவும், மணம் சற்றுக் குறைவாகவும் இருக்கும்.  ) இப்போது மர மல்லி.

               அதிகக் கிளைகள் விட்டு, ஓவராக இலைகள், பூக்கள், சிறு குச்சிகள் கொட்டிக் குப்பை அதிகமானதால் -  தினமும் இரண்டு முறை கூட்டுவார்கள் ஒரு பெண்மணி - ( என்று நினைக்கிறேன்  ) . வெட்டினோம் ஒருமுறை   electric saw கொண்டு சில கிளைகளை .  இந்த மரத்தின் மேலிருந்து அணில்கள்  ' சக் சக் ' என்று  compound wall மேல் குதித்து,  first floor portico,   மேலே போகும் steps-  ன் railing  மேலெல்லாம் ஓடி  AC machine-  ன்  vent -க்குள் நுழைந்து கடித்து விட்டன . Minimum இரண்டு தடவை repair செய்ய வேண்டியிருந்தது.  அதன் பின்னர் மறுபடியும் வெட்ட யோசித்தபோது   -  ( tenant,  opposite apartment காரர் ஆகியோருடன் )  -  electric line  போவதால் line man   இடம் சொல்லி  electric power off  செய்து விட்டுத்தான் வெட்ட வேண்டும் என்று கலந்தாலோசித்து , அது தவிர்ந்து போனது. 

               இந்த மரத்தில் ஒரு வியப்பான சம்பவம் நடந்தது. ஒரு நாள் ஒரு தேன்கூடு மரத்தில் இருந்தது.   ' அட, இந்தத் தேன்கூட்ட இத்தனை நாள் பார்க்கலியே '  என்று யோசித்தபோது அடுத்த நாள் அதைக் காணோம் .  So, the inference was   மரத்தில் மிக சமீபத்தில்தான் அல்லது ஓரிரு நாட்களுக்குள் தேன் கூடு கட்டப் பட்டிருக்கிறது  and  the doubt was  howcome   it disappeared in a day?

                குருவிகள் வலையைத் தூக்கிக் கொண்டு பறந்த கதைபோல , தேனீக்கள் கூட்டைத் தூக்கிக் கொண்டு பறக்க முடியுமா, என்ன ? இதற்கான விடை எனக்கு சமீபத்தில் கிடைத்தது.  சேலம் அருகில் இருக்கின்ற வாழப்பாடி என்னும் ஊரில் ஒரு வீட்டின் சமையல் கட்டின் மேற்புறத்திலும் , portico  முகப்பின் மேற்புறத்திலும்  2  மணி நேரத்தில் தேனீக்கள் கூடு கட்டினவாம். வீட்டில் உள்ளவர்கள் பயந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்க, வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் வருவதற்குள் தேனீக்கள் தாமாகவே கூட்டைக் கலைத்து விட்டுச் சென்று விட்டனவாம்.

                 So,  இந்த tree jasmine மரத்தில் இது போலத்தான் ஒரு நாளில்   கட்டிய கூட்டை ஏதோ காரணத்திற்காக அடுத்த நாளே தேனீக்களாகவே கலைத்து விட்டிருக்கும் என்று தோன்றுகிறது . May be - வாகனங்கள், மனித நடமாட்டங்கள் காரணமாக இருக்கக் கூடும்.

              என் தங்கை இந்த மரத்தைப் பார்த்து,   " மாஷா அல்லாஹ் ; Sims park ஞாபகம் வருகிறது, அம்மா ஞாபகம் வருகிறது  " என்று சொன்னாள். 

           இந்த 4 மரங்கள் தவிர வேறு மரங்களும் வளர்த்துள்ளோம்.  சில தானாகவே வளர்ந்தன.  நாங்கள் வளர்த்த மரங்களில் ஒரு கறிவேப்பிலை மரம்,  ஒரு கொய்யா மரம், ஒரு பப்பாளி மரம்  (வீட்டின் பின் புறமாக ) ,  & ஒரு பூவரச மரம்  ( வீட்டின் எதிர்புறம் வேப்ப மரங்களுக்கு இடையில் )  ஆகியன அடங்கும். 

          Husband - ன்  colleague ஒருவர் -   அவர்தான் எங்கள் வீட்டின் ground floor  - ஐக் கட்டிக் கொடுத்தது ;  அவருக்கு  gardening  -ல் மிகவும்  interest.  அவர்கள் வீட்டுப் பூவரச மரத்திலிருந்து 2 பருமனான குச்சிகள் வெட்டிக் கொடுத்தார்.  மற்றும் அதை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதையும்   சொல்லிக் கொடுத்தார்.  2 குச்சிகளையும் மண் நிறைந்த  plastic covers - இல் போட்டு அதிகம் வெய்யில் படாத இடத்தில் வைத்து, தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.  அல்ல, தண்ணீர் தெளிக்க வேண்டும். கொஞ்ச காலம் சென்றபின்னர் அந்த குண்டு குச்சிகளில் துளிர் விட்டு இலை வந்த பின்னர்  ,தேர்வு செய்யப்பட்ட இடத்தில் குழி தோண்டி நட  வேண்டும்.  மேற்கண்டவாறு செய்தபோது ஒரு குச்சியில் மட்டும் துளிர்  ( தளிர்? ) விட்டு இலைகள் வந்தன. அதை நட்டு சுற்றி ஆடு தின்றுவிடாமல்  இடைவெளிகளுடன் கூடிய செங்கல்  கட்டிடம் எழுப்பி நிறைய நிறைய தண்ணீர் ஊற்றி வளர்த்தோம்.


Comments

Popular posts from this blog

அப்பாவின் ஆங்கிலம்

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]