பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]
பழைய பட்டுப் பாதை ( Ancient Silk Road ) என்பது 2000 வருடங்களுக்கு முன்பாக உலகத்தின் கிழக்கையும் மேற்கையும் இணைத்த பாதையாகும். இது சீனாவின் ஹான் empire- இலிருந்து ரோம் வரை சென்றது. முதன் முதலாக பட்டு உற்பத்தியைக் கண்டறிந்து, அதில் சிறந்து விளங்கியது சீனா. ஆகவே, சீனாவிலிருந்து Silk trade பல நாடுகளுக்கு நடத்தப்பட்டது.
குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் உதவியால் வர்த்தகம் நடைபெற்றது. Both incoming & outgoing. பட்டு மட்டுமின்றி, மற்ற பொருட்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இருப்பினும் இது பட்டுப்பாதை என்றே கூறப்பட்டது. ஏறக்குறைய 6000 கிலோ மீட்டர்களை இது கொண்டிருந்தது. Petrol, diesel ஏதுமில்லாத காலத்திலேயே இவ்வளவு தூரம் பயணங்களும் வர்த்தகங்களும் amazing and hard taskதான். ஆனால் இது முதல் trade route அல்ல. இதற்கு முன்னதாய் Persians ஒரு route வைத்திருந்தார்கள் [ 2000 கிலோ மீட்டர்களுக்கும் கூடுதலான தூரத்துடன் ]
பின்னர் Silk road உண்டானபோது இந்த Persian's route- ம் ஏறக்குறைய Silk road உடன் merge ஆகிவிட்டது. இந்த Silk road-ன் மூலமாக trade ஆனவை பொருட்கள் மட்டும் அல்ல. There were travelling of art & architecture, culture ; religions also. இந்தப் பாதை நாகரீகங்களின் வளர்ச்சிக்கும் கலப்பிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக இருந்தது. இந்த Silk route - இல் Venice முதல் China வரை travel பண்ணியவர் Marco Polo.
இப்போதும் ஒரு புதிய பட்டுப்பாதை பயன்பாட்டில் உள்ளது.
இந்த பழைய பட்டுப் பாதையில் காஷ்மீரில் கந்தர்பால் [ Ganderbal ] மாவட்டத்தில் உள்ள சோன்மார்க் என்ற ஊர் சீனாவை இந்தியாவுடன் இணைக்கும் முக்கிய junction or gateway ஆக இருந்தது. இந்த சோன்மார்கிற்குச் சென்றது ஏதோ பழைய பட்டுப் பாதைக்கே செல்லுவது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
Sonmarg அல்லது Sonamarg - ன் ( Sonamarag in Kashmiri language ) மக்கள் தொகை ரொம்ப கம்மி. 2021 census படி 1000 பேருக்கும் குறைவானவர்களே இங்கு வசிக்கிறார்கள்.( permanent settlement இல்லை என்று படித்தேன். ) ஏனெனில் winter -ல் full -ஆ பனி ஆக இருக்குமாம். Sonmarg - இல் முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடங்கள் இரண்டு 1. Zoji-la ( and Zero Point ) 2. Thajiwas glacier . பார்க்க வேண்டிய இடங்கள் என்று கூறுவதைவிட , பயணிக்க வேண்டிய இடங்கள் என்பது more applicable. இந்த Zojila , Zojila pass என்று குறிப்பிடப் படுகிறது. ஆனால் , 'la' என்பதற்கே pass என்றுதான் பொருள். So, இது Zoji pass. இது ஒரு difficult -ஆன உயர மலைப்பாதை. Leh ( Ladakh )- ஐ Kashmir- உடன் இணைக்கிறது. உத்தேசமாக 3582 metres above the sea level . Winter- ல் close ஆகி இருக்கும். இந்தப் பாதையில் Zero Point என்று ஒரு பனி மூடிய place இருக்கிறது. இதற்குப் பின்னர் லடாக் வரை habitations இல்லை என்பதால் இதற்கு '0' point என்று பெயர்.
Amarnath யாத்திரையின் ஒரு பகுதி Sonmarg- ன் Baltal Valley -யிலிருந்து தொடங்குகிறது
சிந்து பள்ளத்தாக்கு or சிந்து சமவெளி என்பது காஷ்மீரில் கந்தர்பால் ( Ganderbal ) மாவட்டத்தில் உள்ள இமயமலைத் தொடரில் உள்ளது. இதில் ஓடுவதுதான் சிந்து நதி. ( Sindh river - not to be confused with Sindhu / Indus river). இது Jhelum நதியின் tributary ஆகும். Srinagar to Sonmarg செல்லும்போது சாலையின் வலதுபுறமாக தொட்டுவிடும் தூரத்திலேயே எதிர்த்திசையில் ஓடிவரும் சிந்து நதி தெளிவாகத் தெரிகிறது. ( NH 1 A- என்பது Srinagar to Sonmarg செல்லும் சாலையின் பழைய எண் ஆகும். தற்போது தேசிய நெடுஞ்சாலை 1 ( NH 1) என்பது உரி (Uri) யிலிருந்து பாரமுல்லா, ஶ்ரீநகர் , சோன்மார்க், ஜோஜி லா, திராஸ், கார்கில், லே ஆகிய இடங்களுக்குச் செல்கிறது. ) நாம் கீழிருந்து மேலே பயணிக்கிறோம். ஆனால், road ரொம்ப steep-ஆக மேலே ஏறுவதில்லை. slow ( mild ) sloping தான். அதே slow sloping -ல் சிந்து நதி கீழே Srinagar -க்கு ஓடுகிறது. [ Dras பகுதியில் இருக்கிற மசோய் பனியாற்றிலிருந்து ( Machoi glacier of inner Himalayas ) புறப்படும் சிந்து நதி Sonmarg -இல் பாய்கிறது. Sonmarg -இலிருந்து Srinagar- க்கு ஓடுகிறது. ]
வழியெல்லாம் பனிப் பாறைகளிலிருந்து நீர் வழிந்தோடி நதியில் சென்று கலப்பதைப் பார்க்க மிக அழகாக இருக்கிறது. எவ்வாறெனில், பனி மூடிய பாறைகள் ; பனியின் மேற்புறத்தில் இல்லாமல் அடிப்புறமாக, உருகிய நீர் ,சின்ன சின்ன streams-ஆக Sindh river -இல் வந்து கலக்கிறது. ரோட்டின் அருகிலேயே கூடவே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ஆற்றில் 3 புனல் மின் நிலையங்கள் [ Hydro-electric power plants ] உள்ளன.
This Sindh River, thus flowing and getting fed by many glacial streams on its way, Srinagar அருகில் உள்ள ஷாதிபோரா என்ற இடத்தில் ஜீலம் நதியுடன் கலக்கிறது.
Thajiwas glacier க்கு ponyயில் ஏறிப் பயணம் செய்தோம். Ancient Silk Road -ல் இருந்த ஒரு route-ல் கல்லூரித் தோழியருடன் குதிரைப் பயணம் செய்தது மிகப் பழங்கால வரலாற்று நினைவுகளைக் கிளறி விட்டது. Leh (Ladakh) செல்லும் road- ல் நடந்தபோது ( கால்நடையாகவும் pony மேலும் ), - இந்த வழியாகத்தான் tradesmen போயிருப்பார்களோ?
Pony -ன் இடது பக்கத்திலிருந்து ஏறினோம். முடிந்த அளவு pony உடனும், helper உடனும் co- operate பண்ணுவது, மேலும் குதிரையின் regularity- ஐ disturb பண்ணாமல் இருப்பது என்று முடிவு செய்யப் பட்டது.
முதலில் இடது காலை strriup -ல் வைத்து தம் கட்டி குதிரைமேல் ஜம்ப் பண்ண வேண்டும். அப்படிப் பண்ணும்போதே வலதுகாலை குதிரையின் வலது பக்கம் போட வேண்டும். காலை stirrup -ல் வைத்து விடலாம். ஆனால் ஜம்ப் பண்ணுவது ? இந்த வயதில்..? So, காலை வைத்தவுடன் உடன் இருக்கும் helper நம்மை push பண்ணிவிட , சேணத்தின் ( saddle ) மீது உட்கார்ந்து விடலாம். ஏறியவுடன் [ கொஞ்சம் மேற்புறமும் , உட்புறமுமாக வளைந்திருக்கும் ] சேணத்தின் front edge -ஐக் கையால் பிடித்துக் கொள்ளச் சொன்னான் அஹ்லாக் என்ற பெயர் கொண்ட என்னுடைய helper . Both left and right feet- களை stirrup- ல் மாட்டிக் கொண்டால் riding -க்கு ready.
குதிரைகளை நிற்க வைத்திருந்த இடத்திலிருந்து Sonmarg road- ல் மேலே ஏற வேண்டும். Steps போல கற்களின் மேல் ஏறி குதிரை ரோட்டுக்கு வந்தபோது பயமாக இருந்தது. சற்று நேரம் கண்களை மூடிக் கொள்ள வேண்டும் ,அப்போது பயம் போய்விடும் என்று நினைத்துக் கண்ணை மூடினால் 10 seconds- க்கு மேல் மூட முடியவில்லை. Road cross பண்ணி ,மேலே ஏற ஆரம்பிக்கையில் ஒரே சேறும், தண்ணீரும். குதிரைக்கு வழுக்கி விடுமோ என்று தோன்றியது. ஆனால் 4 கால்கள் இருப்பதனால் balance பண்ணிக் கொள்ளும் என்ற எண்ணம் தைரியத்தைக் கொடுத்தது. Suicide Point ( எங்க போனாலும் ஒரு suicide point இருக்கிறது ! ) அருகில் நின்று photo எடுத்தோம்.
பின்னரும் பயணம் தொடர்ந்தது. இறக்கமான வழிகளும் came in between. அப்போது , காலிரண்டையும் மேலே தூக்கி, உடலைப் பின்னால் கொண்டு போக வேண்டும் - for gravitational balancing . அது ரொம்ப சுலபமாக இருந்தது. உண்மையான horse- riding feel கிடைத்தது. வழியில் குதிரைகளைத் தண்ணீர் குடிக்க விட்டனர். அதுதான் அங்கங்கே streams மலையிலிருந்து வருகின்றனவே! இடையிடையே கொஞ்சம் சமமான புல்வெளிகளில் சின்ன நீர்ப்பரப்புகள் இருந்தன. குதிரை தலையை நல்லா bend பண்ணிக் குடித்த போதும் comfortable ஆகத்தான் இருந்தது. சேணத்தைப் பிடித்துக் கொண்டேதான் அதுவரை பயணம் ! இப்படியாகத் தண்ணீர் குடித்தபோது குதிரையின் தலையையும் , கழுத்தையும் காணோம். ரொம்ப உடம்பை அசைக்காமல் தலையை மட்டும் சற்று சரித்துப் பார்த்தபோது , அது தண்ணீர் குடிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. பாவம் இல்லையா ? ( side story - பாவம் அல்லவா ?- இது என் தந்தையின் வார்த்தைகளில். அவர் மட்டும் இப்போது இருந்திருந்தால் எத்தனை சந்தோஷப்பட்டிருப்பார். ம்! வாழ்க்கைப் பயணம் இந்த steams -ன் நீர் போன்றதுதான். ஓடி, விழுந்து, கலந்து, பெருகி, அமைதியாகி முடிவடைய வேண்டியதுதான். புதிதாக family- யில் new members வரும்போது பழைய members போவது natural தானே? )
சரி, மறுபடி குதிரைக்கு வருவோம். தண்ணீர் அருந்திய குதிரை சிலிர்த்தவாறு பயணத்தைத் தொடர்ந்தது ; நாங்களும் தொடர்ந்தோம். வழியெல்லாம் பனிமலைகளும், பாறைகளும், கொஞ்சம் பசுமையும். ஆனால் இந்தப் பசுமை நீலகிரியின் பசுமையிலிருந்து மாறுபட்டு இருந்தது. இது வறப் [ rough ] பசுமை. பனியைத் தாங்கித் தாங்கி உரமேறிய பசுமை. செடிகள் ; புற்கள். இனிமையான, அரவணைக்கும், ஆதரிக்கும், புன் சிரிப்புச் சிரிக்கும் பசுமை அல்ல. இளம் பசுமை அல்ல. நான் உறைபனியையும் தாங்குவேன் என்று பறைசாற்றும் முரட்டுப் பசுமை.
இவ்வாறு பயணித்து தாஜிவாஸ் glacier - ஐ அடைந்தோம். Glacier -ல் , முன்பே குறிப்பிட்டது போல, பனி போர்த்திய பாறைகள் மினுமினுவென்று காட்சியளித்தன. பனி உருகி சிற்றோடைகளாக புல் தரையில் ஓடிக் கொண்டிருந்தது. Sledge -ல் சறுக்கினோம். பனித்தரையைப் பறித்துப் பறித்து, குழிசெய்து வெண்பனியைக் கையில் எடுத்து சாப்பிட்டோம்.
Wow Siraj . இன்னும் காஷ்மீரின் hangover effect விடவில்லையா ?
ReplyDeleteஅழகான, அருமையான விவரணைகள்! 🤩😃
Thank you நளினி. இப்போதுதான் finish பண்ண time கிடைத்தது.
Deleteஅழகான பயணக் கட்டுரை! தகவல் குறிப்புகளுடன் அனுபவங்களையும் நேர்த்தியாகக் கோர்த்து, பாந்தமான ஓர் உரையாடல் போன்ற நடை. வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி🙏
Delete