ஒரு புள்ளியில்

               இதில் எழுதியுள்ளவை என்னுடைய எழுத்துக்களே ஆயினும் ,ஏதோ ஒரு இடத்தில் வாசிப்பவர்களைச் சந்திக்கிறேன். அது ஒரு சம்பவமாக இருக்கலாம்  ;  இடமாக இருக்கலாம் ; கருத்தாக இருக்கலாம்; காலமாக ( நேரமாக )இருக்கலாம். உதாரணமாக குன்னூர் சிம்ஸ் பார்க் என்று வாசிக்கும்போது அங்கே சென்ற யாரோ ஒருவருக்கு அந்த இடம் மனக்கண் முன் வரும். ஒரு கப்பல் பயணத்தைப் பற்றிப் படிக்கையில் கப்பல் பயணம் செய்த ஒருவருக்கு அந்தப் பயண அனுபவங்கள் நினைவு வரும். தாஜ்மஹாலை ஆண்பாலாகவோ அன்றிப் பெண்பாலாகவோ கருத இயலாது என்று படிக்கும் போது அந்தக் கருத்து சரியெனவோ அல்லது சரி அல்ல எனவோ படிப்பவருக்குத் தோன்றலாம். 1973- ம் ஆண்டு என்று எழுதியதைப் படிக்கும்போது,  தான் 1973-ல் என்ன செய்து கொண்டிருந்தோம் ; பிறந்தோமா இல்லையா என்று கூட நினைவிற்கு வரலாம். So, ஏதோ ஒரு புள்ளியில் எழுதுபவரும்  வாசிப்பவரும்  meet பண்ணுகிறோம் அல்லவா ? அதனால்தான் இந்தப் புத்தகத்திற்கு  ' ஒரு புள்ளியில்  ' என்று பெயர் சூட்டியுள்ளேன். 

          அன்புடன்,

                      Dr. M.Y.  சிராஜுன்னிஸா M.B;B.S. DLO

Comments

  1. மாறன்.T.M.12 August 2022 at 22:19

    நிசம் தான்.நிறைய கனெக்ட் ஆகுது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அப்பாவின் ஆங்கிலம்

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]