( Travelling to Nilgiris- 2 ) மலைராணியின் மடியில் - 11
நீலகிரியின் ஊருக்கு உள்ளேயான பயணங்களில் முக்கியமாக அமைந்தது நடைப்பயணம்தான். ஏற்ற இறக்கங்களில், மலைச் சரிவில், படிக்கட்டுகளில், தேயிலைச் செடிகளுக்குள், புல் தரையில், மண் ரோடுகளில், தார் ரோடுகளில்.......புல் மேடுகளினூடான ஒற்றையடிப் பாதைகளில் , உண்ணிச் செடிகளுக்குள், மரங்களின் அருகில் என நடந்து நடந்து வாழ்ந்தோம்.
அது போல் train journeys அநேகமாக நீலகிரிக்குள்ளேதான் ஜாஸ்தி. குன்னூர், வெல்லிங்டன்,அருவங்காடு ,ஊட்டி என. மேட்டுப் பாளையம் குன்னூர் ரயிலிலும் சென்றுள்ளோம். மலைப் பாதைக் குகைகள் வரும் முன்னே வருகின்ற மாறுபட்ட ஒலியும், பின் குகை வரும்போது சற்றே குறையும் ஒளியும் , குகைக்குள் ரயில் பயணிக்கும்போது ஏற்படும் இருட்டும் இரைச்சலும் மனதிலேயே நிற்கின்ற நிகழ்வுகள் . மேட்டுப் பாளையம் செல்லுகையில் train- ன் front light வெளிச்சம் குகையோரத்தின் சுவர்களில் பட்டபோது , சுவற்றில் நெளியும் பாம்பைப் பார்த்திருக்கிறோம்.
Relatives வந்த சமயங்களில் Sims Park, Ooty Botanical Gardens என்று அழைத்துச் சென்றிருக்கிறோம். ஒரு தரம் என் சித்தப்பா பட்டாளத்துடன் காரில் வந்தார். பாட்டியும் வந்திருந்தார். ஆனால் garden -ல் நடக்க முடியாது என்பதால் ( பாட்டியை அத்தாமா என்று அழைப்போம் - அப்பாவை அத்தா என்று கூப்பிடுவதால் அத்தாவின் அம்மா அத்தாமா ) வீட்டிலேயே விட்டுவிட்டுக் கிளம்பினோம். ஊட்டிக்குப் போகும் ரோட்டில் கார் repair ஆகி நின்று விட்டது.
College- ல் படித்துக் கொண்டிருந்தபோது முதல் வருடம் நானும் 3 friends- ம் ( Geetha, Selvi, Mohanam ஆகியோர் ) கோவையிலிருந்து Coonoor - க்கு பஸ்ஸில் சென்றோம். அப்போது மோகனத்தின் அப்பா Coonoor ITI- யில் ( Part -1 -ல் குறிப்பிட்டிருந்த என் மாமா படித்த அதே ITI ) Principal ஆக இருந்தார் . நாங்கள் முதலில் Hare wood Quarters -ல் எங்கள் வீட்டிற்குச் சென்றோம். பின்னர் Mohana வீடு . அவர்கள் வீடு Sims Park அருகில் இருந்தது. அதற்கும் மேலே ITI guest house . Guest house- இலிருந்து இயற்கையை enjoy பண்ணிவாறு அப்படியே நடந்து சென்றோம். நாங்கள் few girls & மோகனத்தின் தம்பி என்று நினைக்கிறேன் - நாங்கள் கீழே புல் தரையில் நடந்து போய்க் கொண்டிருந்தோம்; அப்போது மேலே இரண்டு military men appear ஆனார்கள். Few seconds தான் பார்த்தோம் . உடனே panic ஆகி , போய் விடலாம் என்று கூறி திரும்பி வந்து விட்டோம். இப்போது எழுதிய சம்பவம் நடந்தது கல்லூரியில் படித்தபோது.
இதுமாதிரி ladies மட்டும் போனபோது panic ஆகி திரும்பிய தருணம் மற்றது உண்டு. அது எனக்குத் திருமணமாகி குழந்தைகள் பிறந்த பின்னர், ஒரு family tour- ன் போது நிகழ்ந்தது. அது என்னவெனில் நாங்கள் Kerala வில் உள்ள நெல்லியாம்பதி என்கிற tourist spot- க்குப் போயிருந்தபோது , அதிகாலையில் ladies மட்டும் காட்டுப் பாதையில் walking போனோம். போகும்போது இடையில் சடாரென மான் cross பண்ணியது. அதன்பின் வழியில் டயரில் நசுங்கி இறந்த நிலையில் ஒரு சிறிய பாம்பு கிடந்தது. Males உடன் இருந்திருந்தால் மேற்கொண்டு போயிருப்போமோ என்னமோ, அல்லது ஆண்கள், பயப்படாதீர்கள் என்று கிண்டல் பண்ணி இருக்கவோ அல்லது mental strength கொடுத்திருக்கவோ கூடும். முதல் சமயத்தில் போலவே , போய் விடலாம் என்று கூறி room- க்குச் சென்று விட்டோம். இது ஒரு female instinct என்றுதான் தோன்றுகிறது. ( இதை எழுதுகையில் தற்போது நடந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வருகிறது. என் பெண் ஒரு software company -யிலிருந்து இன்னொரு company -க்கு shift செய்தாள். ஆரம்பத்தில் on boarding ஆனவுடன் training கொடுக்கப்பட்டது. அப்போது work place- ல் if you feel somebody is behaving in a not good manner with you ,என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி. பல options கொடுக்கப் பட்டன. ஆனால் சரியான பதிலாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், immediately inform the superior, even if you have a small hunch. They give very good acceptance to the female instinct. )
Ok, again to our topic
மற்றொரு முறை இந்திரா என்ற வகுப்புத் தோழியும் ( அவள் ஊட்டியில் இருந்தாள். என் batch -ல் [1982 ] நீலகிரியிலிருந்து இன்னும் இருவர் இருந்தனர்.) நானும் ஊருக்கு வந்தோம். Coonoor -ல் வீட்டிற்கு வந்து அம்மாவைப் பார்த்துவிட்டு, சாப்பிட்டு விட்டு, பின்னர் ஊட்டிக்குக் கிளம்பினாள்.
Ooty flower show :- மலர்க் கண்காட்சி
Used to visit Flower Show on and off , many times. [ பிள்ளைப் பருவம் முதல் கல்லூரிப் பருவம் முடிய ] . கண்காட்சி இல்லாத சமயங்களிலும் visited Botanical garden many times - in elementary school ,high school times. Wellington -ல் 3rd standard படித்துக் கொண்டிருந்தபோது school -இலிருந்து Ooty _க்கு கூட்டிப் போனார்கள். Garden -இல் புல் வெளியை ஒட்டி ஒரு pipe- ல் சுவையான குடிநீர் கிடைக்கும். வெகு வேகமாக ஓடிப்போய் water can -ல் நிரப்பிக் கொண்டு வந்தது ஞாபகம் இருக்கிறது. என்னுடன் படித்த ஒரு பாப்பா, தோராயமாக ஒரு 100 gm எடையளவிருக்கும் பெரிய கல்கண்டைக் கொண்டு வந்திருந்தாள். அதைக் கஷ்டப்பட்டுக் கடித்துத் தின்றோம். ஒருதரம் Flower Show விற்கு கட்டுசாதம் கட்டிக் கொண்டு போனோம். Buddy என்னும் வேலைக்காரம்மா, பெரிய மூடி போட்ட எவர்சில்வர் பாத்திரத்தில் இடுப்பில் சுமந்து கொண்டு வந்தார். அப்போது திடீரென ' சடசட ' வென மழை பெய்யத் துவங்கி விடவே எல்லாரும் shelter தேடி ஓடினோம். Buddy இடுப்பில் இருந்த பாத்திரத்தைச் சுமந்து கொண்டே ஓடியது. அநேகமாக நாங்கள் சென்ற ஒவ்வொரு Flower show- வின் போதும் , மதியம் 2, 3 மணிக்குமேல் மழை வரும் - summer showers.
தற்சமயம் பல வருடங்களுக்குப் பிறகு Flower Show - வுக்குப் போனது 2019 மே மாதம். அது 123-வது மலர்க் காட்சி ஆகும். 10 பேர் போயிருந்தோம். அதன் பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக Corona Restrictions -ஆல் Flower Show நடத்தப் படவில்லை .
Comments
Post a Comment