தாஜ்மஹால் என்னும் அதிசயம்
சின்ன வயதிலிருந்தே தாஜ் மஹாலைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. இந்தியாவில் இருக்கும் one of the seven wonders of the world என்று படித்திருந்ததாலும், class-ல் history படிக்கும் போதும்.
ஒரு முறை என் கல்லூரித் தோழியிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் honey moon-க்கு Taj Mahal போக விழைவதாகச் சொன்ன போது, அவள் அது ஒரு கல்லறை என்று கூறி off செய்து விட்டாள். எனவே, ரொம்ப late ஆகத்தான் செல்வதற்கு chance கிடைத்தது.
ஆக்ரா நகருக்குள் செல்லும்போதே எங்காவது தாஜ்மஹால் தென்படுகிறதா என்றுதான் கண்கள் தேடின. ஆனால், hotel -க்குச் சென்று check- in செய்யும் வரை தாஜ்மஹால் தென்படவில்லை. அதன் பின்னர் எங்கே இருந்து பார்த்தாலும், (மேல் பகுதி மட்டும்தான் தெரியும்) , கண்ணைக் கவர்ந்து இழுக்கிறது.
சற்றுத் தொலைவிலிருந்த Agra Fort பெரியதாகவும், நிறைய white marble stone கட்டிடங்கள் இருந்த போதிலும் தாஜ் மஹாலின் வனப்பிற்கு ஈடாகாது. அக்பருக்கு red stone constructions -ம், ஷாஜஹானுக்கு white marble constructions -ம் பிடித்தமானவை என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
சூரியனை ஆண்பாலாகவும், சந்திரனை பல சமயங்களில் பெண்ணாகவும் சித்தரிக்கிறோம். ஹிந்தி language -ல் table, chair -க்கெல்லாம் gender உண்டு. Buildings பொதுவாக ஆண் பாலாகத்தான் கருதப் படுகின்றன. ஆனால் Tajmahal -ஐ ஆணாகவும் கருத இயலாது ; அன்றிப் பெண்ணாகவும் கருத இயலாது. It is unique in itself. White gown அல்லது white dress அணிந்த, துருதுருவென்று புத்துணர்ச்சியுடன் இருக்கும் ஒரு teen-age பெண் அல்லது teen-age பையன் போல கருதிக் கொள்ளலாம்.
Security check -க்காக நுழைவாயிலுக்கு வெளியே வரிசையில் நிற்கும்போது உள்ளே இருக்கின்ற dome , sun light பட்டு பளபளவென்று மின்னியது, ஏதோ நிலவு பக்கத்தில் வந்து விட்டது போலக் காட்சியளித்தது. நுழைவாயிலின் உள்ளே சென்று Taj Mahal -ஐப் பார்த்தவுடன் அப்படியே பிரமித்து, ஸ்தம்பித்து நின்று விட்டேன். சற்று நேரம் நடக்கவே இல்லை.
வெளிநாட்டில் பணி புரிந்தபோது அநேக வேற்று நாட்டு மக்கள் , Indian என்று தெரிந்ததும் கேட்டது " Have you seen Taj Mahal ? " என்றுதான். School tour- ன் போது Taj Mahal சென்றுள்ளாள் என் மகள் . நான் அதைப்பற்றி அவளிடம் பேசிக் கொண்டிருந்தபோது, " பாத்துக்கிட்டே இருக்கலாம் " என்றாள். மேலும் ஜனரஞ்சனி என்னும் தன்னுடைய friend , " இங்கேயே செத்திரலாம் போல இருக்கு ,'' என்று சொன்னதாகத் தெரிவித்தாள். Really, such is it's beauty. One should see to feel it ; you will be engulfed by nothing ; nothing at all but by TAJMAHAL.
Taj Mahal - ன் கலைநயமிக்க 3 enterances, அதன் garden, fountains, other smaller buildings, மேடைக்கு ஏறக்கூடிய marble steps , marble platform, carvings, main marble dome, சிறிய dome- கள், tombs of Mumtaz and Shajahan , carvings, 4 minarets , calligraphy, அருகே calm- ஆக ஓடிக் கொண்டிருக்கின்ற யமுனா நதி, Agra Fort- இலிருந்து பார்க்கும் போது தாஜ்மஹாலின் appearance ஆகியனவற்றைப் பற்றி நான் இங்கே describe செய்யப் போவதில்லை. அவை personal-ஆகப் பார்த்து feel பண்ண வேண்டியவை. வார்த்தைகளில் உணர வைப்பது not possible.
ஒரு காதலை கட்டிடமாக கட்டினால் தாஜ்மஹால் போல வரும்.நானெல்லாம் இன்னும் கவிதைலயே கதை ஓடிட்டு இருக்கேன்
ReplyDeleteஆஹா!
ReplyDelete