( Travelling to Nilgiris ) மலைராணியின் மடியில் - 10

நீலகிரிக்கான பயண அனுபவங்களை எனக்கே தெரியாத காலம் முதல் அதாவது 1958 -ல் என் தந்தையார் service -ல் சேர்ந்த காலம் முதற்கொண்டு, 2019 மே மாதம் குடும்பத்தாருடன் சென்றதுவரை நினைவு கூற இயலும். எவ்வாறு பயணப்பட்டார் என்பதை எங்கள் அப்பா சொன்னதில்லை. ஆனால் என் பாட்டி ,மகனை அவ்வளவு தூரம் ( அந்தக் காலகட்டத்தில் இது ரொம்ப distance -ஆகக் கருதப்பட்டது ) அனுப்ப விருப்பப் படவில்லையாம். பாட்டியின் தங்கைதான் money arrange பண்ணி கொடுத்து அனுப்பி விட்டார் என என் ஒன்றுவிட்ட அத்தை சொன்னார். MPSC- Madras Public Service Commission, exam எழுதி Revenue department -ல் சேர்ந்திருக்கிறார். Later தான் MPSC என்பது TNPSC -ஆகப் பெயர் மாறியது. அப்போது, சக employees உடனான ஒரு ஆரம்பகால அனுபவத்தைக் கூறியிருக்கிறார். Survey purpose -க்காக எல்லாரும் map வரைய வேண்டுமாம். அப்படி map வரைந்து கொண்டிருந்த ஒரு person " ச்ச் " என்று சொல்வாராம் . மற்றவர்கள் map- ல் ink கொட்டி மேப் நாசமாகி விட்டது என்று எண்ணியவாறு " என்ன mister ? என்ன ஆச்சு? " என்று ஆர்வமாக எட்டிப் பார்ப்பார்களாம். ஆனால், நாசமாகவில்லை சின்ன mistake -தான் என்று தெரிந்து சப்பென்று போய்விடும் என்று சொன்னார். அவர் 35 வருடங்கள் வருவாய்த் துறையில் பணியாற்றியதின் சம்பவங்களை share செய்ய ஏகப்பட்டது உண்டு. .But, this is about the travel . So, back to travel :-
My mother told me that while she was pregnant - carrying me, she and my father were travelling in train, அப்போது ஒரு பெரிய பாறாங்கல் railway track -ல் விழுந்து விட்ட படியால் வெகு நேரம் - around 3 hours, delay ஆகி விட்டதாம். அதை ஒரு complaint ஆகவே சொல்லவில்லை அம்மா. ஒரு incident ஆகத்தான் சொன்னார்கள். இது ஒரு knowledge about travel before I was born.
அதிகமான பயணங்கள் பஸ்ஸில்தான் அமைந்தன. அதற்கு அடுத்தபடியாகத்தான் train, car, jeep மற்றதெல்லாம்.
சமவெளியிருந்து தொடங்கும் மலைப் பயணம் பஸ்ஸில் போகும்போது ஒரு அனுபவத்தையும், ட்ரெய்னில் போகும்போது மற்றொரு அனுபவத்தையும், காரில் போகும்போது வேறு அனுபவத்தையும் கொடுக்க வல்லது. எப்படியெனில் பஸ் அகலமாகவும், நீளமாகவும் இருப்பதால் சற்று சிரமப்பட்டுத்தான் வளைவுகளில் ஏறும். ரோட்டின் ஓரமாக வரும். ஸீட் உயரமாக இருப்பதால் visual field அதிகமாக இருக்கும். பள்ளங்கள், மரங்கள், மலைகளை நன்றாகப் பார்க்க முடியும். ஆனால், காரில் பயணிக்கும்போது பாதுகாப்பாக இருப்பது போன்ற feeling ஏற்படும். Vision கம்மியாக இருக்கும்.
மலைப்பாதையில் "உர் உர் " என்று கியர் குறைத்து ஏற ஆரம்பிக்கும் பஸ் மேலே போகப்போக சிலுசிலுவென்ற குளிர் காற்று அடிக்க ஆரம்பிக்கும். குன்னூர் bus stand -ல் இறங்கும்போது வெயில் அடித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் விசு விசுவென்ற குளிர் காற்று உடலைக் குத்தும். ஆனால், வீட்டிற்குச் செல்லும் படிக்கட்டுகளில் ஏறி வீட்டைச் சென்றடைந்தவுடன் உடல் குளிரை மறந்துவிடும் அல்லது பழகிவிடும். ஒருவேளை ஏறிச் சென்ற effort -ல் உடல் சற்றே சூடேறி குளிரைக் குறைத்து விடுகிறதோ ? கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது வீட்டிற்குச் செல்வது சுகம். ஏனெனில் வீட்டில் அம்மா இருப்பார்கள். தங்கை would have gone for studies. அப்பா office -க்குச் சென்றிருப்பார். படிக்கட்டுகளில் ஏறி வீட்டு லைனின் ஆரம்பப் பகுதி கண்ணுக்குப் புலப்படும்பொழுதே மனதில் அமைதியும், ஆறுதலும் நிறைந்து விடும். அந்த நிகழ்வை நினைக்கையில் தற்போது கண் நிறையப் பார்க்கிறது, அம்மாவின் நினைவால்.
( Side story - ஜோதிகாவின் Sakthi Masala advertisement ஞாபகம் வருகிறது. . Food recipe' சொல்ல ஒரு பெண் paper- ஐயும் pen- ஐயும் எடுத்துக் கொண்டு எழுத ஆரம்பிக்க Jothika would tell ' Sakthi Masala ', then when the others expectantly ask & wait for more, she would tell just " சக்தி மசாலா, அவ்வளவுதான்." Similar to that கோவையிலிருந்து குன்னூருக்குச் சென்றால், மலையிலேறி வீட்டிற்குச் சென்றால், அம்மா இருக்கும். அப்புறம்? அம்மா இருக்கும். அவ்வளவுதான்.)
குன்னூரிலிருந்து ஊட்டிக்குச் செல்லும் train-ல் Wellington -ல் Sikh military men- ன் குடும்பத்தினர் - மனைவி குழந்தையர் ஏறுவார்கள். ரொம்ப easy going- ஆக இருப்பார்கள். அருவங்காடு ( or அரவங்காடு ?காரணப் பெயர் ) பகுதியில் ரயில் செல்லும்போது Cardite Factory - க்குச் சொந்தமான புல்வெளியில் flourescent green (வெளிர் பச்சை) colour -ஆன Sulphur powder- ஐ மலை போல் குவித்து வைத்திருப்பார்கள்.
சின்னப் பிள்ளைகளாக இருந்தபோது குன்னூரிலிருந்து downward journey யின் போது , vomiting many times. -Before reaching or at Mettuppalayam - உதகை , வெல்லிங்டன் அல்லது குன்னூரிலிருந்து பொள்ளாச்சி தாண்டி அம்பராம்பாளையம் வரை by bus , and changing busses . ஏறக்குறைய வீட்டை அடைய evening ஆகி விடும். சின்ன வயதானதால் exhaust ஆகி கீரைத் தண்டுபோல துவண்டு விடுவோம். But, on seeing uncles the mind would overjoy with love and affection. And grand father used to tell stories- the story of princess Shazadhi and ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி போன்றன. அதுவும் அதில் அபூர்வ சிந்தாமணி கேட்கும் 3 கேள்விகளை அட்சர சுத்தமாகச் சொல்வார். " சகோதர வாஞ்சையும், ஜீவகாருண்யமும் பூண்டு, சன்யாசியின் மந்திரக் கோலை அபகரித்து , இகபுறம் புகழும் மண்ணுலகை ஆளும் மன்னவன் இருக்கின்றானா இறந்து விட்டானா? அவன் யார்? " . "மண்ணுலகில் பெண்ணாகப் பிறந்து ஆண் வேடம் பூண்டு அமைச்சுத் தொழில் புரிந்து பஞ்ச வஞ்சியர்களை மணம் செய்து கொள்வதாக கவர்ந்து வரும்போது அப்பெண்களை மையல் கொண்ட சன்யாசியை அடித்துத் தரத்திய அரிவை இருக்கின்றாளா இறந்து விட்டாளா?....அவள் யார்? " இப்படியெல்லாம் .
மேலே வரும் பயணத்தில், காலை 6 -o clock பொள்ளாச்சி கூடலூர் பஸ்ஸைப் பிடித்தால் பத்து, பத்தரைக்கெல்லாம் குன்னூர் வந்து சேர்ந்து விடலாம். இதுவும் நெடும் பயணமாகத்தான் தோன்றும். பஸ்ஸும் கொஞ்சம் slow-ஆகத்தான் ஓடுமோ?
High school ஆரம்ப காலத்தில் ஒரு நாள் Ooty -க்கு மலை ரயிலில் school excursion . கடைசி நேரத்தில் ஓடிச் சென்று குன்னூர் railway station -ல் ஏற்றி விட்டார் என் அப்பா. ( S story - அப்பாவின் நினைவு வரும்போது கண் கசிகிறது. என் தந்தை மறைந்த போது, " நம்மளுக்காக எல்லா எடத்துக்கும் ஓடி ஓடி அலைஞ்ச காலைப் பாக்கலாமா அக்கா ? " என அழுதவாறு கேட்டாள் என் தங்கை. நான் மூடியிருந்த துணியை சற்றே மேலேற்றினேன் ; என் தந்தையின் பாதங்களையும், கணுக் கால்களையும் பார்த்தோம். )
Ok, now again to excursion - தமிழ் சிஸ்டர் சூப்பராகப் பாடியபடி ஒரு கம்பார்ட்மெண்ட்டிலிருந்து இன்னொரு கம்பார்ட்மெண்டுக்கு கம்பியைப் பிடித்தவாறு தாண்டியது, dance ஆடியது , எல்லாவற்றையும் பார்த்து, பயணித்து ஊட்டியை அடைந்தோம். அப்போதுதான் Todas வசிக்கும் Garden மந்துக்கு அழைத்துச் சென்றனர்.அங்கே நெய் or ?வெண்ணை வாசம் அடித்தது.வீடுகள் அரை வட்ட வடிவ கச்சா வீடுகளாக இருந்தன. கையால் நெய்த - அவர்களே அவர்களின் trade mark -ஆன, கம்பளியைப் போர்த்தியவாறு இருந்த ஆண்களையும், கம்பளியைப் போர்த்தியவாறு முடியை சுருள் சுருளாக சுருட்டி நீளமாக விட்டிருந்த பெண்களையும் பார்த்தோம் . எங்களுக்கு நடனம் ஆடிக் காட்டினர். சென்ற நாங்களும் அவர்களை கிண்டல் செய்வதுபோல் பார்க்கவில்லை ; அவர்களும் எங்களிடம் மிக இயல்பாக நடந்து கொண்டனர். Train-ல் போய் train- ல் தான் வந்திருப்போம். போனது மட்டும் நினைவில் உள்ளது.
Comments
Post a Comment