மலை ராணியின் மடியில் [ பாகம் 8 ]
" மலை வாழ்வின் சுவாரஸ்யம் வந்து பார்த்தா தெரியாது ; வாழ்ந்து பார்த்தாதான் தெரியும் "- said by the driver, once while driving up the hills.
Area- வின் மனிதர்களும், மற்ற உயிரினங்களும்
மற்றும், part- 5 ல் குறிப்பிட்டிருந்த அந்த மஞ்ச மல்லிகைச் செடிப் பந்தலின் மீது உட்கார்ந்திருப்போம். ஒருமுறை அங்கே பாம்பு ஓடியதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், பார்க்கவில்லை. பயமும் இருக்கவில்லை. ஆனால், area வில் பாம்புகள் பார்த்திருக்கிறோம்.
கோழிகள் வளர்த்திருக்கிறோம். அநேகமாக எல்லாவற்றிற்கும் பெயர் உண்டு. நல்ல sweet brown colour இறக்கையில் self design போட்டது போன்ற அமைப்பினைக் கொண்ட கோழி பேர் செகப்பி. குண்டாக இருக்கும். கொஞ்சம் proud -ஆக நடக்கும். வெள்ளை வெளேரென, பின்புறம் எப்பவுமே கொஞ்சம் அழுக்காக இருக்கும் கோழி பேர் பீத்தை. பீத்தை கொஞ்சம் பாவமானது. அமைதியானது. ஒருமுறை அந்தக் கோழி நிறைய குஞ்சுகள் பொரித்தது. தினமும் குஞ்சுகளுடன் மேயப்போகும் கோழி திரும்பி வரும்போது ஒரு கோழிக்குஞ்சு காணாமல் போயிருக்கும். பின்னர் ஒரு நாள் வீட்டின் புன்புறம் மேட்டின்மீது ஒரு சாம்பல் நிற பெரிய குண்டான சாரைப் பாம்பும், கோழியும் தலையைச் சிலிப்பிக் கொண்டு எதிரும் புதிருமாக நின்றன. அப்போது நாங்களும், எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களும் கீழே இருந்து பார்த்தோம். கோழியை " வா வா; வந்துரு வந்துரு " என்று கூப்பிட்டோம். அதற்கப் புரியும். ஆனால், கோழி late -ஆகத்தான் கீழே வந்தது.
அப்புறம் வாத்து. வாத்து குஞ்சு பொரிப்பதற்கு 28 நாட்கள் தேவைப்படும். கோழிக்கு 21 நாட்கள். எனவே ஒரு வாரம் முன்னதாக வாத்து முட்டைகளை வைத்து கோழியை அடை காக்க வைப்பார் என் அம்மா. ஒரு வாரத்திற்குப் பின் கோழி முட்டைகளை வைக்க வேண்டும். அவ்விதம் வைத்ததில் நிறைய கோழிக் குஞ்சுகளும், 2 வாத்துக் குஞ்சுகளும் பொரிந்தன. வாத்தை கழுத்தைப் பிடித்துத் தூக்க வேண்டும். வாத்து ரொம்ப naughty. வீட்டில் அகலமான drum-ல் water collect பண்ணி வைத்திருந்தோம். இரவு கூடை போட்டு வாத்துகளை மூடிவிட்டு காலையில் எழுந்து பார்க்கும்போது 2 வாத்துகளும் drum - தண்ணீரில் உட்கார்ந்து இருந்தன. ரொம்ப தொந்தரவாக இருந்ததால் விற்று விட்டோம். வாத்துக்கறி சாப்பிட்டதில்லை.
நாய் ஒன்று இருந்தது. தெருநாய்தான். ஆனால் line -இலேயே இருந்ததால் எல்லாரையும் அதற்குத் தெரியும். ( பெயர் மணி என்று நினைக்கிறேன். )
மாடுகளுடன், அல்லது சரியாகச் சொல்லப் போனால் பெரிய, நன்கு வளர்ந்த கன்றுக் குட்டிகளுடன் என்னுடைய அனுபவம் fearful. 7 -வதோ 8 - வதோ படித்துக் கொண்டிருந்தபோது ஒருமுறை school விட்டு, வீட்டிற்கு கற்படிக்கட்டில் ஏறி வந்தபோது,வீட்டிற்குச் செல்லும் line-ல் 1st house- க்கு அருகில் இருந்த குட்டிப் புல் மேட்டில் 3 மாடுகள் நின்று கொண்டிருந்தன. எனக்கு something fishy- யாகப் பட்டதால் வீட்டிற்கு முன்புறமாகப் போகும் அந்த வழியைத் தவிர்த்து , வீட்டின் பின்புறம் செல்வதற்காக எதிரில் இருந்த மேட்டில் ஏறினேன் . சற்று தூரம் வந்தவுடன் ஏதோ doubt வர பின்னால் திரும்பிப் பார்த்தபோது 3 மாடுகளும் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தன. உடனே நானும் ஓட ஆரம்பித்தேன். Without my planning, first I put the bag down while running and next I removed my slippers while keeping on running. When I reached the path going down to our line, turned right and ran down to my house. My house's backdoor was open, I entered and told the incident to my mother. Then, she and our neighbours - அதில் ஒரு servant girl Prema என்னும் பெண், ஒரு நீண்ட குச்சியை எடுத்துக் கொண்டு வர அனைவரும் மேலே சென்றோம் . என்னுடைய school bag, slippers வேறு எடுக்க வேண்டுமே ! மேலே சென்றபோது, ஒத்தை வீட்டில் இருந்த Sekaramma ( the same Sekaramma whom I mentioned in part 1), bag-ஐக் கையில் வைத்துக் கொண்டு [ மாடுகள் ஓடியதால் ஏற்பட்ட சத்தம் கேட்டு வெளியே வந்திருக்கிறார் ] அவர்கள் வீட்டுப் பின் கதவுக்கு அருகில் நின்றிருந்தார்கள். என்ன நடந்தது என்பதைப் பேசுவதற்குள் ஓடிய மாடுகள் போன வழியிலிருந்து மறுபடி திரும்பி ஓடி வந்தன .Once again, போன அனைவரும் கீழே திரும்பி ஓடி வந்தோம், including Prema with her very long stick in hand. ( Side story- இந்தக் கதையை என் குடும்பத்தினரிடம் சொல்லி இருந்தேன். ஒருதரம் blog எழுதுவது பற்றிப் பேச்சு வந்தபோது ' ம்க்கும் என்னத்தப் போய் எழுதறது ' என்று நான் அலுத்துக் கொண்டபோது, இளைய மகள் ' உங்களை மாடு தொரத்துச்சு இல்லை அதை எழுதுங்க ' என்று சொன்னாள். குன்னூர் சென்றிருந்த சமயத்தில் அந்த இடத்தைக் காட்டியிருந்தேன். மறுபடியும் ஒருமுறை குடும்பத்தினருடன் சென்றபோது ' இங்கதானே உங்களை மாடு தொரத்துச்சு ' என்று நினைவூட்டினாள் . )
TDK பிள்ளை street என்ற ஒரு road , Coonoor Market -இலிருந்து இடதுபுறம் வளைந்து மேலே ஏறும். அதன் வழி நடந்து நடந்து மேலேறிச் சென்றால் ,ஒரு junction -ல் ஒரு சின்ன connecting road வலது புறம் கீழிறங்கும். அதில் இறங்கி இடது புறம் செல்லும் ரோட்டில் போனால் டிலைட் தியேட்டர்.
குன்னூரில் மொத்தம் 3 cinema theatre -கள். கணேஷ் , டிலைட் ( name changed as ஶ்ரீலக்ஷ்மி later ), and Bedford. ( side story - Coonoor- ல் நிறைய English பேசுவார்கள் . ஒருமுறை bus- ல் பயணம் செய்த போது 2 பெண்கள் பஸ்ஸிற்குள் ஏறி உள்ளே போகாமல் நின்று கொண்டிருந்தனர். Conductor அவர்களை உள்ளே போகும்படிக் கூறியபோது தாங்கள் இருவரும் bed ford - ல் இறங்கி விடுவோம் என்று சொல்ல, உடனே conductor " நீங்கள் bedford - ல் இறங்குவதற்காக நான் foot board ல்- நிற்க வேண்டுமா ? " என்று கேட்டார்.) 3 theatre களிலும் படம் பார்த்திருக்கிறோம். நிறைய படங்கள். MGR ,சிவாஜி முதல் கமல், ரஜினி வரை. மற்றும் சிவகுமார்,விஜயகாந்த், சுதாகர், சுரேஷ் படங்களும் . சினிமாக்கள் அநேகமாக heroes oriented -ஆக இருப்பதால் நடிகைகளைக் குறிப்பிடவில்லை. அப்போதெல்லாம் TV இல்லாததால் சினிமா பார்ப்பது ஏதோ வேறு உலகத்தில் சஞ்சரிப்பது போல இருக்கும்.
மேலே கூறிய இந்த connecting road - ல் இறங்காமல் strait ஆக மேலே சென்று veterinary hospital -ஐ அடைவோம். அங்குதான் சீக்கு வந்த கோழிக்கு ஊசி போடக் கொண்டு போவோம். ஒருமுறை இதைப்பற்றி மகளிடமும் husband -இடமும் பேசிக் கொண்டிருந்த போது காலைக்கட்டிக் கொண்டு போக வேண்டுமா என்ற பேச்சு எழுந்தபோது அவ்வாறெல்லாம் கொண்டு போனதில்லை ; சும்மா கையில் குழந்தையைத் தூக்குவது போலத்தான் தூக்கிக் கொண்டு போவோம் என்ற fact உணரப் பட்டது.
ஆடுகளும் மேய்வதற்கு வரும் - வெள்ளாடுகள் . வாசலில் கோதுமை காயப் போடுவோம். வத்தலும் காயப் போடுவோம். அப்போது ஆடுகளும் மாடுகளும் வரும். துரத்துவதற்கு குச்சி வைத்துக் கொண்டு உட்கார்ந்து காவல் காப்போம். நாங்களும் சமயங்களில் வெய்யில் காய்வோம். வீட்டின் பின்புறம் போட்ட தோட்டத்தில் [3 பக்கம் வேலியெல்லாம் போட்டு ] - கொஞ்சம் செடிகள் வளர்ந்திருந்தன. 4- வது பக்கம் மேடாக இருந்தது. அந்த வழியாக ஆடுகள் வந்து தோட்டத்தில் குதித்து விட்டன. பின்னர் part 6- ல் குறிப்பிட்டிருந்த shed -ஐ remove பண்ணி விட்டனர். அதனால் அந்த இடத்தில் தோட்டம் போட்டோம். நிறைய vegetable yield கிடைத்தது. [ ஆடுகள் புக முடியாத strong வேலி முன் & பின் புறங்களில். முன் பக்கத்து வேலியில் மரக்குச்சி gate . வலது இடது புறங்களில் வீட்டுச் சுவர்கள் ].
Nice nostalgia
ReplyDeleteThanks🌹
Delete