மலைராணியின் மடியில் [ பாகம் 9 ]



ST. MARY'S GIRLS HIGHER SECONDARY SCHOOL



  6-ம் வகுப்பிலிருந்து  12-ம் வகுப்புவரை  St. Mary's school தான்.   - ஒரே school. ஆனால், 1- ம் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்புவரை  3  schoolகள்.  6th சேருவதற்கு entrance exam வைத்தார்கள்.  Obviously நான் பாஸ்தான். 
   ( This is not only about the school academic curriculum,  but the development of a girl to a woman both physically and mentally.  Mentoring and creation of a future lady of India.   -What you are going to be  ;     -emotional aspects.     Till 5th standard, யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் யோசிக்கத் தெரியாத மற்றும் யோசிக்கத் தேவையற்ற எடுப்பார் கைப் பிள்ளையைப் போன்றனரே குழந்தைகள்.  Mentoring and  sculpturing is made by the society.  Society includes the people, places  surroundings and things. )





                                  6-ம் வகுப்பில்  சேர்ந்து school போக ஆரம்பித்த பின்னர் , ஊரைச் சுற்றி ஓடிய ஓட்டங்கள் குறைந்து விட்டன. பள்ளியில் விளையாடிய  விளையாட்டுகள் தவிர வீட்டருகில் விளையாடிய விளையாட்டுகள் குறைந்து போயின.
 
                                 குன்னூரில் வண்டிப்பேட்டை அருகில் பள்ளிவாசல் இருக்கிறது. அங்கு ஒரு சின்ன  room -ல்  மதரஸா நடக்கும். மரப் படிக்கட்டுகளில் ஏறி மேலே செல்ல வேண்டும். அந்தப் படிக்கட்டுகளின் அருகே , கீழே இருக்கும் சின்னக் கடைகளில் குழந்தைகள் விளையாட நிறையப் பொருட்கள் கிடைக்கும். ஓதுவதற்கு வரும் சிறுவர் சிறுமியர்  அந்தப் பாதையில் விளையாடுவர்.  அந்தக் கடைகளில்  பிளாஸ்டிக்கினால்  ஆன குட்டி குட்டி கப் &  சாஸர்  பல நிறங்களில் கிடைக்கும் ,அவற்றையும் மற்ற குட்டி  plastic  பொருட்களையும் வாங்குவோம்.  5, 5 பைசாதான் விலை. சின்ன  size -ல் இருக்கும்.   அவற்றையெல்லாம்  ஒரு சின்ன மூடிபோட்ட  கூடையில் போட்டு ,school- க்கு எடுத்துக் கொண்டு போய்,  bench - ல் புக்ஸ் வைப்பதற்காக உட்புறமாக விடப் பட்டிருக்கும்   gap - ன் உள்ளே மறைவாக வைத்து , இரண்டு side -இலும் புத்தகங்கள் வைத்து ( room போல )  விளையாடுவோம்.   ஒருமுறை Teacher class எடுக்கும் போதும் அது -அந்த set up,  அங்கேயேதான் இருந்தது ( மறைவாக ).  

                                          School, வகுப்பறை, ground  எல்லாமே வியப்புதான்.படிப்புடன் கூடவே உலகத்தைச் சுற்றிச் சுற்றிப் பார்க்கும் வியப்பு.
              School -ல் 2 grounds உள்ளன.  School-ல்  games period ரொம்ப ஜாலி.  கீழ் ground-ல் தான்  co-co  +  other games. 10th  standard  முடியும் வரை கீழ் ground- ல்தான் சாப்பிடுவோம் - சின்ன வட்டமாக உட்கார்ந்து.  வீட்டிலிருந்து தண்ணீர் எல்லாம்  கொண்டு செல்ல மாட்டோம். School- இலேயே சுவையான தண்ணீர் கிடைக்கும். 



                             Assembly  மேல் ground - ல் நடக்கும். கீழ் ground-க்கும் மேல்  ground -க்கும் இடையில்  சற்று உயரமான செங்குத்தான சுவர் போன்ற புல்வெளி இருக்கும். இரண்டையும்  connect பண்ணுவது கொஞ்சம் வித்தியாசமான Y  shape-ல் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு படிக்கட்டுதான்.  இது முன்புறம்.  ஆனால் class rooms -ஐ எல்லாம் தாண்டி  பின்புற  வழியாக  மேலே ஏறினாலும் மேல் ground -க்குப் போக முடியும். இந்த - photos ஐ என் பெரிய மகளிடம் காட்டிப் பேசிக் கொண்டிருந்தேன். இது கீழ்  ground என்று சொல்லி  photo காட்டி விட்டு, பின்னர் இதுதான் மேல்  ground என்று காட்டியபோது  " ground னாலே கீழதான இருக்கும்  " என்று ஆச்சரியப் பட்டாள்.
 



                     6 th அல்லது 7 th standard -ல் உடன் படித்த ஒரு மலைஜாதிப் பெண்ணின் பெயர் ' பத்ரம்மா ' எனப்படும். பாவம், அவ்வளவாகப் படிப்பு வராது.  அடிக்க வரும்போது பயந்து கொண்டு  bench -க்குக் கீழெல்லாம் போய் ஒளிந்துகொள்வாள். இதை எழுதுகையில்  சுஜாதா எழுதிய ஒரு கதை நினைவுக்கு வருகிறது. அதில் ஒரு ஆராய்ச்சியாளனுக்கு ஒரு கடல் கன்னி கிடைக்கும். அதை அவனுடைய உதவியாளர்கள் ஒரு குச்சியினால் குத்தி  disturb பண்ணுவார்கள். அது பயந்து கொண்டு தண்ணீர்த் தொட்டியின் அடியில் போய்க் குப்புறப் படுத்துக் கொள்ளும். அதன்  fear மற்றும் பதட்டத்தோடு இந்தப் பெண் பத்ரம்மாவை ஒப்பிட முடிகிறது என்னால். அவர்களுக்கு தனியாக  coaching and moral support  கொடுத்து பதற்றத்தைத் தணித்திருக்க வேண்டுமல்லவா?  என் வகுப்பில் அவள் மட்டும்தான் மலைஜாதி பழங்குடி  இனப் பெண். படிக்கட்டும் என்றுதான் அதன் தந்தை வெகு தூரத்திலிருந்த  school-ல் சேர்த்து விட்டார். அந்தக் குழந்தைக்கும் படிக்க விருப்பம். அந்தப் பெண் 8th ,9th எல்லாம் படிக்கவில்லை என்ற ஞாபகம் வருகிறது. யாரைச் சொல்லி என்ன பயன் ? என்ன ஏது என்று தெரியாத  ஒரு  innocent girl -க்கு இந்த உலகை அறிமுகப் படுத்தும்போது ஒரு நிதானம் வேண்டாமா? Teacher -ஐ சொல்லிக் குற்றமில்லை. அவங்களுக்கு instrut  பண்ணியதைத்தானே அவங்க  செய்வார்கள் ?  அந்த  girl அதன் இருப்பிடத்திலிருந்து தினமும் வெகு தூரம் நடந்து வேறு வர வேண்டும். அதற்கே மிக்க நேரமும்,  energy யும் போய்விடும். அதை ஆதரித்து, அரவணைத்து படிப்பு சொல்லிக் கொடுக்க நம்  academic சிஸ்டத்தில் வழியில்லாமல் போய்விட்டது. 
                 
                       School- ல்  முதன்முதலாக என்னுடன் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து  கொண்டு ஆத்ம தோழியாக  அமைந்தவள் பிரபாவதி. ( 7th   -ல் ). குன்னூர் பஸ் ஸ்டேண்டின் இடது பக்கமாகத்தான் ஊரின் main part  இருக்கிறது. வலது பக்கம் கோத்தகிரி road .  ரோட்டின் ஆரம்பத்திலேயே எதிர்ப்புறம் இறக்கத்தில் Fire Service Station .  Opposite side- ல் வீடு. பிரபாவதி அந்த Fire Service Officer -ன் மகள். அதனால்   அவர்களது வீட்டுக்கும் Fire Service Station-க்கும் போவோம். அவள் தந்தைக்கு இன்னுமொரு குடும்பம் இருந்த காரணத்தால் வீட்டில் சச்சரவு .  . ஒரு மாலை வேளை அவளும், குடும்பத்தினரும் கண்ணீர் வடித்ததைப் பார்த்தேன். அப்புறம் அவர்கள்  plains-க்கு  transfer ஆகிச் சென்று விட்டார்கள். அதன் பிறகு  Bharathi  (  சென்னையிலிருந்து வந்த பெண்.. part- 6- ல் குறிப்பிட்டிருந்த lunchmates- ல் ஒருத்தி ) came from middle school and she became my friend and as well rival.  ஏனெனில்  8 th -ல் யார் 1 st rank வாங்குவதென்று எனக்கும் அவளுக்கும் போட்டியாக இருக்கும். 7-ம் வகுப்பில்தான் முதன் முதலாக பரிசு. பேச்சுப் போட்டியில் முதல் பரிசு. ( St. Marys School -ல்  first gift. Total-ஆக எடுத்துக் கொண்டால் third gift . ) பட்டை பட்டையாக செதுக்கப்பட்டதைப் போல் அமைந்த மூடி போட்ட அழகான பச்சை டப்பா. அந்த டப்பாவை  இன்னும் வைத்திருக்கிறேன்.(  அதனுள் என் அம்மா காஃபித்தூள் போட use பண்ணிய spoon, ஒரு  Saudi card , என் பெண்ணின்  diamond கம்மல் ஆகியனவற்றைப் போட்டு வைத்திருக்கிறேன்.) 




                        பாரதி, பத்மாவதி என்னும் குண்டுப் பெண், நான் -3 girls  ஒரு  set  and we had secret people ( ரகசிய மனிதர்கள் ).    தினமும் நேரம் கிடைக்கும்போது கதைகள். When recently I got   Padmavathi's  mobile number,  - lost re-union of a long time.  Phoneல்  பேசியபோது Shared secrets  and  இன்னும் யாரிடமும் சொல்லாத மற்றும் சொல்லிய  secrets -ஐ பகிர்ந்து கொள்ளவேண்டுமென்று ஆவல் ஏற்பட்டது.  

                         Started reading story and other books.  அவற்றையெல்லாம் படிப்பதும்,  படிக்கும்போது அந்தக் கதைகள் வழங்கும் உலகில் சஞ்சரிப்பதும் மிக ஆர்வமானதாக இருந்தது. அத்துடன் கிடைத்ததை எல்லாம் படிப்பது,  சுற்றிலும் நடப்பனவற்றை  observe பண்ணுவது பெற்றோருடன்   இருந்தபோது கிடைத்த பாதுகாப்பான சூழ்நிலை ,  சகோதரியின்  kinship,பள்ளியில் என் கவலையற்ற மனநிலை,  என்னுடைய association with  class friends ஆகியன  எனக்கு எழுதுவதற்கு ஒரு அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. 

                         Met my friend Shoba when we were studying 3rd standard. Then, since I shifted place and joined in another school, we lost touch. Once again I saw her in my school and we became thick friends . (side story- s s,  It was winter , and I was typing this after bath.  And when I typed ' thick ' , remembered coffee,  and had coffee before typing further.) 

                  நிறைய academic, oration, essay writing  போன்றவைகளுக்காக பரிசு வாங்கிய போதிலும், dancing, singing, handicraft, drawing ,acting in dramas, screenplay writing for drama, volley ball  என்று எல்லாவற்றிலும் கொஞ்சம்  touch இருந்துகொண்டே இருந்தது. ( Side-story- அது தொடர்ந்து college ல்,  மேடையில் பாடுவது, பேச்சுப் போட்டி, collage, photography competition  என்று பங்கு பெற வைத்தது.  'இந்தியப் பெண்களுக்கு என்ன தேவை? ' என்ற தலைப்பில்  Coimbatore Medical College-  ல் பேச்சுப் போட்டி நடந்தபோது  ' பாதுகாப்பு ' என்று பேசி 2- வது பரிசு வாங்கினேன். ஆனால் முதல் பரிசுதான் எனக்குத் தர வேண்டும்,  biassed-ஆக இன்னொரு girl-  க்குத் தந்து விட்டார்கள் என்று  எங்கள் class boys  சிலர் Biochemistry tutor- இடம் சண்டை போட்டனர். )

              10th standard-ல்  ASPL  (Assistant SPL ) ஆகவும்  12 th standard- SPL  (School Pupil Leader ) ஆகவும் தேர்ந்தெடுக்கப் பட்டேன்.  என்னுடன் கோயமுத்தூர் மருத்துவக் கல்லூரியில் படித்த ஒரு தோழி இரண்டு வருடங்கள்  எங்கள் பள்ளியில் படித்தாள். ஒருவேளை  12-ம் வகுப்பில்தான் வந்து சேர்ந்தாளோ?   ஒருதரம் Coimbatore Medical College -ல் பேசிக் கொண்டிருந்தபோது    ஒரு    Christian School -ல Muslim girl SPL  ஆகிறதுங்கறது  great தானே என்று சொன்னாள். அவள் சொன்ன பின்னர்தான்  அப்படியொரு மதப் பாகுபாடு இருப்பதே கருத்துக்குத் தோன்றியது.  எங்கள்  School people -ம் அவ்வாறு பாகு படுத்திப் பார்த்ததே  இல்லை. அந்தப் பெண்  plains -இலிருந்து வந்தவள். இங்குதான் உண்மை நிற்கிறது.  I LOVE MY SCHOOL

                                                 


             My school days and years went without any difficulty. We used to study only during exam times. தினம் படிப்பதெல்லாம் கிடையாது. அதனால் நல்ல சுகம்தான். எங்கள் housing area hilly -ஆக இருக்கின்றதால் மலை  children ஆகவே வளர்ந்தோம். அமைதியான,  care free -ஆன வாழ்க்கை.( சிறுகக் கட்டி பெருக வாழ் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.)  ஒருமுறை  plains-ல் இருந்து எங்கள் school -க்கு transfer ஆகி  வந்திருந்த ஒரு  sister மலை மாடுகள் என்று எங்களைத் திட்டினார். அது உறைக்கவே   இல்லை. ஜாலியாக இருந்தது.  There were problems, but they had been brushed away without any consequences what ever.

Comments

  1. வாழ்வின் மிக இனிமையான தருணங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா.

      Delete

Post a Comment

Popular posts from this blog

அப்பாவின் ஆங்கிலம்

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]