மலைராணியின் மடியில் [ 7 ]


 மலைராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள் -   பாகம் 7 

                குழந்தையை நினைக்க நினைக்கப் பொங்கி வரும்  தாய்ப்பால் போல, நீலகிரியை நினைக்க நினைக்க,  குளிரும், தென்றலும், பசுமையும் வந்து தாக்குகின்றன.




                                          பனிக்காலத்தில்  காலை எழுந்தவுடன்  ஜன்னலில் படர்ந்திருக்கும் பனியில்  எழுதுவது  or வரைவது தினசரி  routine . எழுதிய பின் அல்லது வரைந்த பின் அவை மெதுவாக உருகி கீழே வழிவது  பார்ப்பதற்கு அழகாக, சுகமாக , ச்சில்லென்று இருக்கும். அதுபோல் சீக்கிரமாக இருட்டி விடும் பனிக்கால மாலை வேளைகளில் 'ஸ்' என்றவாறு  வெளியே  உள்ள வேலைகளையோ, பொழுதுபோக்குகளையோ முடித்துவிட்டு வந்து, வீட்டின் கதகதப்பில் தஞ்சம் புகுவது இனிமையான ஒன்று.

                 முன்பே குறிப்பிட்டிருந்தது போன்று, Chess , இலக்கிய மன்றம், library -க்குச் சென்று book எடுத்துக் கொண்டு வந்து படிப்பது போன்ற  intellectual வேலைகள்,  cricket,  seven stones,  ஓடிப்பிடித்து விளையாடுவது ( one variant of this is ' Care-off  ' ), நொண்டி விளையாட்டு,  கில்லி, ஒளிதல் ( இது சரி..யான  game-  செடிகளுக்குள் எல்லாம் புகுந்து , covering a vast area )  , உண்ணிக்காய் சண்டை [ இதைப் பற்றிப் பின்னர் எழுதுகிறேன் ] போன்ற outdoor activities  உடன்  specific-ஆன innovative  வேலைகளும் நிறைய செய்வோம். அவற்றில் இரண்டை இங்கே கூறுகிறேன்  - 1. பட்டம், 2. சினிமா.  ( Play things done at 4th / 5th standard )   Newspaper கொண்டு பட்டம் செய்யும்போது சூச்சம் வைப்பது வாசல் கூட்டும்  broom stick- ன் stick கொண்டுதான். வீட்டின் முன்னால் இருக்கும் குட்டிப் புல்மேட்டின் மேல் அமர்ந்து சற்றுப் பெரிய பையன்கள் பட்டம் செய்வார்கள்.  ஒட்டுவதற்கு நான்தான் போய் வீட்டிலிருந்து சோற்றுப் பருக்கை கொண்டுவந்து கொடுப்பேன் .

               குட்டி அட்டைப் பெட்டி கொண்டு  Cinema  செய்வோம். அட்டை டப்பாவின்- அதாவது அட்டைப் பெட்டியின் நடுவில்  screen cut   பண்ணுவோம். இரண்டு துண்டு வாசல் கூட்டும்  broom stick குச்சிகளின்  strong -ஆன அடிப் பகுதிகளை உடைத்து   அட்டை டப்பாவின் இரு  edge -களின் அருகில் சொருகிக் கொள்ள வேண்டும். புத்தகங்களிலிருந்து- குமுதம், ஆனந்த விகடன் போன்றவை-  pictures cut  பண்ணிக் கொள்ள வேண்டும். அப்போதெல்லாம்  paper கொஞ்சம் கெட்டியாக இருக்கும். சில கலர்ப் படங்களும் கிடைக்கும். கத்தரித்து வைத்த  screen opening  வழியாக gum கொண்டு left side -ல் சொருகப் பட்டிருக்கும் சீமாத்துக் குச்சியில்  cut பண்ணி வைத்த படங்களை வரிசையாக   ஒட்ட வேண்டும்.  எல்லா  pictures -ஐயும் ஒட்டிய பின்,   ஒட்டப்பட்ட படங்களைக் கொண்ட நீளமான ரிப்பன்  போன்ற paper  கிடைக்கும்.  அதன் பின்  குச்சியைச் சுழற்றினால் அது சுழன்று   reel போல வரும்.  ஒரு  நீளமாகக் கத்தரித்த white பேப்பரில்  ஏதாவது எழுதி  -   for example  ' சினிமா ',   reel- உடன் ஒட்டி ,  white paper-ன்    கடைசியை   right side-ல் உள்ள குச்சியில் ,  back side edge -ல் பசை தடவி ஒட்டிக் கொள்வோம்.  Rotate the stick on the right  hand side slowly  and the picture will run slowly from  left to right.  இதுதான் சினிமா.  படங்கள் முழுவதுமாக முடிந்தவுடன்  reel -ஐ right to left  சுழற்றி- அதாவது left side  இருக்கும் குச்சியை wind பண்ணி, அடுத்த  time பார்ப்பதற்குத் தயார் செய்து கொள்வோம். 

           அப்புறம் நிறைய single negative loose films  கிடைக்கும்  -mainly  of Hindi actors and  actresses.  We would see it against sunlight.  ( While writing this I remember watching the solar eclipse through the x-ray film . And also  remember how we used to keep a convex lens over the hand  catching the sunlight  and feel  the skin of the hand  getting heated.  A  small circle  of focused and hot white light will fall on the skin ).

                            வீட்டிற்கு வரும் வேறொரு வழியில் அய்யப்பன் கோவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் மாரியம்மன் பண்டிகை நடக்கும்போது இந்தக் கோவிலின் அருகில் இருக்கின்ற நீளமான  மண்  ரோட்டில் வரிசையாக குழிகள் வெட்டி  அவற்றில் வெடி மருந்துகள் நிரப்பி வானவேடிக்கை நடக்கும்.  ( இரவில் ).  முன்னதாகவே வெடிபொருட்கள் நிரப்பப் பட்ட லாரி கேரளத்திலிருந்து வந்துவிடும் - முக்கியமாக நெம்மாரா, வல்லங்கி போன்ற இடங்களிலிருந்து.  நல்ல பெரிய வெடிகளாக இருப்பதால், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அதிரும். இது தவிர , மாலை நேரத்தில் வெடிக்கப்படும் வெடிகளினுள் இருந்து  parachute வெளிவரும். அதைத் தொடர்ந்து சென்று பிடித்துக் கொண்டு வருபவர்க்குப் பரிசு கொடுப்பார்கள். அது எங்கெல்லாமோ பறக்கும். மற்றொருமுறை  ஒரு வெடியிலிருந்து,  அது மேலே சென்று வெடித்தபின் உயிருள்ள  புறாக்கள் நான்கு உள்ளே இருந்து வெளியே வந்து பறந்தன. அதை மிக அதிசயமாகப் பார்த்தோம்.

 

                     

                          ( இடை இடையே கிளைக்கதை  - இந்த  அய்யப்பன் கோவில் coonoor மற்றும் சுற்று வட்டாரங்களில் ரொம்ப   famous. இதன் பூசாரி ஒரு Malayali. இவரும் எங்கப்பாவின்  friend தான். நானும் நன்கு அறிவேன். எங்குமே அதிகம் போகாத இவர் என்னுடைய திருமணத்திற்கு கோவை வந்தார். அத்துடன் எங்கள் பாஸ்டர்  Institute -ன்  deputy director  Dr Vasanth Pandit ,சைவம் வேண்டாம் என்று மறுத்துவிட்டு  mutton biriyani தான் வேண்டும் என்று  சாப்பிட்டதாக என்  colleague  ஒருவர் கூறினார் ).

             Part  4 - ல் குறிப்பிட்டது போல படித்த அனைத்துப் பள்ளிகளுமே Christian Schools,  exept   for 2 and a half years.  And all of my teachers, in both elementary education and higher school education are either Christians or Hindus. I know a  muslim teacher  in my elementary school and one in college but no one taught me directly.  என்  படிக்கும் திறமையை உணர்ந்து, என்னை முதன் முதலில்  stage-ல் பேச வைத்த  headmistress  is a Christian.

                   புது school text books and note books  வாசம் பிடித்தமானது ; லேசான பெட்ரோல், மண்ணெண்ணை,  nail polish, மெல்லிய phenyl வாசமும் கூட.   குன்னூர் மார்க்கெட்டின் உள்ளே போனவுடனேயே தெரியும் செவ்வக வடிவ stationery கடையின் வரிசையான கண்ணாடி போட்ட மர show case (rack )-கள் , table top  மாதிரி  நீளமாக இருக்கும். அதன் அருகில்  close- ஆக நின்று புக்ஸ்  and மற்ற stationery items  எல்லாம் வேடிக்கை பார்த்தவாறு  purchase  பண்ணுவது ரொம்ப ஜாலியாக இருக்கும். எங்கே போனாலும் வேடிக்கைதான்.  ஒருமுறை கடைக்குச் சென்றுவிட்டு மோடி மஸ்தான் வித்தை பார்க்கப் போய்  சிக்கிக் கொண்டேன். அதுவும் சின்னப் புள்ளையாக இருந்ததால் வட்டவடிவ மக்கள் கூட்டத்தின் முன்புறத்தில்.  அவன் வேறு மண்ணுளிப் பாம்பைக் காட்டுகிறான்.  பல் புடுங்கிய நாகத்தைக் கூடை மூடியைத் தட்டித் தட்டி உள்ளேயிருந்தே படமெடுக்க வைக்கிறான். அப்புறம் ஒரு சின்னவனைப் படுக்க வைத்து, கருப்பு நிற ( என்று நினைக்கிறேன் ) போர்வையால் மூடி வித்தை காட்டுகிறான். 

               "  வா இந்தப் பக்கம் " என்று சொன்னான். போர்வைக்குள் இருந்தவன்   "  வந்தேன் "  என்றான்.  அருகில் நின்று கொண்டிருந்த ஆளை நம்மிடம் சுட்டிக் காட்டியவாறு  அவர் என்ன கலர் சட்டை போட்டிருக்கிறார் என்று கேட்க போர்வைக்குள்ளிருந்தவன்  correct -ஆகச் சொல்கிறான். அப்பா வந்து கூட்டிக் கொண்டு போகும்வரை வேடிக்கைதான்.

                      

Comments

  1. I was wondering how I was so naughty and got into so many outdoor activities as listed in your blog.... Now I know, I am fit to be your younger sister He! He! He!.... Enjoyed every bit....!!! Keep Rocking my sister!!!

    ReplyDelete
    Replies
    1. Wonderful Siraj akka. This is Rangarajan. Thanks for rekindling those wonderful Harewood days.. Gave me loads to talk to my family about... Especially the month long Thanthi Mariamman festival where the whole town participated with Vaana vedikai, paatu kacheri etc.... Thanks once again. Hope you and family are fine

      Delete
    2. Thank you Rangarajan. Yes. Mariamman festival used to be very good... All are fine in the family, hoping and wishing the same for you all, especially in this pandemic.

      Delete
  2. Reply for the first comment starting with " I was wondering how I was so naughty and got into .... .... .... ... ... ... ..." - Thank you sister.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அப்பாவின் ஆங்கிலம்

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]