மலைராணியின் மடியில் ( 6 )
பள்ளியும் பிள்ளைகளும்
அனேகமாக quarters- ன் அனைத்து children -ம் Lions School- ல்தான் ஆரம்பக் கல்வி பயின்றனர் - upto 5th standard. 6 th standard -லிருந்து girls St Mary's -இலும், boys St Antony's -இலும். இது ஒரு natural routine- ஆக இருந்தது. 3rd standard பாதியிலிருந்துதான் நான் இங்கே பயின்றேன். School Head mistress பெயர் லில்லி. பின்புறம் மணல் கொட்டி வைத்திருந்தனர். என் தோழியர் இருவருடன் - அதில் ஒரு girl பெயர் Aysha maryam, கொட்டி வைத்திருந்த மணலை left palm -ல் வைத்துக் கொண்டு, right fingers-ல் எடுத்து பூ தெளிப்பதுபோல் தெளித்து , (teachers-க்குத் தெரியாமல்) பாட்டுப் பாடியவாறே ஆடுவோம். 5 th -ல் ஆரோக்கிய நாதன் என்னும் பையன், teacher இல்லாதபோது teacher -உடைய table மேல் ஏறி, trouser- ஐக் கீழிறக்கி dance ஆடினான். புத்தகங்கள் மிகவும் பிடித்தமானவை. வகுப்பறைகளும், செல்லும் வழியும் கூட. School-இலிருந்து கொஞ்சம் மேலே ஒரு church இருக்கும். அந்த church -ல் ஒரு போதும் நாங்கள் யாரையும் பார்த்ததில்லை. Church -க்குப் பின்னால் புதர் போல இருக்கும்.அங்கே இருக்கும் ஒரு செடியின் இலைகளை குருவி வெத்தலை என்று சொல்லி மெல்லுவோம். ஸ்கூலிலிருந்து சற்று மேலே Sim's Park செல்லும் வழியில் District Education Office கட்டினார்கள். Head mistress Officer இடம் ஏதாவது information சொல்லச் சொன்னால் குடுகுடுவென ஓடுவோம்.
Bedford- ல் என் friend ஆயிஷா மரியம் இருந்த வீட்டில் ஒரு குட்டை இருந்தது. அதிலிருந்து தலைப் பிரட்டைகளை மீன் குஞ்சுகள் என்று நினைத்துப் பிடித்து பெரிய bottle-ல் போட்டோம். வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்தபோது என் அம்மா அவை மீன் குஞ்சுகள் அல்ல, தலைப் பிரட்டைகள் என்று விளக்கினார். அம்மாவுக்கு school bag ரொம்ப பிடிக்கும். 'பைக்கட்டு' என்று செல்லமாகச் சொல்வார்கள். சொல்லப் போனால் அம்மாவிற்கு என்னென்னவெல்லாமோ பிடிக்கும். She used to admire a lot and she used to show that to us also, from rose flower to railway engine, from nose-ring to neighbourhood children.
எங்கள் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் மனோ, கார்த்தி, சூரி என்று 3 பையன்கள் இருந்தனர். அதில் மனோ என்னைவிடக் கொஞ்சம் பெரியவன் ; but he was not like other boys - he was like a care-taker to me. Girls விளையாடுவதற்கும், boys விளையாடுவதற்கும் இருந்த வேறுபாடுகளை நான் அறிந்தேன். பையன்கள் விளையாட்டில் அடிதடி அல்லது கைகலப்பு முக்கிய இடம் பெறும். பொதுவாக பெண் குழந்தைகள் violence, maximum கிள்ளி வைப்பதுதான். ஆனால் அதிகம் கோபித்துக் கொள்வது, பேசாமல் இருப்பது போன்றவை girls- இடம் இருக்கும்.
கீழ் லைனில் சுந்தரி, ராது என்று 2 sisters இருந்தனர். சுந்தரி was one year elder to me ,ராது சின்னவள். ஒருமுறை மனோ, கார்த்தி வீட்டில் சற்றே நீளமான இரு பெஞ்சுகள் எதிரும் புதிருமாக போட்டு அனைவரும் அமர்ந்திருந்தோம். Only 2 girls at that gathering. - நானும் ராதுவும். நான்5 th standard, ராது 2 nd standard. சுந்தரி வீட்டுக்குள் திடீரென வந்தாள். அப்போது '' ஓ, சண்டை சரியாயிருச்சா ? '' என்று ஒரு பையன் கேட்டான். ஆனால் சுந்தரியோ, பதில் ஏதும் பேசாமல், என் அருகில் ஒண்டி அமர்ந்து கொண்டிருந்த ராதுவின் கையை வெடுக்கெனப் பிடித்து '' வாடி '' என்று இழுத்து, கூட்டிக் கொண்டு போய்விட்டாள். என்ன சண்டை ,அல்லது உண்மையிலேயே சண்டை போட்டோமா என்பதே நினைவில்லை. ஆனால் மறுபடியும் close- ஆகி விட்டோம். St Mary's High School- ல் [ அப்போதெல்லாம் high school தான் .SSLC தான் ஸ்கூல் ஃபைனல் - அது 11th standard. College -ல் PUC course என்று ஒன்று இருந்தது . பின்னர்தான் 10 +2 , college-ல் direct -ஆக degree courses என்று அறிமுகப்படுத்தப்பட்டன ] 6 th சேர்ந்தபோது அவளுடன்தான் school- க்குப் போவேன். அவள் 7 th standard. அவளும், அவளின் ஒரு classmate-ம், classmate-ன் தங்கை பாரதியும் நானும்தான் lunchmates. மேலும், UPASI -யில் இருந்த அந்தப் பெண்களின் வீட்டிற்கு சுந்தரிதான் அழைத்துக் கொண்டு போவாள் .
இது போல, என் close friend ( till now we are continuing our friedship from 3rd standard onwards ) Shoba- உடன் வெகு காலம் பேசாமல் இருந்திருக்கிறேன் - பெரிய அல்லது உருப்படியான காரணம் எதுவும் இல்லாமல். இது girl's fight. சுந்தரியின் அப்பா பெயர் நடராஜன். சென்னையைச் சேர்ந்த இன்னொரு நடராஜனும் இருந்தார். Identify பண்ணுவதற்காக அவரை வெத்தலைபாக்கு நடராஜன் என்று அழைப்பார்கள். அவருக்கு ஶ்ரீதர்,பாலு, ஹரி மற்றும் இரண்டு பேர் என ஐந்து பையன்கள். அவர்கள்தான் cricket-இற்கும், இலக்கிய மன்றத்திற்கும் main. Mano, கார்த்தி வீட்டு முன்னால்தான் pitch. பக்காவாக stump எல்லாம் நட்டு. பால் second line- போனால் sixer. அப்போது LBW எல்லாம் நான் கற்றுக் கொண்டேன்.
முதல் லைனின் முதல் நான்கு வீட்டுக்கும் இரண்டாவது 4 வீட்டுக்கும் இடையில் ஒரு Tin shed இருக்கும். Tools, junk எல்லாம் போட்டு வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். (அது பூட்டியிருக்கும்.) Open செய்த சமயங்களில் உள்ளே சரியாக எட்டிப் பார்த்ததில்லை. வருடம் 1 முறை Coonoor municipality - யிலிருந்து வந்து அதை open பண்ணி ஆயுதபூஜை செய்வார்கள். எல்லா children -க்கும் பொரி முதலியன கொடுப்பார்கள். ஷெட்டின் roof house- ன் height-ஐ விட கம்மியாக இருந்ததால் 4th அல்லது 5th house-ன் (5th house எங்கள் வீடு 4th- மனோ,கார்த்தி வீடு ) ஜன்னலின் edge-ல் கால் வைத்து, கொஞ்சம் எம்பி மேலே ஏறி விடலாம். ஏணி கிடையாது. சங்கரம்மா வீட்டில் - 1st வீடு, மட்டும் ஏணி இருந்தது. வீட்டுக் கூரையில் வடகம் போடுவதற்காக அதைப் பயன்படுத்துவார்கள். Again back to shed- அவ்வாறு shed-ன் மேல் ஏறிய பையன்கள் தொப்,தொப் என்று தரைக்கு குதிப்பார்கள். நானும் குதித்திருக்கிறேன்
அந்த ஷெட்டிற்கு நீளம் கொஞ்சம் குறைவாக இருந்ததாலும், அதன் முன்புறத்தின் இருபுறமும், 4வது 5வது வீட்டின் சுவர்கள் இருந்ததாலும், ஒரு சின்ன veranda போல இருக்கும். அங்குதான் தமிழ் இலக்கிய மன்றம் நடைபெறும். பெரிய பையன்கள் -mainly Natarajan uncle's sons வீராவேசமாகப் பேச நாங்கள் எல்லாரும் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்போம். என்ன content என்று இன்றுவரை தெரியாது. ஆனால், it was of use because, 5 th standard படிக்கும்போது -Lion's School-ல், எங்கள் headmistress, ஏதோ ஒரு occasion -ன் போது, Indepedence day அல்லது அது போல் ஏதோ ஒன்று -காந்தி பற்றி எழுதிக் கொடுத்து பேச வைத்தார்கள். என் 1st oration அதுதான். அதற்கு எனக்குப் பரிசும் கடைத்தது. அந்தப் பையன் பேசியதுதான் எனக்கு முன்மாதிரி.
ஒரு சினிமா release ( K. Balachandar படம் என்று நினைக்கிறேன் ) ஆகியிருந்தது. அதில் ஒவ்வொரு எழுத்துகளுக்கும் முன்னர் க சேர்த்து வார்த்தைகளைப் பேசுவார்கள். உதாரணமாக சாதம் என்பதற்கு கசா கத கம் என்பதாக. அப்போது ஒருமுறை கார்த்தி அவர்கள் குடும்பத்தினர் கசி கனி கமா போவதாகச் சொன்னான். சினிமா போவது அவ்வளவு precious அல்லது secret.
அருமை
ReplyDeleteநன்றி🙏💕
Delete