மலை ராணியின் மடியில் [ பாகம் 8 ]

" மலை வாழ்வின் சுவாரஸ்யம் வந்து பார்த்தா தெரியாது ; வாழ்ந்து பார்த்தாதான் தெரியும் "- said by the driver, once while driving up the hills. Area- வின் மனிதர்களும், மற்ற உயிரினங்களும் மற்றும், part- 5 ல் குறிப்பிட்டிருந்த அந்த மஞ்ச மல்லிகைச் செடிப் பந்தலின் மீது உட்கார்ந்திருப்போம். ஒருமுறை அங்கே பாம்பு ஓடியதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், பார்க்கவில்லை. பயமும் இருக்கவில்லை. ஆனால், area வில் பாம்புகள் பார்த்திருக்கிறோம். கோழிகள் வளர்த்திருக்கிறோம். அநேகமாக எல்லாவற்றிற்கும் பெயர் உண்டு. நல்ல sweet brown colour இறக்கையில் self design போட்டது போன்ற அமைப்பினைக் கொண்ட கோழி பேர் செகப்பி. குண்டாக இருக்கும். கொஞ்சம் proud -ஆக நடக்கும். வெள்ளை வெளேரென, பின்புறம் எப்பவுமே கொஞ்சம் அழுக்காக இருக்கும் கோழி பேர் பீத்தை. பீத்தை கொஞ்சம் பாவமானது. அமைதியானது. ஒருமுறை அந...