தண்ணீருக்குள்ளே ..... ..... [ MSD - Maiden Scuba Diving ]
பாண்டிச்சேரியில் ( தற்போது புதுச்சேரி ) friend's son -ன் திருமணத்திற்குச் சென்றபோது, 2- 3 நாட்கள் spend பண்ண வேண்டும் என்று முடிவு செய்து, பின்னர் அங்கே Scuba diving செய்தோம். Marriage function, visiting friends, enjoying in beaches, visiting Auroville, eating French food, shopping and things like that- I will finish in a single sentence, because this is not a Travelogue ( பயணக் கட்டுரை ). So, straight away I will go to Scuba Diving. ( dived on 25th January 2021 )
The full form for SCUBA is Self- contained underwater breathing apparatus. So, with the help of this we should breathe underwater. முதலில் online-ல் register செய்தோம் . Registration செய்தபின் அல்லது while doing registration itself, we had class- Devaraj என்பவர் class எடுத்தார் ( he was the one with whom we negotiated about the payment and other information ) , about the pressure changes underwater, how it affects the airspaces of our body, how the ear is affected and how to overcome these. Pressure increase ஆகும்போது ஏற்படும் ear pain- ஐ எப்படி air equalise செய்து போக்குவது என்பதையும் hand signals பற்றியும் சொல்லிக் கொடுத்தார். ரொம்ப simple-ஆக, "close the nose and blow, you can feel air entering the ear " ,என்று சொன்னார் .( Medical languageல் இதை நாங்கள் Valsalva Manoeuvre என்று சொல்வோம் ). Hand signals -ல் , -alright or fine என்று குறிப்பிட, (thumb up) மேலே போக, (thumb down) கீழிறங்க, மாஸ்க், கண், காது, விரலால் சுட்டிக் காட்டி wavering the hand (சரியில்லை , uncomfortable or paining என உணர்த்த) and a few more. And what is the handsign they will show to equalise pressure . மேலும் நீருக்குள் இருக்கும்போது regulator வாயிலிருந்து போய் விட்டால் அதை எப்படி - retrieve செய்வது என்பதையும் . நம் right arm-ஐ right thigh மேல் வைத்து, அப்படியே arm-ஐ பின்னால் கொண்டு சென்று, பின்புறத்திலிருந்து முன்புறமாக full swing-ஆக swipe செய்தால் , regulator வலது கையின் மேல் வந்து விடும் . அதை எடுத்து வாயில் fix பண்ணிக் கொள்ள வேண்டும். இன்னும், purging பண்ண வேண்டும் . அதை practical training-ல் சொல்கிறேன்.
ஒரு பெரிய தண்ணீர் tank-ல் training. முதலில் ஒரு single piece wet suit போட்டுக் கொள்ள வேண்டும் - over your innerwear . இந்த wet suit special synthetic material கொண்டு செய்யப் பட்டது. கொஞ்சம்- rubber and cloth கலந்த மாதிரி இருந்தது- with foam and bubbles of gas - thermal protection தருவதற்கும், மிதப்பதற்கும், மற்றும் abrasions- ஐ தடுப்பதற்கும் . பின்னால் ஒரு long zip இருந்தது. கால்களை நுழைத்து, மேலேற்றி, பின் கைகளை நுழைத்து ,மறுபடியும் இடுப்புப் பகுதியில் மேலேற்றி, adjust செய்து,back zip போட வேண்டும் . அது bodyயோடு comfortable -ஆக fit ஆகி விடும். நிறைய size-களில் வைத்துள்ளார்கள். அவர்களே select பண்ணிக் கொடுத்து விடுவார்கள் . பின்னர், உயரத்தில் கட்டப் பட்டிருந்த நீர் நிரம்பிய பெரிய tank -ல் இறங்க வேண்டும் . எல்லோருக்கும் half mask கொடுத்தனர். அதாவது கண்கள் மற்றும் மூக்கை மூடும். அத்துடன் ஒரு floating jacket with oxygen cylinder கொடுத்தனர். முதலில் right hand, then left hand அப்புறம் fixing buckles. அவர்களே அணிவித்து விடுவார்கள் , speed- ஆக. If we do , it may take a long time, because we do not have experience. முக்கியமான 3 underwater skills கற்றுக் கொடுத்தனர்.
முதலாவது underwater mouth breathing. அணிந்திருந்த floating jacket-ன் பின்புறத்தில் breathing gas சிலிண்டர் இருந்தது. இது பொதுவாக compressed air ஆக இருக்கும். ஆனால் oxygen cylinder என்றுதான் சொல்கிறார்கள். எடுத்துப் பார்த்தபோது இரண்டு regulatorகள் இருந்தன. எதற்கு என்று விசாரித்தபோது , " for the other person, in case of an emergency " என்று சொன்னார் diving trainer . " ஐயையோ, இது வேறயா? " என்று தோன்றியது. Regulator- ன் mouth piece -ன் உட்புறம் rubber ஆல் ஆன 2 projections இருந்தன. அவற்றைப் பற்களால் கடித்து ,பின்னர் உதடுகளால் " ஓ " என்ற shape-ல் cover செய்து கொள்ள வேண்டும் . ஒரு Instructor " dont make ee' , make o ",என்று சொல்லிக் கொண்டிருந்தார். இப்பொது inhale பண்ண air lungs உள்ளே செல்வது சுகமாக இருந்தது . ஆனால், அதனுடன் மூழ்கி மூச்சு விட்டபோது, வெளியேறிய CO2 produce பண்ணிய air bubbles -ம்,அதன் " க்ளக் க்ளக் " போன்ற sound-ம், என்னவோ breathing gas நமக்குள் செல்லாமல் leak ஆகிறது போன்ற ஒரு திகைப்பை ஆரம்பத்தில் ஏறபடுத்தியது. But, சீக்கிரம் பழகி விட்டது. கொஞ்சம் Slow- ஆக, relaxed- ஆக , conscious about breathing- ஆக வாயால் inhale and exhale பண்ண வேண்டும் . தண்ணீரில் இருந்ததால் cylinder-ன் weight தெரியவில்லை. ஆனால் jacket-க்கு buoyancy இருப்பதால் மூழ்குவது difficult-ஆக இருந்தது . So, the trainer ( கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நிகில் என்னும் பையன் )- " I am putting some weights in your pocket ", என்று கூறி jacket -ன் 2 pocket- களிலும் lead pieces போட்டான். சிறியதாக இருந்தாலும் 1 piece 1 kg weight உடையது . இப்போது, மூழ்குவது எளிதாக இருந்தது. I went underwater, almost squatted and practiced breathing. [ i..mh... hu.. mh ] Comfortable, calm மற்றும் pleasant -ஆன சுவாசம் கிடைத்தது .
இரண்டாவது ஸ்கில் cleaning or clearing the mask . தண்ணீருக்குள் இருக்கும்போது mask -இனுள் தண்ணீர் புகுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது. Lift the head slightly up, press upper part of the mask with heel portion of the palm of the hand, press and blow the nose forcefully as if clearing it. But, must not slide or lift the forehead part up ( which we feel like doing ) . அவ்வாறு forehead portion-ஐ லேசாக உயர்த்தினால் இன்னும் தண்ணீர் உள்ளே புகுந்து விடும் , நீரின் அழுத்தம் அதிகமாக இருப்பதனால். மேலும், கொஞ்சம் strong -ஆகவே exhale பண்ண வேண்டும் . The force you are exerting through the nostrils must be forceful enough to expel the water through the small opening ( which you create by pressing the mask ) , opposing the water pressure surrounding you. இந்த technical explanation, மற்றும் physics கொஞ்சம் சிக்கலானதாகத் தோன்றினாலும், செய்வதற்கு சுலபமாகத்தான் இருந்தது. இதை வேகமாகக் கற்றுக் கொண்டேன்.
மூன்றாவது underwater skill is retrieving the regulator and purging . தண்ணீருக்குள் இருக்கும் போது, எதிர்பாராமல் regulator நீரினுள் விழுந்து விட்டால் , stretch the right arm and swipe it in a sweeping motion from behind forwards ( ஒரு பெரிய அரை வட்டம் ), regulator வலது கை மேல் வரும். இந்த சமயத்தில் inhale பண்ணிவிடக் கூடாது . Regulator -ஐ கையில் எடுத்தவுடன் வாயைத் திறந்து , உள்ளிருக்கும் 2 rubber clamps -களை பற்களால் கடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்கையில் water will fill in the mouth and not air. ஏனென்றால் regulator-ன் valve ஒரு demand valve . அதாவது inhale செய்யும்போது மட்டுமே திறந்துகொண்டு breathing gas lungs -இனுள் புகும். Inhale பண்ணுவதற்கு முன்னால் வாயிலிருக்கும் நீரை நாம் மூழ்கியிருக்கும் நீருக்குள் வெளியேற்ற வேண்டும். அதற்கு regulator-ன் பின்பக்கம் கொடுக்கப் பட்டிருக்கும் rubber button -ஐ - sharp and crisp-ஆக press பண்ணச் சொன்னார்கள். இப்போது forcefull -ஆன air , regulator-ன் mouth piece-ல், பற்களால் கடித்திருந்த rubber clamp -களை சுற்றியிருந்த space வழியாக வந்து, வாயிலிருந்த நீரை வெளியே தள்ளியது. இதற்கு purging என்று பெயர். இது முக்கியமான underwater skill. இந்த ஸ்கில் கொஞ்சம் கஷ்டம்தான். நீருக்கடியில் இருந்து கொண்டே, regulator-ஐ remove பண்ணி ,மீண்டும் வாயில்பொருத்தி , வாயினுட்புகுந்துள்ள நீரை வெளியேற்றி , சிலிண்டரின் gas -ஐ சுவாசிப்பது - இது இரண்டையும் தண்ணீருக்குள் இருக்கின்றபோதே செய்ய வேண்டும். Hard to hear, no? Hard to do also. Because once your regulator is out of your mouth, you get panicked and tend to open the mouth and alas! Water enters inside, you swallow, inhale, cough & what not!
Challenging task தான் என்றாலும் அழகாக சொல்லிக் கொடுக்கிறார்கள். பயிற்சிக்குப் பிறகு ஒரு rubberised shoes போடக் கொடுத்தார்கள்.
Actual diving - இற்கு போகுமுன் அகலமான ,கெட்டியான plastic belt -ல் 4 lead pieces சேர்த்து - ஒவ்வொன்றும் 1 kg , இடுப்பில் அணிவித்தார்கள். பின்னர் half mask தந்தனர். Buoyant jacket with oxygen cylinder at the back போட்டு விட்டார்கள் - and we were ready to dive .என்னுடன் வந்த staff divers " நித்யம் " என்ற பெண்ணும், ஒரு பையனும் ஆவர். கால்களுக்கு fins மாட்டி விட்டனர்.
Diving -ல் first 10 அடி அல்லது இன்னும் சற்றுக் கீழே சென்றபோது water colourless ஆகத்தான் தெரிந்தது. மேலே தலையை நிமிர்த்திப் பார்த்தபோது , வெய்யிலும், நீரின் மேற்பரப்பும், அதன்மேல் free space-ம் clear ஆக delineate பண்ண முடிந்தது. அத்துடன், நானும், என்னுடன் வந்த divers-ம் வெளியிட்ட CO 2 bubbles நீருக்கு மேலே போனது எப்படி இருந்தது என்றால் - sunlight பட்டு gas bubbles மின்னின . Bubbles வெளியேறியது கண்ணாடியாலான oblong முத்துக்கள் சரம் சரமாக water surface-இலிருந்து உள்ளே கொட்டுவதுபோல் மிக அழகாக இருந்தது . நீருக்குள் இன்னும் ஆழமாகச் சென்றபோது எனது left ear -ல் வலி ஏற்பட்டது . Equalise செய்த பின்னால் வலி போய்விட்டது.
இப்போது வெளிச்சம் குறைந்து விட்டது. நீரின் நிறம் aqua green ஆக மாறிவிட்டது. ( அதனால்தானே அதற்கு aqua green என்று பெயர் ) கொஞ்சம் இறுக்கமான feeling - due to water pressure. ஒளி குறைவாக இருந்தாலும் vision clear -ஆக இருந்தது . நீரோட்டம் தெரிந்தது . About 20 degrees slanting-ஆக, from my left side to right side water current சென்றது. மீன் நீந்துவது பார்த்தேன்.
Underwater photographer மும்பையைச் சேர்ந்த ஒரு young girl . அந்தப் பெண் என்னை photo எடுக்க close-ஆக வந்தபோது மீன் தொட்டியில் கண்ணாடிக்கருகில் மீன் முகத்தைக் கொண்டு வருவதுபோல் தோன்றியது . Through the goggles of my mask, இடையில் கொஞ்சம் பச்சை (நிற) தண்ணீர், அந்தப் பெண்ணின் goggles- க்குள் தெரிந்த கண்களைப் பார்த்தபோது வியப்பாகவும், திகைப்பாகவும், அன்னியோன்னியமாகவும் இருந்தது. Photo எடுத்தபோது. பழக்க தோஷத்தில் underwater-ல் இருந்தபோதே smile பண்ணி விட்டேன் . -see, with the breathing gas regulator in my mouth! அதனால் முகத்தில் கொஞ்சம் gap ஏற்பட்டதால், தண்ணீர் mask -ன் உள்ளே புகுந்து விட்டது.
என்னுடன் வந்த 'நித்யம்' -diving staff, mask-ஐ press செய்து தண்ணீரை வெளியேற்றினாள்.
ஆரம்பத்திலேயே ஒரு senior insrtuctor " Don't make EE ; make O" என்று சொன்னார் என்பதைக் கூறியிருந்தேன் அல்லவா? [ வெளி முழுக்க காற்று இருந்தாலும் வாகனத்தின் tyre-ல் காற்று இருந்தால்தான் வண்டி ஓடும் ; நம்மை சூழ தண்ணீர் இருந்தாலும், mask- ல் தண்ணீர் இல்லாமல் இருந்தால்தான் comfortable - ஆக இருக்கும். ]
அதன்பிறகு வாயை மூடிக்கொண்டு மற்ற photos . Photographer பெண் ,விரல்களை விரித்து சுற்றுவதுபோல் சைகை காட்ட , diver என்னைச் சுற்றிவிட்ட போது , தண்ணீருக்குள்ளே right to left ஆகச் சுழன்றேன்.
நீருக்கடியில் காண்பதை photo அல்லது video எடுக்கும்போது, நாம் பார்த்தது அப்படியே தத்ரூபமாக வராது என்று படித்தேன். ஏனெனில் மனிதனின் கண்ணும் brain-ம் சீக்கிரமாக underwater vision -க்கு adjudt செய்து கொண்டு விடுகின்றனவாம். ஆனால், camera lens-க்கு அது முடியாதே.
ஒரு certificate தந்தார்கள். The person Devaraj, with whom we negotiated payment and other details, told that Scuba diving anywhere will be charged only half with the certificate, because this is a PADI certificate. ( PADI -Professional Association of Diving Instructors ) .Half rate- தான் வசூலிப்பார்களா என்று தெரியவில்லை, ஆனால் concession இருக்கும் என்று தோன்றுகிறது.
My family's version - என் husband , மீன்களையும், கருப்பு மற்றும் பாசி படர்ந்த பாறைகளையும் பார்த்ததாகச் சொன்னார் . இரண்டாவது பெண், மீன்களைப் பார்த்தது, பாறையில் நடந்ததுடன், ஒரு நீளமான செடியை ஞாபகத்துக்குப் பறித்துக் கொண்டு வந்ததாகச் சொன்னாள். என் முதல் பெண் - she did Scuba diving in Andaman , உள்ளே இருக்கும்போது 'serene' ஆக இருக்கும் என்றாள்.
Dear friends, interest இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.
நன்றி
conneted
ReplyDeleteதாய்லாந்து ல போன நியாபகம்.ஆனா உள்ள போய் settle ஆனா பின்ன மீனுக்கு bread கொடுத்தது,பாறை தொட்டு பார்த்து...நிறைய அனுபவங்கள்.
Thank you🌹🌹🌹
Delete