மலைராணியின் மடியில் [5]
Wellington- ல் இருந்தபோது மைமூன் என்னும் உருது அக்கா தொழுக சொல்லிக் கொடுத்தார்கள். நின்று recite பண்ணிவிட்டு , பின் ஒரு முறை rukuh என்னும் குனிந்து, பின் தரையில் தலையை இரண்டு முறை வைத்து நிமிர்வது ( sujudh ), ஒரு ரக்-அத் எனப்படும். கோடு போடாத வெள்ளைப் பேப்பர்களில் தமிழில் அழகாக எழுதி மனப்பாடம் செய்ய சொல்லிக் கொடுத்தார்கள். ( கி. க. - அங்கே இருக்கும்போது பயான்- Bayaan போயிருக்கிறேன். ஆனால் ஒன்றுமே புரியவில்லை. பயான் என்பது இஸ்லாமிய ஆன்மீக உரை. அதன்பின் பயான் போனது ஈரோட்டில்தான்- 45 வருடங்களுக்குப் பின்னர்- சும்மா ஒரு get together -க்காக.) மதரஸா என்னும் அரபி இஸ்லாமிய ஓதுகூடம் சென்றது சில வருடங்கள் மட்டுமே, அதுவும் regular school நேரங்களுக்கு முன்னரோ, பின்னரோ and during holidays excepting during our going to native place . That was in Coonoor.
Sujudh is not for man. எல்லா மனிதர்களும் சமம் என்பது Islamic principle என்று எல்லாருக்கும் தெரியும். அதுபோல ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வணங்கக் கூடாது ( including prophet Mohammed ), காலில் விழுகக் கூடாது என்பதும் உள்ளது - தாத்தா பாட்டி, பெற்றோர், மதகுரு, ஆசிரியர் உட்பட.
முன்னர் குறிப்பிட்டிருந்தது போல, 1973-ல் மறுபடியம் குன்னூரில் உள்ள Harewood Quarters- க்கு குடி மாறினோம். எங்கள் வீடு இருந்தது முதல் line -ல். ( இது மேல் line என்றும் சொல்லப்படும் ). This time we occupied 5th house in the first line - previously 3rd house. எங்கள் தெருவில் ( first line ), 8 வீடுகள் + கடைசியில் மேலும் 2 வீடுகள். கீழ் தெருவில்( இரண்டாவது line ) 6 வீடுகள். இதில் கடைசி வீடு ரெட்டை வீடு எனப்படும். 1st line- ன் இடது புறம் , புல் மேட்டில் ஏறி மேலே சென்றால் ஒரு ஒத்தை வீடு. 2nd line -ன் கீழ்புறம் மறுபடியும் 3 lines . So, total ஆக 5 lines. எல்லா வீடுகளும் south facing. All these houses belong to Revenue Department. 1st line- ல் இருந்து right side படிக்கட்டுகளில் ஏறி மேலே சென்றால் , west facing-ல் தனியாக 3 வரிசை வீடுகள் , those belong to Treasury Department. இவைதான் Harewood எனப்படும் மலைப் பகுதியில் இருக்கும் Government quarters.
இதன் பின்னர் தாசில்தாருக்காக ஒத்தை வீட்டின் மேற்புறம் ஒரு வீடு கட்டப்பட்டது. ( கிளைக் கதை- அதில் வசித்த ஒரு தாசில்தாரின் மனைவி -சுந்தர் மாமி, எனக்கு ரொம்ப friend. அவர்கள் இரட்டை வீட்டில்தான் ஆரம்பத்தில் குடியிருந்தனர். அவர்கள் வீட்டு கொலுவிற்கு என் அம்மா, sister and மற்ற linemates உடன் செல்வோம். சுண்டல் கிடைக்கும் and ladies-க்கு blouse piece. அவர்கள் ரெட்டை வீட்டிலிருந்து புதிதாகக் கட்டப்பட்ட tahsildar house- க்கு போன பின்னர், ஒருமுறை தனியாக மேட்டில் சுற்றிக் கொண்டிருந்தபோது ,என் படிப்பைப் பற்றி அந்த மாமி விசாரித்தார்.அவர்கள் வீட்டில் மூன்றும் பையன்கள். அதில் முதல் பையன் Hari 10 th standard - இல் district -first ஆக வந்தது எனக்கு ஒரு inspiration ஆக அமைந்தது. )
ஆனால் என் தந்தை Tahsildar ஆனபோது நாங்கள் அங்கே shift செய்யவில்லை - சீக்கிரமாக வேறு வீடு மாற்ற வேண்டி வரும் என்பதால். மற்றவர்களும் அவ்வாறுதான் நினைத்திருப்பார்களோ அல்லது வேறு எதனாலோ, அந்த வீடு பின்னர் புதிதாக IAS முடித்து விட்டு குன்னூரில் posting போடப்படும் sub-collectors - க்காக ஒதுக்கப் பட்டது. அதில்தான் M.F.Farooqi, Machchindhra nath, Mohan Varghese Chungath போன்ற sub-collectors ஆரம்ப காலங்களில் வசித்தனர்.
Quarters- ன் சிறுவர் சிறுமியர் நிறையப் பேர் ஒன்றாகவே விளையாடுவோம். Care-of எனப்படும் ஓடிப் பிடிக்கும் விளையாட்டு ,cricket, seven - stones ஆகியவை முதலில் விளையாடிய விளையாட்டுகளுள் அடங்கும். அதில் ஒளிந்து விளையாடுவது ஒரு special . எவ்வாறெனில் மஞ்ச மல்லிகைச் செடி எனப்படும் செடிகளிளாலான அகலமான சுவர் போன்ற ஒரு பெரிய shrubberies பந்தல் இருக்கும். அதில் ஓரிடத்தில் கீழ்ப்புறமாக ஒரு passageway இருக்கும். செடிகளிலால் சூழப்பட்ட மேல் நோக்கிப் போகும் வழி. அதன் உள்ளே நுழைந்து, செடிகளினூடாகவே ஒரு 4, 5 நிமிஷம் குனிந்தவாறே சற்று வேகமாக நடந்தால் அதன் end மேலே இருக்கும் வேறொரு வீட்டின் backyard- ன் மேட்டில் போய் முடியும். அங்கிருந்து 'தொப்'பென்று கீழே குதிக்க வேண்டும். கொஞ்சம் வேகமாகத்தான் நடக்க வேண்டும். ஏனென்றால் நிமிர முடியாது. நிமிர முடியாமல் குனிந்து நடக்கும்போது அது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிந்தால்தானே முதுகு வலிக்காமல் இருக்கும்; நிமிர்ந்தவுடன்தானே happy-யான full breathing கிடைக்கும்.
Comments
Post a Comment