மலைராணியின் மடியில் (4)

மலைராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள்




[ பாகம்-4 ]

                 இவ்வாறு  ஊட்டியில் இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில், மறுபடியும் வெல்லிங்டனுக்கு  வீடு மாறினோம். அதனால், மறுபடியும் school  மாறவேண்டி வந்தது.  ( 2-வது முறையாக).  அது  St Joseph's middle school ஆகும்.  Almost படித்த  schools எல்லாமே  Christian Institutions தான்.  இரண்டரை வருடங்கள் தவிர. அந்த இரண்டரை வருடங்கள்  Lion's Club  -இனால் நடத்தப்பட்ட  school- ல். அந்த  School -இலும்  நிறைய teachers Christians தான்.(  இதில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது. அதைப் பின்னர் விளக்குகிறேன்). 

                                                       


                             

                         அந்த வெலிங்டன்  school- இல் முதன் முதலாக என் தந்தை என்னைக் கொண்டுபோய் விட்டது நினைவுள்ளது. Classes already  நடந்து கொண்டிருந்தன. அப்படிக் கொண்டுபோய் விட்டபோது, ஒரு sister in white robe மலர்ந்த முகத்துடன் அணைத்தவாறு மூன்றாம் வகுப்பறைக்குள் அழைத்துச் சென்றார். அந்த அரவணைப்பின் பாதுகாப்பான உணர்வை நான் இன்னும் நேசிக்கிறேன்

             வெல்லிங்டனில் பஸ் ஸ்டாப்பில் இருந்து ஒரு சின்ன ரோடு மேலே steep  ஆக ஏறும். மேலே ஏற ஏற இலையின் நரம்புகள் பிரிவதைப் போன்று இரு பக்கமும் தெருக்கள் இருக்கும். அதில் எங்கள் வீடு இருந்தது ரோட்டின் left side street . அதே road -ன்  right side straight ஆகப் போனால் எங்கள் school.


                             

போகும் வழியில் ஒரு பெரிய பூமரம் இருந்தது. (Jacaranda)  அதன் வெளிர் ஊதா மலர்கள் தரையில் நிறையக் கிடக்கும். அதை எடுத்து லேசாக ஊதி நெற்றியில் தட்டினால் 'பட்'டென்று வெடிக்கும்.( பட்டாசுப்பூ.)


                                            

              School  -ல்   பூப் பூவாய் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ என்ற பாடலுக்கு dance  ஆடினோம் .   நன்றாகப் படித்ததற்காக ஒரு plastic container with lid ( ஒண்ணுமில்ல,  blue மூடி போட்ட அகலமான வெள்ளை நிற plastic bottle ),  prize கிடைத்தது. 

               Wellington-  இருந்த போது நான் ரொம்ப mischievous. ஒரு ஏழு எட்டு வயது இருக்கும்.  Classmate- ஐ  கிள்ளி வைத்தது,  opposite house girls -உடன் சண்டை போடுவது, தோழியுடன் ஊர் சுற்றுவது, பக்கத்து வீட்டு அக்காவுடன் dance ஆடுவது ( ராதையின் நெஞ்சமே ... ), என்று பலப்பல.  'ஓரெட்டில் விளையாடாத விளையாட்டும்... ... ' என்கிற செய்யுள் நினைவுக்கு வருகிறது.    [ ஒரு கி.க. - என் friend -ன் தம்பி - எனக்கும்  friend தான்- ரங்கராஜன் ஒருமுறை சொன்னான்         '  ஓரெட்டில் விளையாடாத விளையாட்டும், ஈரெட்டில் கல்லாத கல்வியும் , மூவெட்டில் ஆகாத திருமணமும் ....... ஹூம்,நம்மளுக்கெல்லாம் எங்க மூவெட்டில் திருமணம் பண்ணி வைக்கப் போறாங்க ' என்று ].

                எனக்கு ஒரு ஊர்சுற்றி தோழி இருந்தாள்- முஸ்லிம் பெண்,பெயர் தெரியாது.  அவளுடன், வீட்டிலிருந்து ஸ்கூல் எல்லாம் தாண்டி மேலே சென்று கொண்டே இருந்தால், ஒரு பெரிய புல்மேடு வரும். அந்த மேட்டிற்கும், இன்னொரு புல் மேட்டிற்கும் நடுவே  railway track acute angle -ல் வளைந்து வரும். அல்லது மேட்டினைக் குடைந்து  track செய்தார்களா என்று தெரியவில்லை.  புல்மேடு என்றாலே மேட்டிற்குக் கீழே மண்ணும், பாறையும் தானே? மலைதானே? மேட்டின் மேல் நின்று -(சற்றே மிக அருகில்)  பார்க்கும்போதே 'சட்'டென்று ரயில் வந்து விடும். விட்டால் விழுந்து விடுகிற மாதிரி பயமாக இருக்கும்.

                                




       ஊட்டி செல்லும்  main ரோட்டைக் கடந்து கீழே சென்றால் ஆறு ஓடும். சின்ன ஆழமற்ற  stream போல இருக்கும்.   Stream-ன்   water  நல்ல clear-ஆக இருக்கும். அடியில் jet  black- ஆக களிமண் தெரியும். நானும் என தோழியும் அதை  எடுத்துக் கொண்டு வந்து பொம்மை செய்வோம்.

                              




                ஒரு  school mate girl - ன் வீட்டின்  வாசல் கீழ்த் தெருவில் இருக்கும்.  வீட்டிற்குள் சென்று,  உள்ளே இருந்து மேலே ஏறினால் ஒரு அறை இருக்கும். அங்குள்ள கட்டிலின் மேல் ஏறி ஜன்னலைத்  திறந்தால் மேல் street வந்து விடும். கீழே இருக்கும் தெருவுக்கும், மேலே இருக்கும் தெருவுக்கும் ஏணி மாதிரி அந்த வீடு. ஜாலியாக இருக்கும்.

             We shifted to Coonoor again. I remember the last day in Wellington school, whence after the school hours, I walked from school along the railway track with 2 teachers of another school ( Cantonment School ), who were from Coonoor and who were also our family friends, Nachiar mami   (  கி. க- சங்கரம்மா என்று அழைக்கப்படும் -மகன் பெயர் சங்கர்,  இந்த மாமி Wellington -ல் இருந்து வழித்துணையாக வந்ததுபோல் இன்னொரு கட்டத்திலும் துணையாக இருந்திருக்கிறார்கள் . அது என்னவென்று பின்னர் சொல்கிறேன்.) and   இன்னொரு aunty, whose  name I do not know.   நடந்து வரும்போது அந்த  raiway track -ன் கூடவே கீழே பள்ளத்தில் ஆறும் ஓடி வரும்.



             






Comments

  1. Olden but Golden days, just loving it!

    ReplyDelete
  2. நீங்கள் எழுதுவதை படிக்கும் போதெல்லாம் நான் எழுதி வைத்திருக்கிற தாள்கள் நினைவிற்கு வருகிறது...விரைவில் அதை புத்தகமாக வெளியிட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. வெளியிட வாழ்த்துக்கள். மற்றும் எனக்கும் அனுப்பி விடவும்.

      Delete
  3. நினைவுகள் அழகாக கோர்க்கப்பட்டிருக்கிறது.
    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றி

      Delete
  4. Super memories siraj... wovvvvvvvvvv hill station kuteu poitey

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அப்பாவின் ஆங்கிலம்

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]