மலைராணியின் மடியில் (3)

                  மலை ராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள்-  பாகம் 3

                        

                 இன்னும் கொஞ்சம் 70- கள்.

1-ம் வகுப்பில்  கற்றுக் கொண்ட பாடல்  :-

        ( குன்னூர்  school -ல். முன்பு குறிப்பிட்டது போல் 1 மாதம் இந்த  school- ல் படித்த பின் அப்பாவுக்கு  transfer ஆனதால்,  இதன் பின் ஊட்டியில்  வேறு ஸ்கூல் )    

      காசா நாட்டுக் கடைக்குப் போனேன் சின்ன மாமா                                                     காசுக்கு  ரெண்டு குருவி வாங்கினேன் சின்ன மாமா                                         அறுத்து கிறுத்து அடுப்புல போட்டேன் சின்ன மாமா                                       தெறந்து பாத்தேன் பறந்து போச்சு சின்ன மாமா

இதில் காசா நாடு என்பது என்ன என்று தெரியவில்லை.

Gaza strip ஆக இருக்குமோ?  ஏன் இவ்வாறு யோசிக்கிறேன் என்பதற்குக் காரணம் பின் வருமாறு-

நாம் சிறுவயதில் கற்றுக் கொண்ட  காகம் மண்பானையில் கல்போட்டு தண்ணீர் குடித்த கதை, உப்புச் சுமையைக் கரைத்த கழுதைக்கு எஜமானன் பஞ்சுப் பொதியை ஏற்றிய கதை போன்றவையெல்லாம் Aesop -Greak-  கதைகள் தானே? So, அதுபோல இதுவோ என்று எண்ணத் தோன்றுகிறது.மற்றும்  காலம் காலமாகவே culture mix  எனப்படும் எல்லாவிதமான, எல்லாத் துறைகளிலுமான பரிமாற்றங்களும்  இருந்து வருகின்றன என்பது வியப்பாக உள்ளது.

                (கி. க -எங்களுடைய குடும்ப நண்பர் வீட்டில், bucket -ல் தண்ணீர் மொள்ள eversilver jug போல ஒன்று இருக்கும். அது, புத்தகத்தில்,  காக்கா தண்ணீர் குடித்த கதையில் வரும் ,காக்கா கல் போடும் கூஜா போன்ற shape -ல் இருக்கும்.  அதனால் அந்த  jug- ஐ  காக்கா என்றுதான் சொல்வார்கள்.)

                  Now, again to Ooty -  அப்போதெல்லாம்  ஊட்டியில் நிறைய புல் தரைகள்,புல் மேடுகள் இருக்கும். புற்கள் கொழுகொழுவென பசுமையாக இருக்கும். அம்மாவும் நானும்  St Mary's hill  ஏறும்போது குட்டி  water streams புல் தரையினூடே ஓடும்.  காலை வைக்கும்போது  chill என்ற water , காலில் சலசலவென்று கொலுசுபோல் சூழ்ந்து கொள்ளும்.  

               School- க்கு  red கலர் uniform sweater இருந்தது, அதாவது uniform-ல் sweater-ம் உண்டு. ஒருதரம் school-ல் (  பாத்ரூமில் பேய் இருக்கிறது என்று பயந்து கொண்டு ),   school -ன்  உள்ளேயே இருந்த  steps-ல் ( red sweater அணிந்த நிறைய குழந்தைகள் ) கீழிருந்து மேலாக கத்திக் கொண்டு ஓடினோம்.  Teacher- இடம் wooden  அரையடி scale-ஆல் அடி வாங்கினேன்.

Ooty Lake & Boat house:-

                                ஒருமுறை கூட்டமே இல்லாத ,பேச்சு சத்தம் இல்லாத, அதாவது, ஆளரவமற்ற  [-  மனிதக் கூட்டமும்,பேச்சுகளும் இல்லாத என்பதற்கான தமிழ்ச் சொல் -ஆஹா],  வெய்யில் போய்விட்டிருந்த ஒரு மாலை நேரம், ஒரு boat-ல்  2 பேர் row பண்ணிக் கொண்டு போவதை  தூரத்திலிருந்து பார்த்திருக்கிறேன். ஏரியைச் சூழ மரங்கள் அதிகம் இருந்தன. நீர்ப்பரப்பு கனமாக இருந்தது. வியப்பாக இருந்தது. சற்றே பயமாகக் கூட இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

                             முதன்முதலில்  Nescafe Boat house- ல்தான் குடித்தோம். ஒரு அழகிய கப்பில் எங்கப்பா வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்.  கலக்கப்பட்ட coffee-யின் மேலே தூவப்பட்ட  powder  ஜம்மென மிதந்து கொண்டிருந்தது. அதை அருந்தியது ஒரு colourful memory.

               Lake  நினைவுகள் நிறைய. 2019 வரை.  முதலில் சென்றது மேலே குறிப்பிட்டிருந்தபடி  lake- ன் பரப்பினைப் பார்த்து வியந்ததும் பயந்ததும்தான். 10th standard -ல்  school-இலிருந்து  குருசடி  என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றபோது lake-ன் மேல்புற grass-ன் முள் இரும்பு வேலியைச் சுற்றி நடந்து சென்றோம். 2019-  மே மாதம் , went with family including grand son.  He enjoyed rolling in the grass slope alongwith one more kid.  Boating- ம்  போயிருக்கிறோம். எத்தனை முறை போன போதும்  சின்னஞ் சிறுமியாக first- first  பார்த்த ஆளரவமற்ற, ஒளி குறைந்த, குளிர் தழுவிய,தூரத்தில் படகு இருந்த நீர்ப்பரப்பும், புல்வெளியும், சூழ்ந்திருந்த மரங்களும்   -amazing rememberance.

                                              


         St Mary's hillன் சற்றே தாழ்வான பகுதியில் ஒரு எண்ணைக் கடைக்காரர் வீடு இருந்தது. அங்கே அவர்களின் மகனும் நானும் 3 சக்கர சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருப்போம்.  அப்போது ஒருமுறை ரோட்டில் யானை வந்தது. என்னையும்,அவர் மகனையும் யானை மேல் ஏற்றி விட்டனர்.  [எருமை, ஒட்டகம் மற்றும் குதிரை மேலும் சவாரி செய்தது இதற்கப்புறம்தான்]. 

                  கருங்கற்களினால் ஆன படிக்கட்டுகளில் இறங்கி வந்த நினைவு மனதில் இருந்தது. என் தந்தையிடம்,  '' ஏன்த்தா, நாம ஒரு  stone step -ல எறங்கி நடந்து வந்தோமே....... '' என்று ஆரம்பித்த போதே, "stone house"  என்று சொன்னார்.  Assembly Rooms -என்று  cinema theatre. English films-தான் போடுவார்கள். முதலில் Government purpose -க்கு இருந்திருக்கும் போல. ( But,  later I read that it was meant for projecting movies only right from the start.)  உதகையில் இருந்தபோது (1970 முதல் 1972 வரை ),  பார்த்த படங்கள் கணவனே கண்கண்ட தெய்வம், ஆராதனா மற்றும் வியட்நாம் வீடு.

Comments

Popular posts from this blog

அப்பாவின் ஆங்கிலம்

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]