மலைராணியின் மடியில் - 2





மலைராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள் -  பாகம் 2

                           ஊட்டியில்  Bethlehem School- ல் ஒன்றாம் வகுப்பில் மறுபடியும் சேர்க்கப்பட்டேன். ( அதற்கு முன்னர் கொஞ்ச நாட்கள்  Coonoor- டிப்போ ஸ்கூலில் 1- ம் வகுப்பு.)  வீடு இருந்த இடம்  St.Mary's hill  எனப்படும் மலைப் பகுதி. அங்கிருந்து மேடான ரோட்டில் சற்று தொலைவு நடந்தால் school. அழகான atmosphere.  School-ஐ ஒட்டி ஒரு steps இருக்கிறது.  மேலே main gate. Steps  -இலேயே கீழே போனால் ஒரு சின்ன கீழ் gate. Teachers-ஆல் பாராட்டவும் பட்டிருக்கிறேன்;  scale -ஆல் அடியும் வாங்கி இருக்கிறேன். வீடு சற்றுத் தாழ்வான பகுதியிலும்  school- க்குப் போகிற குட்டி ரோடு  (தார்ச்சாலைதான்)  கொஞ்சம் உயரமான பகுதியிலும் இருக்கின்றன. அதனால்,  வீட்டின் பின்புறத்திலிருந்து அந்த குட்டி தார்ச்சாலைக்கு,  ஒரு ஒற்றையடிப்பாதை  புல் மேட்டில் மேலே ஏறும். மழைக்காலத்தில் அது பயங்கரமாக வழுக்கும். தற்போது அங்கே steps கட்டி விட்டார்கள்.


                                      




                     ஊட்டியில்தான் என் தங்கை பிறந்தாள். ஒருநாள் காலையில் எழுந்து பார்த்தபோது கட்டிலில் என் தாயின் அருகே ஒரு குழந்தை படுத்து இருந்தது. இது ஏது? என்று கேட்டபோது தவிட்டுக்கு வாங்கியது என்று சொன்னார்கள்.   ஒருமுறை, எனக்கு உடல் நிலை சரியில்லாத போது,Ooty GH-ல்  (அப்போதெல்லாம்  private hospitals  famous ஆக இல்லை- 1970-71 )   தினமும் ஊசி போட வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.  என் தந்தை தூக்கிக் கொண்டு போகும்போது, வேடிக்கை பார்த்துக்  கொண்டே வந்த நான், hospital vicinity- யைப் பார்த்தவுடன் 'ஓ ' வென்று கத்தியழ  ஆரம்பித்து விட்டேன். பாவம் குழந்தை. ஊசி வலிக்காதா ? படுபாவி டாக்டர், Oral medication, syrup - ஏதாவது கொடுத்திருக்கக் கூடாதா?   சற்றுப் பெரியதானவுடன், வெளியே செல்லும்போது வழியில் இருக்கும் board, poster- ஐ எல்லாம் படித்துக் கொண்டே வருவேன் என்று என் தந்தை கூறினார்.

                  ஸ்கூலில் இருந்து ஒரு monastery- க்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். நான் தவறிப்போய் தனியாக மாட்டிக் கொண்டேன். கூட வந்த  teachers- ஐயும் காணோம்,  girls -ஐயும் காணோம். அது ஒரு கற்பூர மரங்கள் சூழ்ந்த சிறிய காடு போன்ற இடம். வந்த வழியை நோக்கினால், அடர்த்தியாக கற்பூர மரங்கள் இருந்தன (மேல் புறம்). கீழ்புறம் நோக்கினால் கற்பூர மரங்களின் அடர்த்தி குறைவாகவும், அதன் கீழ்புறம் புல்தரை, சின்ன fence-க்கு மறுபுறம்  main road  ஆகியவை  தெரிந்தன. வந்தவழி திரும்பிச் செல்லாமல், கீழே இறங்கி, fence -ஐத் தாண்டி, ரோட்டின் வழி நடந்து, (சுற்று வழி)  வேறுபுறம் மேலேறி வீட்டுக்கு வந்து விட்டேன்.ஸ்கூலிலோ,வீட்டிலோ யாரும் எதுவும் கேட்கவில்லை!  (நானும் சொல்லவில்லை).  

                                   Commercial  road-ல் இருந்த   co-operative super market- ல்  light green, yellow  ஆகிய நிறங்களில் குட்டிக் குட்டி பூக்கள் போட்ட  raincoat  ஒன்றை என் அப்பா வாங்கிக் கொடுத்தார். கொஞ்சம் இப்படித்தான் இருக்கும் அது-    ஆனால் இன்னும் கொஞ்சம் lengthy- யாக இருக்கும்.      

            

                             உதகையில் எனக்குத் தெரிந்த குழந்தைகள்-  ஒத்தைச் சிண்டில் green ribbon கட்டிய, முன்னால் bob வெட்டிய வகுப்புத் தோழி, ஒரு neighbour  boy-இருவர் பெயரும் தெரியாது. பின், சபியா என்னும் பெரிய பெண். (விறகு அடுப்பை அணைத்துவிட்டு, அந்த கங்கில் உருளைக் கிழங்கு சுட்டு சாப்பிடத் தருவார்கள்). அந்தக் குடியிருப்பில் 5, 6 குடும்பங்கள் இருந்தன. அதில் இருவர் கச்சேரியில் பாடுபவர்கள். அவர்கள் மாலை நேரங்களில் பாட்டு ரிஹர்ஸல் செய்வார்கள். அப்போது நான் இரண்டு பாடல்களை அறிந்தேன். கூந்தலிலே நெய் தடவி, குளிர் விழியில் மை தடவி... ... ...& சொந்தம் எப்போதும் தொடர்கதைதான், முடிவே இல்லாதது ... ... ....

                          அப்பாவின் அத்தையும், அவர் கணவரும் தலையாட்டி மந்தை என்ற இடத்தில் வசித்து வந்தார்கள். அவர்கள் வீட்டில் ஒரு உயரமான  wooden cot  இருக்கும்.  குழந்தைகள்  தானாக மேலே ஏற முடியாது. யாராவது  help பண்ணுவார்கள் அல்லது சின்ன stool  மாதிரி ஏதாவது  ஒன்றை use  பண்ணி ஏற வேண்டும்.  அப்படி கட்டிலில் ஏறி  ஒடுங்கி உட்கார்ந்து கொண்டால் குளிருக்கு இதமாக இருக்கும். அந்த வீடு உயரமான இடத்தில் இருந்தது. அருகே புல் பள்ளம் ( புல் மேடு என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இறங்கித்தான் செல்ல வேண்டும்). 30-40 அடி slanting  ஆகக் கீழே போகும். கொஞ்சம் கீழிறங்கி சுற்றுமுற்றும் பார்த்தால், கடலில் பயணம் செய்யும்போது  upper deck -க்குப் போய்ப் பார்த்தால் சுற்றிலும் நீர்ப்பரப்பு மட்டிலுமே தெரிவது போல ,வெறும் பச்சைப் புல்வெளி மட்டுமே தெரியும்.  vast expanse  -என்று சொல்லலாம்.  (That was in 1970-71! - about 47 years ago). [ I think  grasslands like these  in  Ooty exist  only in a few places  like  the Botanical gardens , shooting  மட்டம் எனப்படும் 9 th mile  etc.]

                            இப்படியாக, கீழே இறங்கி வந்தால் ஒரு குட்டிக்கடை இருக்கும். அக்கடையில்  red colour- ல் மீன் shape- ல் இனிப்பான  சின்ன மிட்டாய் கிடைக்கும்.  ஒரு மிட்டாய் ஒரு பைசாதான்.

                                         

                          St Mary's hill-  இலிருந்து காந்தலுக்கச் சென்று,  (walked  for a long distance ), தெரிந்தவர்கள் வீட்டில் ஆட்டுத் தலைக்கறிக் குழம்புடன் சாதம் சாப்பிட்ட  ஞாபகம் இருக்கிறது . அதுதான் first and last time   தலைக்கறி சாப்பிட்டது என்று நினைக்கிறேன்.  குடல்கறி கூட இரு முறைதான்.   அதென்னவோ, ஆட்டுக்கறி, ஈரல், ஆட்டுக்கால்  ( சூப் )  இவற்றினை விரும்பி சாப்பிடுவதைப் போல அவையிரண்டையும் சாப்பிடப் பிடிப்பதில்லை.   Ooty Taluk Office   -இல் இருந்து  வரும்  சாலை Race Course- ஐச் சுற்றி இறங்கும். அப்படி இறங்கி வரும்போது,       -அப்பாவின்  friend & children உடன்,  ரோட்டின் மேடான  ஓரத்தில் நின்று, Horse-race பார்த்திருக்கிறோம். மேலிருந்து பார்ப்பதனால்  race -course  almost full- ஆகத் தெரியும். Horses சாலையின்  just கீழே இருக்கும் track-ல்  ஓடும்போது நல்ல  close- up-ல் தெரியும்.

Comments

Popular posts from this blog

அப்பாவின் ஆங்கிலம்

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]