மலைராணியின் மடியில்
மலைராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள் - பாகம் 1
Queen of Hills or மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் நீலகிரி மலையில்தான் இளமைக்காலம் கழிந்தது. என் தந்தையார் 1958- ல் நீலகிரியில் வருவாய்த் துறையில் ( Revenue Department ) பணிக்குச் சேர்ந்தார். 1963- ல் திருமணமானபின் என் தாயாரும் அழைத்து வரப்பட்டார். அதனால்தான் எங்களுக்கு மலையில் வசிக்க வேண்டி வந்தது. நீலகிரியில் நாங்கள் வசித்த இடங்கள் - உதகை, வெல்லிங்டன் மற்றும் குன்னூர் ஆகும். குந்தா, சேராம்பாடி,எருமாடு ஆகிய இடங்களிலும் இருந்திருக்கிறோம். ஆனால்,சிறு குழந்தையாக இருந்ததால் அந்த நினைவுகள் இல்லை. ஆனால், add பண்ணியிருக்கிற குழந்தைப் பருவ photo எருமாடு அல்லது சேராம்பாடியில் எடுத்தது என்று என் தந்தை சொன்னார்.
ஒவ்வொரு சம்பவங்களையும், நினைவுகளையும் எழுதும்போது கிளைக்கதை எழுதுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. -எனவே, அந்த மாமா பற்றி- அவர் என்னுடைய 3 தாய் மாமான்களில் இரண்டாமவர். என் மீதும், என் தங்கை மீதும் அதீத பாசம் கொண்டவர். எவ்வாறெனில், ஒரு முறை தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்த போது, அவரது trunk பெட்டியைத் திறந்து அதில் இருந்த அவருடைய thick அட்டை கொண்ட, ITI record -ஐ எடுத்து, அந்த அட்டையில் செங்கல் பொடி, சுண்ணாம்பு இவற்றைக் கொண்டு கோலம் வரைந்து விட்டேன். அதற்கு அவரிடம் திட்டு வாங்கிய நினைவே இல்லை. வேறு காரணங்களுக்காக தாத்தாவிடமும், மூன்றாவது மாமாவிடமும் திட்டு வாங்கிய நினைவு இருக்கிறது. ஒரு முறை தாத்தாவின் விறகு எடை போடும் தராசில் நானும் என் தங்கையும் இரு பக்கமும் ஏறி நின்று, தாத்தா பார்த்தவுடன் தலை தெறிக்க வீட்டுக்கு வெளியே ஓடியிருக்கிறோம். இதில் திட்டு வாங்கியது நியாயமற்றது என்று நான் கூறவில்லை. தவறிழைத்தபோதும் திட்டு வாங்கவில்லை என்பதை நினைவு கூர்கிறேன். இன்னும் பல சந்தர்ப்பங்களை நினைவு கூற இயலும். ஆனாலும், அவசியம் இல்லை என்பதால் sample -க்கு ஒன்று.
குன்னூர் ஆரம்ப நினைவுகளில் மற்றொன்று,- 4 , 5 வயது இருக்கும்- தோழி விஜயலட்சுமி உடன் வராண்டாவில் ஜன்னல் மேலிருக்கும் கட்டையில் நின்று கொண்டு, ஒரு காலையும், ஒரு கையையும் விட்டுவிட்டு -circus- சாகசம் பண்ணியது. ( விஜி - விஞ்சி என்றுதான் அழைப்பேன்.) [ ஒரு கி க, அதாவது கிளைக்கதை - என் இரண்டு மகள்களும் சிறு வயதில் இடையில் ஒற்று add பண்ணி pronounce செய்வார்கள்- பெரியவள் வினோத் என்னும் சிறுவனை விந்தோத் என்று சொல்வாள். சின்னவள் Mug- மக் என்பதற்கு- Mung- மங்க் என்று சொன்னாள். என்னது மங்க் -ஆ என்று கேட்டபோது dambaa- டம்பா- (டப்பா) என்றாள்.]
[ The incidents I remember - but the dates and years etc... , I confirmed later after I grew up and also I confirmed with elders ]. Once, while playing with a boy in front of my house, empty paint டின் வைத்து 'ணங்' என மண்டையில் குட்டி விட்டேன். விளிம்பு வட்டமாக வெட்டி விட்டது. தூக்கிக் கொண்டு hospital ஓடினார்கள். என் அம்மா, மாலையில் அப்பா வந்தவுடன் சொல்லுவதாகச் சொன்னதைக் கேட்டு பயந்து அங்கேயே உட்கார்ந்திருந்தேன் ( ரொம்ப வருடங்களுக்குப் பின்னர் 'ஸாரி' கேட்டபோது, 'சேச்சே, பரவாயில்லை, அதெல்லாம் கொழந்தையா இருந்தபோது ...' என்று சொல்லி விட்டான்.)
அங்கே இருந்தபோதுதான் school போக ஆரம்பித்தேன். 1970 June- ல் டிப்போ ஸ்கூல் எனப்படும் school -ல் சேர்ந்தேன். நானும், சேகர் என்னும் என்னுடைய friend-ம் school-க்குப் போவோம். ஒரு நேரம் என்னுடைய அம்மா கொண்டுபோய் விடுவார்கள். மறு நேரம் சேகரம்மா எங்களை அழைத்துக் கொண்டு வருவார்கள். வீட்டிலிருந்து முதலில் மேலே ஏறி, நடந்து,கீழே இறங்கி, படிக்கட்டில் இறங்கி, பின்னரும் படிக்கட்டில் இறங்கி, பின்னர் ஒரு சின்ன பாலத்தைத் தாண்டி மேலே ஏறிப் போக வேண்டும். குன்னூர் என்றாலே மேடும் பள்ளமும்தானே! பாலத்தின் மேல் வரும்போது,கீழே தண்ணீரில் நீந்திய வாத்துகளைப் பார்த்து, school-ல் சொல்லிக் கொடுத்த வாத்துப் பாட்டு பாடிக்கொண்டு வந்தது நினைவிருக்கிறது.
பக்கத்து வீட்டு அண்ணன்கள், அவர்கள் வீட்டுப் பின்பறம் இருந்த சுவற்றில் "அன்பே வா" என அடுப்புக்கரியால் எழுதி வைத்திருந்தார்கள். அதை நான் just read பண்ணியிருந்தேன். அது MGR movie என்பதும், அதனால்தான் எழுதி உள்ளனர் என்பதும் பிந்நாட்களில்தான் புரிந்து கொண்டேன். ஒரு மாதம்தான் அந்த டிப்போ school. அதன்பின் என் தந்தைக்கு ஊட்டிக்கு பணி மாறுதல் வந்து விட்டபடியினால் we had to go to Ooty. I remember travelling in the cabin of a lorry with my mother, while shifting our house-hold things . என் முதல் பயண ஞாபகம் அதுதான். In an eversilver தூக்குபோசி, she carried a dish made with white rava and sugar. . We ate that in Ooty. (I was 5 years & 7 months old).
Beautifully written akka. are you referring to my sis Vi(N) ji? Funny to know your kids do that too😁
ReplyDeleteYes. சாட்சாத் உன் அக்காவேதான். I saw your comment only now. That is why the delay, Rajan. I remember how your mom fondly refers you as 'Rajan'.
Delete