மலை ராணியின் மடியில்

மலை ராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள்.   பாகம்- 14.

                               இவ்விதமாக எந்த  Pasteur Institute-ல் என் தாயாருக்கு  blood test  பண்ணுவதற்காக என் பெற்றோருடன் சென்றோனோ, அதே Pasteur Institute-  க்கு interview க்காக சென்றேன்.


                   Director Dr. Kalyanaraman   என்னுடைய தகப்பனாரின் நண்பர் ஆனதாலும்,நான் local resident  ஆக இருந்ததாலும்,  select ஆகிவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஒரு monsoon காலத்தில்தான் interview.  குளிரும்,லேசான மழையும். ஒரேயொரு postதான்.ஏறக்குறய 25 candidates வந்திருந்தார்கள். Interview அறைக்குள் நுழைந்தபோது, " வாம்மா வா, interview க்கெல்லாம் வந்துட்ட " என்று வரவேற்றார் director.   ஆனாலும், கொஞ்சம் முழித்துக் கொண்டுதான் இருந்தேன். Vaccines, microbes  பற்றி நிறைய கேள்விகள் கேட்டார்கள். பதிலளித்தேன். 2 வருடங்களாவது வேலையில் இருப்பாயா அல்லது கல்யாணம் செய்து கொண்டு போய் விடுவாயா என்று கல்யாணராமன் கேட்டார். (ஆனால், இரண்டரை வருடங்களுக்கும் மேலாக அங்கே பணியிலிருந்தேன்.  திருமணம் ஆன பிறகும் கூட- 4 மாதங்களுக்கும் மேலாக.)

                                 அங்கே  clinical side -ல் தான் posting. Employees & their families-க்கு op பார்க்க வேண்டும். மற்றும் rabies patients,dogbite patients  எல்லாம் வருவார்கள். Rabies patient-ஐப் பார்ப்பது மிகவும்  pathetic ஆன விஷயம். Patient normal ஆகத்தான் இருப்பான். கேட்டால் பதில் சொல்வான். பெயர், வயது, மற்றும் சாதாரணமான  conversation ஆகத்தான் இருக்கும்.மெதுவாக கண்ணைக் காட்டினால்  clinic assistant ஒரு  eversilver  tumbler -ல்  தண்ணீர் கொண்டு வருவார். அதைப் பார்த்தவுடனே patient- க்கு  பயங்கர neck spasm  வந்து விடும். Neck muscle எல்லாம் contract ஆகி,விநோதமான  howling like noise,கொஞ்சம் loud ஆகவே புறப்பட்டு விடும். 'கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள்'  என்று சில patients -இடம் சொன்னால், அவர்களை அறியாமல் violent ஆகி, அவ்வளவு நேரம் pleasant-ஆக  converse பண்ணிக் கொண்டிருந்தவர்கள் சடாரென தண்ணீர் tumbler-ஐத் தட்டி விட்டு விடுவார்கள்.  Hydrophobia  என்பதைக் கண் கூடாகக் காண்பதே   clinching the diagnosis. அதன் பின்னர் நோயாளியை வெளியே அனுப்பிவிட்டு,  attenders-க்கு inform பண்ணுவது மிகவும் சிரமமான காரியம்.

               ''  இனி பிழைப்பது கடினம் " என்று  (25 ஆண்டுகளுக்கு முன்பு -  இப்போது ஏதாவது treatment தருகிறார்களா, ventilator or tracheostomy  ஏதாவது என்று தெரியவில்லை. ஒரு சமயம்  என் colleague  ஒருவர்  Milwaukee Procedure என்று ஒன்று பண்ணுகிறார்கள் என்று சொன்னார்.  Success rate கம்மி என்றும் சொன்னார்.)  எவ்வாறு உறவினர்களிடம் சொல்வது?  "நல்லாத்தானே இருக்காங்க  doctor? " என்று கேட்பார்கள்.

                அவர்களுக்கு விளக்கிவிட்டு,பின் அவர்களை immunisation-  க்கு  advice பண்ண வேண்டும். Post exposure prophylaxis -க்கு  guide செய்வோம். அமைதியாக சொல்வதையெல்லாம் பொறுமையுடன் ஏற்றுக் கொள்வார்கள். சரி, இங்கயே சொல்லீட்டாங்க ,இனி ஆவதைப் பார்க்க வேண்டியதுதான் என்று கிளம்பிவிட, அந்த ஆச்சரியமும் ,கவலையும் தோய்ந்த முகங்கள் விலகிவிட, அந்தக் கவலை நம்மைத் தொற்றிக் கொள்ளும்.

             ஏதாவது ஊசி போடுங்கள் என்று  request செய்தார்களானால் Injection Calmpose 2 cc IM போடுவோம். அது சில சமயம்  fatal  ஆகிவிடும். என் assistant ஒருவர் ,அது ஒரு விதத்தில் better என்று கூறினார். எனக்குத் தெரியவில்லை. Transportation  கஷ்டமாக இருக்காதா?  Anyhow,ok  -அடுத்தது சுகமான  remembrances-ம் நிறைய உண்டு.

               எங்களுக்கு  quarters கொடுக்கப்பட்டிருந்தது. I used to stay only during duty days.  இல்லையென்றால் evening வீட்டிற்குப் போய்விடுவேன். பெரும்பாலும் பஸ்ஸில். சில சமயம் நடந்து. எங்களுக்குத்தான்  Sim's park -க்கு சிறு வயது முதலே நடந்து சென்று வந்த பழக்கம் இருக்கிறதே! நடப்பது நன்றாக இருக்கும். இரண்டு பக்கமும் மரம் செடிகொடிகள், பசுமையான ரோடு, 4  மணிக்கு மேற்பட்ட சுகமான வெயில் . சில சமயம் உடன் ஒரு தோழி வருவார். She would go to Coonoor bus stand, before that I would part in the Upper church road to go to my house, and she  would catch a bus to Manjoor.   Institute -இலிருந்து ரோட்டில் நடந்து ,சுற்றி நடந்து, bedford  வந்து ,  படியிறங்கி, பின்னரும் கொஞ்சம் நடந்து,UPASI  ( United planters association of South India )  அருகில் மீண்டும் படியிறங்குவோம்.  Lower church road, Upper church road  என்று இரண்டு குட்டி ரோடுகள் பிரியும். வழியில் வீடுகளில் பூச்செடிகள் மலர்ந்து சிரிக்கும்; மணம் வீசும்.

                                                   


                 அய்யப்பன் கோவில் தாண்டிச் ( நான் முன்னர் குறிப்பிட்டிருந்த  april மாதம்  மாரியம்மன் பண்டிகைக்கு  வாணவேடிக்கை நடக்கக்கூடிய அதே அய்யப்பன் கோவில்தான்)  சென்றால்  எங்கள் area  வந்துவிடும். சமீபத்தில் சென்று பார்த்தபோது   எங்கள்  area- வில் எந்த மாற்றமும் இல்லை. பழையபடியே இருந்தது . மகிழ்ச்சியடைந்தேன் .  ஏனெனில் அது government place.  இல்லாமல்  இருந்திருந்தால்  actor விவேக் சொன்னதுபோல ( - நம்ம ஆளுங்க  நிலாவையே  plot போட்டு வித்துருவாங்க )  plot போட்டு concrete குப்பையாக்கி இருப்பார்கள்.

                 Employees-ஏ  patients-  ஆக இருப்பதாலும், work load அதிகம் இல்லை என்பதாலும், we used to have a good relationship with patients.  அதில் ஒருவருக்கு polycythemia vera.  He used to undergo  phlebotomy at fixed time intervals.  ஒருநாள்  night duty-யின் போது ஒரு call  வந்தது.Call என்றால் quarters-க்கு வந்து அழைத்துக்கொண்டு செல்வார்கள். அதேபோல் திரும்பவும் பத்திரமாக வீடுவரை கொண்டு வந்து விடுவார்கள். அதில் ஒரு  Nepali watchman பெயர்  Min bahadhur khatri .(என்  sub-ordinate ஒருவர் 'கத்திரி பகதூர்' என்று சொல்வார்.)  அந்த  watchman, male,female doctors அனைவரையும் 'ஸாப். ஸாப்' என்று கூப்பிடுவார்.  வந்தவர்கள்  என்னிடம் முன்னதாகவே,  "அவர் போயிட்டார்;  நீங்க  formality-க்கு வந்து பார்த்துட்டா போதும். DD ( Deputy Director) -கிட்ட  inform பண்ணிக்கலாம்"  என்று அழைத்துச் சென்றனர்.  அவர் மனைவி, குழந்தையைப் பார்த்தபோது பாவமாக இருந்தது.

                                  

                  இன்னொரு  patient -  employee-யின்  மனைவி. கொஞ்சம் psychiatric treatment  எடுக்கும்.   She is a pleasant woman.  Till today she used to call me once in a while.  ( Again  கிளைக்கதை-  when my daughter was pregnant - how she blessed was - ' ஒரு அல்லா இல்லன்னா  மொகமது நபி  வந்து பொறக்கட்டும்'  என்று!!)

                 ஏதாவது  party  என்றால் 'டக்' கென்று  Sim's Park- ல்  lunch  or tea party   என்று முடிவு செய்து விடுவோம்.  ரோட்டை cross  பண்ணினால்   park. அப்போதெல்லாம்  entry fee  இல்லை. யாரும் வாயிலில் இருக்கவே மாட்டார்கள்.  புல்லில் அமர்ந்து  party.   பசுமையான  நினைவுகள்.  பசுமை- இரண்டு பொருள்படும். Original  பசுமை நிறைந்த நினைவுகள்  and   பசுமை சுற்றுப்புறம். 

                                       



           

 

       

Comments

Popular posts from this blog

அப்பாவின் ஆங்கிலம்

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]