பொம்மைகள்
விளையாட்டுச் சாமான்களில் பொம்மைகளுக்கு ஒரு தனி இடம் உண்டு என்றே சொல்ல வேண்டும். எல்லாக் குழந்தைகளுக்கும் பொம்மை பிடிக்கும். நாங்கள் சிறுவயதில் பொம்மை செய்வோம். அப்போதெல்லாம் அதிகமாக பொம்மைகள் கிடைக்காது - அல்லது வாங்க மாட்டோம். கோடை விடுமுறையில் கிராமத்திலுள்ள பாட்டி வீட்டிற்குச் செல்லும்போது தோழியுடன் tailor கடைக்குச் சென்று cut பண்ணிய சின்னச் சின்ன மீதித் துணிகளை சேகரித்து வருவோம் (சரியான வெயிலாக இருக்கும்.) பின்னர் அவற்றை உருண்டையாகச் செய்து தலையும், குச்சிகளைக் கொண்டு கை கால்களையும் செய்வோம். மீதி நீண்ட துணிகளைக் கொண்டு புடவை கட்டிய பொம்மை ஆக்குவோம்.
சமீபத்தில் அந்தத் தோழியை நான் சந்தித்தபோது, நீ என்ன படிச்சிருக்கே என்று கேட்டேன். நான் எங்க ஸ்கூலுக்குப் போனேன் என்று சொன்னாள். Shock! ஓ அப்படியா? லீவில் மட்டும் ஊருக்குப் போனதால் தெரியாமல் போய்விட்டது. தெரிந்திருந்தால் கன்டிப்பாக school போக வேண்டும் என்று சொல்லி இருப்பேன்.
வெல்லிங்டன் ஆற்றில் நல்ல black colour- ல் கிடைக்கும் களிமண்ணைக் கொண்டுவந்து ( இன்னோரு தோழியுடன் ), பொம்மை,சுட்டி எல்லாம் செய்வோம்.
அப்புறம் கடையில் வாங்கிய சின்ன plastic பொம்மை. Frock போட்டது கிடைக்கும். கை காலெல்லாம் அசைக்கலாம். அதற்கு சட்டை, skirt, ஜட்டி எல்லாம் தைத்து, dress மாற்றி துணிகளைத் துவைத்து , காயவைத்து... என்ன இன்பம்!
பக்கத்து வீட்டு மாமியிடம் கட்டை பொம்மை கிடைக்கும்.- அதாவது மரப்பாச்சி பொம்மை. கட்டையால் செதுக்கப்பட்டது. கருப்பாக இருக்கும். கை காலெல்லாம் அசைக்காது.
First pregnancyயின் போது குன்னூர் மார்க்கெட்டில் ( with my sister) ஒரு வெள்ளை rubber பொம்மை. கன்னம் புஸுக் புஸுக் என்று அமுங்கும், ' இரண்டு' படத்தில் அனுஷ்காவுக்கு அமுங்குமே அது போல். ரொம்ப பேரம் பேசினேன். கடைக்காரன் பாவம் தொலையுது என்று நினைத்துக் கொடுத்து விட்டான்.
Soft , fur பொம்மைகள். இவைகளையெல்லாம் சின்ன வயதில் நான் பார்த்த்தே இல்லை. என் முதல் குழந்தை பிறந்தபின் நிறைய fur toys கிடைத்தன. என் அப்பாவின் grey யானை, mammaa bear ...என்று. விளையாடுவது நானும்தான். Again செய்த பொம்மை - என் குழந்தைகளுக்கு சப்பாத்தி மாவினால் பொம்மை செய்து தருவேன். கண்ணுக்கு கடுகு, மூக்குக்கு பருப்பு எல்லாம் வைத்து.
பின்னர், குழந்தைகளுக்காக கொஞ்சம் பெரிய பொம்மைகள்... படுக்க வைத்தால் கண்ணை மூடுவதும், நிற்க வைத்தால் கண்ணைத் திறப்பதும் ஒரே அதிசயமாக இருக்கும் எங்களுக்கு. இன்னொன்று மாமியார் வாங்கிக் கொடுத்த Jane பொம்மை. சென்னையிலிருந்து ஒரு பாடும் பொம்மை- ஹிந்திப் பாட்டு பாடும்.- டக்கென்று ஹிந்திப் பாட்டு பாடாதடா கசுமாலம், தமிழ்ப்பாட்டு பாடு நம்ம செங்கமலம் என்ற சாக்லேட் பட பாடல் நினைவுக்கு வருகிறது.

பூமா பொம்மை - ஒரு life-size doll வாங்க வேண்டும் என்று ஆசை. ஈரோடு tip-top -ல் ஒரு பொம்மை கிடைத்தது. குடோனில் இருந்து தூக்கிக் கொண்டு வந்தார்கள். மூஞ்சி சப்பையாக இருக்கிறதென்று வாங்காமல் வந்துவிட்டோம். பின்னர் அதே பொம்மையைத்தான் வாங்கினோம். அதற்கு Booma என்று பெயர். என் மகளின் உடைகளை அது அணியும். சில சமயம் என்னுடய churidhar டாப்ஸையும். அழுக்குப் போக சோப்பு எல்லாம் போட்டுக் குளிக்க வைத்தபோது தலை முடியெல்லாம் கொட்டிவிட்டது. இப்போது அது என் மாமா பேத்தியிடம் உள்ளது. ஜீன்ஸ், t-shirt எல்லாம் போட்டுக்கொண்டு.
ஒரு pair பொம்மைகள் வாங்கினோம்- gift பண்ணுவதற்காக (Mini, Minion )- ஆனால் கொடுக்கவில்லை.
பின்னர், Saudi யிலிருந்து வாங்கி வந்த nemo, honey bear எல்லாம் soft (stuffed) toysகள்தான்.
இபோது என் பேரனுடன் mini , minion பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வைத்து விளையாடுகிறோம்.
காலங்கள் ஓடுகின்றன. பொம்மைகள் மாறுகின்றன. ஆனால் வாழ்க்கை என்ற வட்டத்தில் விளையாட்டு என்னவோ மாறுவதில்லை.
Nice one , I can re collect my childhood memories when I was reading.
ReplyDeleteThank you
Delete