சில பாடல்களின் தாக்கங்கள்
தலைப்பைப் பார்த்து மலைத்து விட வேண்டாம். இதில் அதிகமாக இடம் பெறுவது தமிழ்த் திரைப்படப் பாட்டுகளின் இனிய ரசனைதான். அத்துடன் வேறுசில பாடல்களும். சின்ன வயதில் பள்ளிப் பாட புத்தகத்தில் இருந்த பாடல், 'பனைமரமே பனைமரமே, ஏன் வளர்ந்தாய் பனைமரமே? ' என்பதாகும். நீலகிரியில் பனை மரங்கள் பார்த்ததில்லை. பொள்ளாச்சிக்குப் பயணம் செய்கின்ற போது, வழியில் தூரத்தில் தென்படும் பனை மரங்களைப் பார்த்ததும் பாடுகின்ற பாடல் இது. இன்றும் கூட பனைமரமும், அதன் உயரமும், அதன் உச்சியில் அமைந்திருக்கும் இலைகளின் shape - ம், அந்தக் கூடியிருக்கும் கிளை மற்றும் இலைகளுடனான நீண்ட மரத்தின் shape- ம், குட்டிப் பனைமரத்தின் சின்ன வடிவமும் அழகாகத் தோன்றுகின்றன. 'செந்தூரப் பூவே, செந்தூரப் பூவே' - 8th standard படித்துக் கொண்டிருந்த சமயத்தில் குடும்பத்தினருடன் thearte - ல் சென்று பார்த்த (பதினாறு வயதினிலே) படத்தின் பாடல் இது. Opening music அப்படியே அலை அலையாகத் தவழ்ந்து வந்து சில புல்லாங்குழல் bits ...