நான் அறிந்த சாதியம்

சாதி அல்லது ஜாதி என்பதை நான் உணர்ந்ததில்லை. அதாவது, இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்ததனால் அடுக்கடுக்காக அமைந்துள்ள சாதிக் கட்டமைப்பு முறை, சாதிப் பாகுபாடு ஆகியனவற்றை நான் உணர்ந்ததில்லை. இந்திய இஸ்லாமியரிடையேயும் சில sect தங்களைக் கொஞ்சம் உயர்வானவர்களாகக் கருதிக் கொண்டாலும் அது harmless. எங்களுக்குத்தான் ஈமான் என்னும் இறை விஸ்வாசம் அதிகம் என்று சொல்லிக் கொள்வார்கள். மற்றபடி தலையில் பிறந்தது, இடுப்பில் பிறந்தது என்ற கதையெல்லாம் இல்லை. இறைவனிடம் எங்களுக்குத்தான் நெருக்கம் அதிகம் என்று கூட சொல்ல முடியாது. ஏனெனில் இஸ்லாம் மதம் எல்லா மனிதரும் சமம் என்ற அடிப்படையில்தான் கட்டமைக்கப் பட்டுள்ளது. இப்படி நான் compare பண்ணுவது சாதிப் பாகுபாடு அல்லது சாதிக் கொடுமை என்ற ஒற்றைப் பொருளுக்காக மட்டுமே தவிர வேறு எதற்கும் அல்ல. மற்றபடி, பெண்ணடிமைத்தனம் முதற்கொண்டு ஏகப்பட்ட ஓட்டைகள் இஸ்லாமிய மதத்தி...