மலைராணியின் மடியில் - 2
மலைராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள் - பாகம் 2 ஊட்டியில் Bethlehem School- ல் ஒன்றாம் வகுப்பில் மறுபடியும் சேர்க்கப்பட்டேன். ( அதற்கு முன்னர் கொஞ்ச நாட்கள் Coonoor- டிப்போ ஸ்கூலில் 1- ம் வகுப்பு.) வீடு இருந்த இடம் St.Mary's hill எனப்படும் மலைப் பகுதி. அங்கிருந்து மேடான ரோட்டில் சற்று தொலைவு நடந்தால் school. அழகான atmosphere. School-ஐ ஒட்டி ஒரு steps இருக்கிறது. மேலே main gate. Steps -இலேயே கீழே போனால் ஒரு சின்ன கீழ் gate. Teachers-ஆல் பாராட்டவும் பட்டிருக்கிறேன்; scale -ஆல் அடியும் வாங்கி இருக்கிறேன். வீடு சற்றுத் தாழ்வான பகுதியிலும் school- க்குப் போகிற குட்டி ரோடு (தார்ச்சாலைதான்) கொஞ்சம் உயரமான பகுதியிலும் இருக்கின்றன. அதனால், வீட்டின் பின்புறத்திலிருந்து அந்த குட்டி தார்ச்சாலைக்கு, ஒரு ஒற்றையடிப்பாதை புல் மேட்டில் மேலே ஏறும். மழைக்காலத்தில் அது பயங்கரமாக வழுக்கும். தற்போது அங்கே steps கட்ட...