ஆளியார் ( ஆழியார் ) சுற்றுலா
என் முதல் பெண்ணுக்கு நிச்சயதார்த்தத்திற்கான நாள் முடிவு செய்யப்பட்டபோது என் இளைய பெண் "அக்காகூட இனிமேல் டூர் போக முடியாதே! எங்காவது போக வேண்டுமே" என்று வருத்தப்பட்டாள். (ஆனால் திருமணத்திற்குப் பின்னரும் பன்னெர்கட்டா நேஷனல் பார்க், safari, பவானி சாகர், பண்டிப்பூர், flower show, நீலகிரி என்று போய் வந்தது வேறு விஷயம்! ) எனவே, ஒரு சின்ன டூர் போகலாம் என்று முடிவு செய்தோம். எங்கள் உறவினர்கள் (ஒன்று விட்ட காலாமா -சித்தி குடும்பம்) ஆழியாறில் வசிக்கின்றனர். மேலும் அங்கே guest house-ல் room book பண்ணித் தருவதாகக் கூறியிருந்தனர். ஆகையால் நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த நாள் ஆளியாறு செல்வதென முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அடுத்தநாள் பிற்பகலில் ஆளியாறை அடைந்தோம். உறவினர்களை சந்தித்துவிட்டுப் பின்னர் guest house-ஐ அடைந்தபோது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஏனெனில் அது ஸ்ரீதரின் "காதலிக்க நேரமில்லை" திரைப்படத்தில் T.S. பாலையாவின் வீடாகக் காட்டப்படும் building. என் உறவினர் உற்சாகமாகி, இதுதான் ரவிச்சந்திரன் 'tent' போட்ட இடம் என்றெல்லாம் காட்டினார். விஸ்வநாதன் வேலை வேணும் என்ற பாட்டில் heroines இருவரும் பக்கெட்டில் தண்ணீர் கொட்டும் பால்கனிக்கு நேர் மேலே இருந்த பால்கனியோடு சேர்ந்த room எங்களுக்கு book செய்யப்பட்டிருந்தது. ஆகவே, சினிமாக்கதை, பழையகதை, புதிய சூழ்நிலை அனைத்தையும் enjoy பண்ணினோம்.உறவினருடன் dam மேல்பகுதியில்அனைவரும் நடந்து,அளவளாவி, park,reservoir,boat எல்லாம் பார்த்து... ... ... இருட்டியபின்னர் room திரும்பினோம்.
ஆளியாறு reservoir (நீர்த்தேக்கம்)- foot hills of வால்பாறையில் உள்ளது. (Western Ghats).இதன் average depth 60 ftஆகும். Maximum depth120 ft .இங்கிருந்து புறப்படும் ஆளியாறு, அம்பராம்பாளையம் வழியாக கேரளத்திற்குச் செல்கிறது. (Ambarampalayam river gets Aliyaar and Topslip hills water.)
Guest house-ன் manager? care-taker? -ஜன்னலையெல்லாம் சாற்றி வைத்துக் கொள்ளுங்கள். குரங்குகள் வரும் என்று கூறினார். சிறுத்தைகளும் காட்டில் உண்டு.அணையின் உட்புறம் இருந்த guest house ஆதலால், அனைவருக்கும் அனுமதி இல்லை. எனவே சற்றே தனிமையாக இருந்தது கட்டிடம். முதல்நாள் engagement -ன் போது எடுத்த photos- ஐ photographer mail பண்ணி இருந்தார். அவற்றையெல்லாம் laptop-ல் பார்த்து,எவற்றையெல்லாம் ஆல்பத்தில் போடலாம் என்று select பண்ணினோம். அது ஒரு சுவையான அனுபவம். முதல் நாள் கூட்டமாக function . அடுத்தநாள் தனியான இடத்தில் அதன் photos!
ரூமில் ஒரு கட்டில்தான் இருந்தது. குழந்தைகள் இருவரையும் கட்டிலில் படுக்கச் சொன்னோம்.பின் நீளமான ஒரு sofaவில் ( 3 seater) படுத்து,குட்டியான இன்னொரு sofaவில் காலைவைத்து என் husband படுத்துக்கொள்ள, ஒரு quiltஓ என்னவோ போட்டுத் தரையில் படுத்துக் கொண்டேன் நான். (யாராவது bathroom போகும்போது பாத்து இறங்கிப் போங்க, இருட்டில என்னை மிதிச்சிடாதீங்க என்று சொல்லிவிட்டு)
இரவு வெளியிலிருந்து ஏதோ பறவைகளின் சத்தம்; அணையின் (நீரின்?) காற்றின்? மெல்லிய வித்தியாசமான ஓசை; வண்டுகள், பூச்சிகளின் அதிகம் ஆர்ப்பாட்டமில்லாத ரீங்காரம். நால்வரும் நிம்மதியாகத் தூங்கினோம்.
மறுநாள் காலை. மறுபடியும் சுற்றுப்புறங்களை இரசித்துவிட்டு, மேலே வால்பாறை ரோட்டில் காரை ஓட்டினோம்.நவமலை வரை சென்றோம். ஒரு கடையில் வடை சாப்பிட்டு, டீ குடித்துவிட்டு -என் பெண்கள் பலூன், எலந்தை வடை வேறு வாங்கினர். மின்பாறை முகாம் அருகே, காடம்பாறை மின் உற்பத்தித் திட்டம் பற்றி கொஞ்ச நேரம் discuss பண்ணினோம்.
காடம்பாறை நீர் மின் நிலையம் ஒரு தனித்துவமான நீர் மின் உற்பத்தி நிலையம் ஆகும் ( நீரேற்று மின் நிலையம் - Pumped Storage Hydroelectric Power Plant ). பகலில் காடம்பாறை dam -இலிருந்து சுமார் 2 km உயரத்திலிருந்து விழும் நீர் மூலமாக, turbine-கள் சுழன்று மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். விழும் நீர் சேகரிக்கப்படும் நீர்நிலை Upper Aliyar dam ஆகும். இவ்வாறு சேகரிக்கப்படும் நீரானது , இரவில் Upper Aliyar dam -ல் இருந்து மேல் நோக்கி காடம்பாறை dam-க்கு pump செய்யப்படும். அதாவது, பகலில் மேலிருந்து gravitational force -இனால் கீழே விழும் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது ; பின்னர் அதே நீர் electrical energy- இனால் திரும்பவும் மேலே ஏற்றப்படுகிறது, மறுபடியும் கீழே விழுந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய! (Knowledge courtesy - husband) திரும்பி வந்து ஆளியாற்றுக்குச் சென்றோம். எங்கள் உறவினரின் வீட்டிற்குப் பின்னால் கொஞ்ச தூரத்தில்தான் ஆறு. ஆற்றில் உறவினருடன் சென்று இறங்கினோம். மதியம் அவர்கள் வீட்டில் மீனுடன் சாப்பாடு. வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தபோது, நெளி நெளியான அலைகளுடன் வெய்யிலில் மின்னியவாறு நடை போட்டுக்கொண்டிருந்தது நதி!
பின்னர், சற்றே இளைப்பாறிவிட்டுக் கிளம்பினோம். வழியில் Monkey falls க்குச் சென்றோம். முதன்முதலாக Monkey falls -க்கு,என் பெற்றோருடனும், சகோதரியுடன் வந்தபோது, என் பெரிய பெண் சிறு குழந்தை. அதை என் அம்மா வழுக்கியும் வழுக்காத பாறை நீரோட்டத்தில் குளிக்க வைத்ததை நினைவு கூர்ந்தோம். We played in the falls and the surroundings for sometime. அதன்பின், அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தோம்.முற்றும்.
.
Such a beautiful write up.
ReplyDeleteI love reading such writings.
As I am very much used to that area ,I could visualize the real scene.
And the photos attached is the highlight.
Keep writing.
Thank you❤🌹😊
DeleteThank you❤🌹😊
Deleteஈரோடு ஈன்றுறெடுத்த கவிஞர்.... தாராபுரம் தாராளமாக கவித்துவம் மற்றும் ஓர் இலக்கிய சிறுகதை படித்தது போல் இருந்தது. குழந்தைகள் வரவில்லையென்றால் ஆக்ராவில் ஷாஜஹான் மும்தாஜின் நினைவாக தாஜ்மஹால் கட்டியதுபோல் ஆளியாறில் தேன் நிலவில் அத்தானுக்காக ஓர் ஈஃபில் டவரே கட்டியிருப்பீர்கள். வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன்.
ReplyDeleteமிக்க நன்றி🙏💕🙏💕. நெகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDelete