Posts

Showing posts from September, 2025

மழை விட்டும் தூவானம் விடவில்லை

Image
  மழை விட்டும் தூவானம் ... ...       மழை விட்டும் தூவானம் {தூறல்} விடவில்லை என்பது பழமொழி. (இதை  வைத்து வருகின்ற தமிழ்த் திரைப்படப் பாடல்கள்  - 'தூவானம் இது தூவானம் இது தூவானம்.. ...' - 'மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் .. ..... ' )        அதுபோல் , ' மலைராணியின் மடியில் ' தொடர் முடித்து epilogue எழுதிய பின்னரும் இன்னும் கொஞ்சம் எழுதத் தோன்றுகிறது.     12th standard  படித்த போது evening school  விட்ட பின்னர் தோழி ராதாவுடன் பேசியவாறே,  ( அதிலும் குறிப்பாக discuss பண்ணுவது' குமுதம்' வார இதழாகத்தான் இருக்கும் ) வீடு திரும்பி வருவது ஒரு pleasant memory.  School-இலிருந்து மேல் வழி, கீழ் வழி என்று இரண்டு வழிகள். இரண்டுமே பூட்டுகளை உடைய gate- களைக் கொண்டவை.  இரண்டு வழிகளும் சற்றே இடைவெளி விட்டு விட்டு concrete படிக்கட்டுகளால் அமைந்தவைதான். அந்த இடைவெளிகள் குறுக்காக அமைந்த தெருக்களும், mount ரோடும்தான். Mount road குன்னூர் bus stand பக்கத்திலிருந்து ஆரம்பித்து Sim's park வரை செல்லும். ...