பள்ளிப் பருவ நண்பர்கள்

மனிதர்கள் , இந்தியர்கள், டாக்டர்கள், எஞ்சினியர்கள் இன்ன பிற இந்த வகைக் குறிப்பிடுதல்கள் எவ்வாறு gender specific இல்லையோ அது போல்தான் நண்பர்கள் என்பதும் gender specific இல்லை. என்னுடைய பதின்ம வயது பள்ளித் தோழி ' ஒரு புள்ளியில் ' புத்தகத்தைப் படித்து விட்டு தன்னைப் பற்றி எழுதவில்லை என்று குறைபட்ட போது, ' மூன்றாவது புத்தகத்தில் உங்களைப் பற்றியெல்லாம் வரும்' என்று கூறினேன். ஆதலால் இந்த post- ல், விடுபட்ட என்னுடைய நண்பர்களுடன் என் வழிப்பயணத்தை ( journey ) விளம்புகிறேன். முதல் முதலில் நான் தோழியாக உணர்ந்தது சபியா என்னும் பெயர் கொண்ட அக்காதான். அப்போது எனக்கு ஆறேழு வயது. அக்கா என்றால் ஏறக்குறைய பத்து வயது பெரிய பெண். அந்த அக்காவிற்கு ஒரு லவ்வர் வேறு இருந்தான். ஒருதரம் அந்தப் பையனை சபியா எனக்கு அறிமுகப் படுத்திய போது, நான் வெட்கப்பட்டு அந்தப் பெண்ணின் அருகில் பதுங்கி நின்றேன். மற்றும் ஜகதா என்னும் சின்னப் பெண், ...