Posts

Showing posts from April, 2019

பொம்மைகள்

Image
                                                                      விளையாட்டுச் சாமான்களில் பொம்மைகளுக்கு ஒரு தனி இடம் உண்டு என்றே சொல்ல வேண்டும். எல்லாக் குழந்தைகளுக்கும் பொம்மை பிடிக்கும். நாங்கள் சிறுவயதில் பொம்மை செய்வோம். அப்போதெல்லாம் அதிகமாக பொம்மைகள் கிடைக்காது - அல்லது வாங்க மாட்டோம். கோடை  விடுமுறையில் கிராமத்திலுள்ள பாட்டி வீட்டிற்குச் செல்லும்போது தோழியுடன்   tailor கடைக்குச் சென்று cut பண்ணிய சின்னச் சின்ன மீதித் துணிகளை சேகரித்து வருவோம் (சரியான வெயிலாக இருக்கும்.) பின்னர் அவற்றை உருண்டையாகச் செய்து தலையும், குச்சிகளைக் கொண்டு கை கால்களையும் செய்வோம். மீதி நீண்ட துணிகளைக் கொண்டு புடவை கட்டிய பொம்மை ஆக்குவோம். சமீபத்தில் அந்தத் தோழியை நான் சந்தித்தபோது, நீ என்ன படிச்சிருக்கே என்று கேட்டேன். நான் எங்க ஸ்கூலுக்குப் போனேன் என்று சொன்னாள். Shock!  ஓ அப்படியா? லீவில் மட்டும் ஊருக்க...