2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

Roja nagar association மூலமாக new year celebration நடத்தப்பட்டது. .அதையொட்டி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப் பட்டன. வீட்டின் எதிராக இருந்த park site- ல் இல்லாமல் சற்றுத் தள்ளி இருக்கும் மற்றொரு park site - ல் ஓட்டப் பந்தயம், சாக்கு ரேஸ் உட்பட . என் குழந்தைகளும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டார்கள். Dec 31st இரவு 12 மணிக்கு, சாந்தி வேலுமணி அவர்கள் வீட்டில் கேக் வெட்டப் பட்டது. மற்றொரு முறை கோலப் போட்டிக்கு judge ஆக இருக்க வைத்தார்கள். கோலப் போட்டிக்கு நான் judge ஆ? இந்த இடத்தில் ஒரு பழமொழி நினைவுக்கு வரும்.அது அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி .இது நிறையப் பேர் அறிந்ததே. ஆனால் இது தவறான கருத்து. ஏனெனில், இஸ்லாமியர்களின் வருட calendar lunar calendar தான். அதாவது சந்திர நாட்காட்டி. நிலவு உதிப்பதை வைத்துத்தான் புதிய மாதம் கணக்கிடப்படும். ...